Friday, May 5, 2023

41.வா வா வா சென்று காண்போம்(யார் யார் யார் அவள் யாரோ)

 

வா வா வா நிஜம் காண்போம்
நாம் யார் யார் எனக் காண்போம்
(2)
உலுக்குள்ளே சிறையாக 
இந்தப் பாரே மெய்யாக 
ஆசைகளில்-நாம் பழியாக ..
இருந்துவிட்டோமே ..
(Music)
சத்தை உடல் சுகம் தந்திடுமோ 
உன்னுடன் மேனி வந்திடுமோ
சொத்தை உடல் சுகம் தந்திடுமோ 
உன்னுடன் மேனி வந்திடுமோ 
உலகில் அலைந்த மனதாலே உண்மை காணுதல் ஆகிடுமோ
உலகில் அலைந்த மனதாலே உன்னைக் காணுதல் ஆகிடுமோ

வா வா வா நிஜம் காண்போம்
நாம் யார் யார் எனக் காண்போம்
(Music)
கண்கள் இருந்தும் குருடானோம் பாழும் கிணற்றில் விழலானோம் (2)
உலகில் மயங்கும் பொருளானோம் அறிவும் மழுங்கி இருளானோம் (2)
வா வா வா நிஜம் காண்போம்
நாம் யார் யார் எனக் காண்போம்
(Music)
சஞ்சிதம் கொண்டாய் தினம் கொண்டாய்
அதனால் உலகில் உழல்கின்றாய்
சஞ்சிதம் ப்ராரப்..தம்-கொண்டாய்
அதனால் உலகில் உழல்கின்றாய்
விரைவில் ஆகாமியம் கொள்வாய் 
அதனால் சுழலில் அமிழ்ந்திடுவாய் 
விரைவில் ஆகாமியம் கொள்வாய் 
அதனால் சுழலில் அமிழ்ந்திடுவாய் 
வா வா வா நிஜம் காண்போம்
நாம் யார் யார் எனக் காண்போம்
உலுக்குள்ளே சிறையாக 
இந்தப் பாரே மெய்யாக 
ஆசைகளில்-நாம் பழியாக ..
இருந்துவிட்டோமே ..
வா வா வா நிஜம் காண்போம்..
ஆஹாஹாஹாஹா..ஹா ஆஹாஹாஹாஹா..ஹா
 .ஓஹோஹோ..ஹோஹோ ஹோ.. .ஓஹோஹோ..ஹோஹோ ஹோ



Wednesday, April 5, 2023

*** பதஞ்சலி யோக சூத்திரப் பாடல்கள் ***

 1. சமாதி பாதம்

1.1. ஏதோ என்று அலையும் மனது (அதோ அந்த பறவை போல) RECORDED

1.2. எண்ணங்களிலே இல்லை (செல்லக் கிளியே மெல்லப் பேசு) RECORDED

1.3. உலகத்தினுள்ளே(சின்னப் பயலே) RECORDED

1.4. அடடா மனதில் வரும் ஆசைகொண்டே (அழகன் முருகனிடம்) RECORDED

1.5. எண்ணங்களின் கடலாகும் மனது(எண்ணிரண்டு பதினாறு வயது) RECORDED

1.6. சாதகரே சாதகரே (கோபியரே கோபியரே) RECORDED

1.7. சாதகரே தெளிந்த அறிவு (உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்) RECORDED

1.8. உண்மை அறிவுதானா (நேத்துப் பரிச்ச ரோஜா) RECORDED

1.9. அர்த்தங்களில்லா வெற்றுப் பேச்சு(செல்லக்கிளியே மெல்லப்பேசு) RECORDED

1.10. சத்தம் அடங்கும் உறக்கத்திலும்(எண்ணப் பறவை சிறகடித்து)  RECORDED

1.11. மனதில் வரும் (இரவு வரும் பகலும் வரும்)

1.12.  இதுதான் யோகமா(இதுதான் உலகமா) 

1.13. புரிந்திடவே வேண்டும்(இசைத் தமிழ் நீ செய்த)

1.14. ஸ்வாசத்தை நீ(தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்) RECORDED

1.15.கண்ணால்-காதால்(புத்தன் ஏசு காந்தி பிறந்தது)  RECORDED

1.16. நீ வேறு அல்ல (காவேரி ஓரம்)

1.17. தூய்மையான அறிவு(அமைதியான நதியினிலே) 

1.18. உலகை மறக்கணும் மெதுவாக (உலகம் பிறந்தது எனக்காக)  RECORDED

1.19. சாதனை சாவில்(ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்)  RECORDED

1.20 சாதனை புரிவோரே(ஆசையே அலைபோலே) 

1.22.நோக்கப் பழம் தித்திக்குமா (கால மகள் கைகொடுப்பாள்) 

1.23 காலமின்றி (காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே) 

1.24. காலம் தனை(காலங்களில் அவள் வசந்தம்)   RECORDED

1.25.அனைத்தும் அறிந்த உணர்வே (நினைக்கத் தெரிந்த மனமே)  RECORDED

1.26. அந்த இறைவன் ( செல்லக்கிளியே )   RECORDED

1.27. ஓம் என்பதே ( செல்லக்கிளியே )   RECORDED

1.27 ஓம் ஓம் என நாம் கூறுவோம் (பூ மாலையில்) ** RECORDED

1.28. உரைப்போம் ஓம் ஓம் ஓம் (தரை மேல் பிறக்க வைத்தான்)**   RECORDED

1.29. ஓம் காரப் ப்ரணவம் (திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்)** 

1.30. துள்ளும் மனதின் சீர்குலைவு (துள்ளித் திரிந்த பெண் ஒன்று)**   RECORDED

1.31.மனதில் அமைதி குறைகின்றது (மெழுகு வர்த்தி எரிகின்றது)**  RECORDED

1.32. ஒன்றே ஒன்று-கொண்டு(ஒன்றே குலம் என்று வாழுவோம்) 

1.32. ஆட்டமில்லா ஓர் மனதில் (ஆட்டுவித்தால் யாரொருவர்)** 

1.33. மனதில் பெரும் (இரவு வரும் பகலும் வரும் ) ** 

1.34. மூச்சுப் பயிற்சியில் நின்று(கேள்வி பிறந்தது அன்று) ** 

1.35. நிலைப்பதனை(நினைப்பதெல்லாம்) 

1.36. உள்ளதே ஒரு-ஜோதி (சொல்லடி அபிராமி)

1.37. ஆசையினாலே மனம் (ஆசையினாலே மனம்)** 

1.38. எண்ணம் வந்துனைத் தாக்கும் (உள்ளம் என்பது ஆமை** 

1.39. இன்பம் விரும்பும்(எண்ணப் பறவை சிறகடித்து)** 

1.40. மனதை அடக்கணும் (உலகம் பிறந்தது எனக்காக)**  RECORDED

1.41. இரவும் பகலும் தினமே(அமுதைப் பொழியும் நிலவே)** 

1.42. அந்த பெயர் வார்த்தை (அந்த சிவகாமி மகனிடம்)** 

1.43.நிர்விதர்க்கம் என்பதண்ணே(அந்தரங்கம் நானறிவேன்)** 

1.44 to 46. நிர்விதர்க்கம் (நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி )** 

1.47. நீ நன்கு கொண்ட (என் அன்னை செய்த பாவம்)

1.48 to 1.51 நல்லது ரிதம்பரமே (அந்தரங்கம் நானறிவேன் )**  RECORDED

2. சாதன பாதம்

2.1. யாக பூஜைகள் எதற்கு (காதல் ராஜ்ஜியம் எனது) RECORDED

2.2.அன்புள்ள சாதகரே( அன்புள்ள மான் விழியே ) RECORDED

2.3.மானிடனே-கொள்(ஆண்டவனே உன் பாதங்களை)

2.4.அத்தனையும் நானறிவேன் (அந்தரங்கம் நானறிவேன்)** 

2.5.பொய்யெது மெய்யெது (மௌனமே பார்வையால்) RECORDED

2.6. யாவையும் அறிவேன்(ஆலய மணியின் ஓசையை) RECORDED

2.7.வேளைக்கொண்ணு தேடி-மனம் (ஆளுக்கொரு தேதி வச்சு)

2.8. எதற்கோ நீ ஆவல்-கொண்டு(எதற்கும் ஒரு காலம் உண்டு)

2.9.1. மரணம்-போக்குது உயிரம்மா(அண்ணன் காட்டிய வழியம்மா)

2.9.2.நிற்பதில்லையே சாவின் கூத்து (செல்லக்கிளியே மெல்லப் பேசு) RECORDED

2.9.3.வந்திடுமே பயம் வந்திடுமே(கண்படுமே பிறர் கண்படுமே)

2.10. கிள்ளணுமே நீ கிள்ளணுமே(கண்படுமே பிறர் கண்படுமே)

2.11. ஒரே ஒரு மார்க்கம்(இதோ எந்தன் தெய்வம்) ** RECORDED



  ** யோகத்தில் தாகம் (பாடல்கள்)







Wednesday, April 19, 2017

2.11. ஒரே ஒரு மார்க்கம்(இதோ எந்தன் தெய்வம்) **



ஒரே-ஒரு மார்க்கம் உண்டாமே-அதில் தடை-தரும் தாக்கங்களும் துண்டாமே
(2)
யோகத்தடைகள் விலக்க-த்யானம் ஒன்றுதானடா
அதில் கிடைக்கும்-விடையில் உனக்குப்-பிறகு கேள்வி ஏதடா
யோகத்தடைகள் விலக்க-த்யானம் ஒன்றுதானடா
அதில் கிடைக்கும்-விடையில் உனக்குப்-பிறகு வேள்வி ஏனடா
ஒரே-ஒரு மார்க்கம் உண்டாமே-அதில் தடை-தரும் தாக்கங்களும் துண்டாமே
(MUSIC)
அதே சாதனையில் வேதனையின் தடுப்பாம்
அதே சாதனையில் இரும்-உயிரின் துடிப்பாம்
(2)
அடே வேடமென வேறெதுவும் நடிப்பாம்
தரும் த்யானமதே இறைவடிவில் பிடிப்பாம்
(2)
வேஷம்-கொண்டு வெளியுலகில் ஆட்டம் ஏனடா
உன் இதயம் என்னும் கோயிலிலே தெய்வம் பாரடா
ஒரே-ஒரு மார்க்கம் உண்டாமே-அதில் தடை-தரும் தாக்கங்களும் துண்டாமே
(MUSIC)
இறை நாட்டத்தினில் நீ புரியும் த்யானம் 
அதே நலம்-கொடுக்கும் என்று-சொல்லும் வேதம்
அதே உபநிடதம் எடுத்துரைக்கும் போதம்
அது கொடுத்திடுமே இறைவனுடன் யோகம்
அதை உரைத்திடுமாம் பதஞ்சலியின் யோகம்
ஒரே-ஒரு மார்க்கம் உண்டாமே-அதில் தடை-தரும் தாக்கங்களும் துண்டாமே
(MUSIC)
தன் உள்ளுக்குள்ளே செல்பவனே மேதை
வெளியில் வேஷத்துடன் திரிபவனோ பேதை
அவன் மலரடியை நினைப்பதுவே த்யானம்
அது கடினமென்றால் மறதியொன்றே போதும்
உந்தன் வெளியுலக  மறதியொன்றே போதும்
வேஷம்-கொண்ட கோஷம்-தன்னில் அறிவு ஏதடா
வெறும் மௌனம்-கொண்ட த்யானம் ஒன்றே பெய்யும் தேனடா
ஒரே-ஒரு மார்க்கம் உண்டாமே-அதில் தடை-தரும் தாக்கங்களும் துண்டாமே

வா ..வா..வா….. வா ..வா..வா….


----------------------------


Tuesday, April 18, 2017

2.10. கிள்ளணுமே நீ கிள்ளணுமே(கண்படுமே பிறர் கண்படுமே)




10. தே ப்ரதிப்ரஸவ ஹேயா: சூட்சுமா: ||

முளையிலேயே களை எடு
* சாதனை பாதையில் தடைகளாக வரும் ஐந்து  சோதனைகளாவன :
அறியாமை, உடல் பற்று (மரண பயம் ), ஆசை, ஆணவம், வெறுப்பு
மேற்கூறிய ஐந்து வகையான துன்பங்களையும் அது தோன்றும் காரணத்தை அறிந்து முளையிலேயே கிள்ளி அழிக்க வேண்டும்.
____________________-

கிள்ளணுமே-நீ கிள்ளணுமே-அதை வளர்ந்திட-விடலாமா
நீ பூண்டிடும்-யோகப் பாதையில்-தடைகள் இருந்து-தடுக்கலாமா
*ஐந்தெனவே ஐந்தெனவே இருந்திடும் எனத்தாம்மா
சொல்லிச்-சென்றார் சொல்லிச்-சென்றார் பதஞ்சலி பெருமானார்
கிள்ளணுமே-நீ கிள்ளணுமே-அதை வளர்ந்திட-விடலாமா
நீ பூண்டிடும்-யோகப் பாதையில்-தடைகள் இருந்து-தடுக்கலாமா
(MUSIC)
நிஜமறியாமை-ஒன்றாலே மதி-தடுமாறும் தன்னாலே (2)
யாரென்ற-போதும் உடலினில்-பற்றும் மரணத்தின்-பயமும் தோன்றும்
அறி..யாமை-ஒன்றாலே பலப்பலத்-தடைகள் சாதனை-வழியை மூடும்
 கிள்ளணுமே-நீ கிள்ளணுமே-அதை வளர்ந்திட-விடலாமா
நீ பூண்டிடும்-யோகப் பாதையில்-தடைகள் இருந்து-தடுக்கலாமா
(MUSIC)
ஆணவம்-ஆசையும் வந்தாலே யார் சொன்னாலும்-நல்லதைக்-கேளாதே  (2)
மனதினில்-வெறுப்பும் தோன்றிடும்-அதுவும் மயங்கிடுமே-கொஞ்சமேனும்
பின்னர் சாதனை-வழியில் சென்றிட-அதற்கு தோன்றிடுமா-எண்ணிப்பாரும்
கிள்ளணுமே-நீ கிள்ளணுமே-அதை வளர்ந்திட-விடலாமா
நீ பூண்டிடும்-யோகப் பாதையில்-தடைகள் இருந்து-தடுக்கலாமா




2.9.3.வந்திடுமே பயம் வந்திடுமே(கண்படுமே பிறர் கண்படுமே)



வந்திடுமே-பயம் வந்திடுமே உயிர் எளிதாய்த் தருவோமா
அது சென்றிடும்-நாளில் எமன்-வந்து கேட்டால் தந்திட மனம்-வருமா
(2)
என்பதுவே என்பதுவே பதஞ்சலி-பெருமானார்
சொல்லியதே சூத்திரத்தில் எம-பயம் நமை-விடுமா
வந்திடுமே-பயம் வந்திடுமே உயிர் எளிதாய்த் தருவோமா
அது சென்றிடும்-நாளில் எமன்-வந்து கேட்டால் தந்திட மனம்-வருமா
(MUSIC)
காடுகள் பலமுறை-சென்றாயே அங்கு-நீ-தீயால் வெந்தாயே (2)
வாழ்ந்திடும்போதே பூமியில்-பலபேர் சாவதைக்-கண்டதனோடு
பல் பிறப்பினில்-நீயும் செத்ததன்-பயமும் இருந்திடும் என்றுமுன்னோடு
வந்திடுமே-பயம் வந்திடுமே உயிர் எளிதாய்த் தருவோமா
அது சென்றிடும்-நாளில் எமன்-வந்து கேட்டால் தந்திட மனம்-வருமா
 (MUSIC)
எங்கோடி..னாலும் விடாதே மரணத்தின்-பயமும் போகாதே (2)
*யோகி-என்றாலும் மரணத்தைக்-கண்டால் பயந்திடுவார்-கொஞ்ச நேரம்
இந்த மானிட-உடலில் வாழ்கிற-வரைக்கும் தொடர்ந்திடும்-மரணத்தின் பயமும்
வந்திடுமே-பயம் வந்திடுமே உயிர் எளிதாய்த் தருவோமா
அது சென்றிடும்-நாளில் எமன்-வந்து கேட்டால் தந்திட மனம்-வருமா

*Auto biography of a Yogi Chapter 42 – Last days with my Guru

For a moment, Master trembled like a frightened child. ("Attachment to bodily residence, springing up of its own nature [i.e., arising from immemorial roots, past experiences of death]," Patanjali wrote,5 "is present in slight degree even in great saints." In some of his discourses on death, my guru had been wont to add: "Just as a long-caged bird hesitates to leave its accustomed home when the door is opened.")



2.9.2.நிற்பதில்லையே சாவின் கூத்து (செல்லக்கிளியே மெல்லப் பேசு)


நிற்பதில்லையே சாவின்-கூத்து நெஞ்சில்-பயமே பார்த்துப்-பார்த்து (2)
(SM)
தூக்கம்-போலத் தான் சாவெனவே பகரும்-பலருக்கும் பயம்-எழுமே (2)
நிற்பதில்லையே சாவின்-கூத்து நெஞ்சில்-பயமே பார்த்துப்-பார்த்து
நெஞ்சில் எழுமே பயம் சாவைப் பார்த்து
 (MUSIC)
கொத்தும் பருந்தினிடம் எங்கோ பறந்திடினும்
என்றும் இரை-உயிர்க்குப் பயம்-விடுமா
(1+SM+1)
நித்தம்-பழகிடினும் பல்லில் விஷம்-இருக்க
பாம்பை-எப் பாம்பாட்டிதான் கொத்த-விடுவான்
நிற்பதில்லையே சாவின் கூத்து நெஞ்சில் பயமே பார்த்துப் பார்த்து

தேறுங்களேன் இதைத்-தேறுங்களேன் தேறுங்களேன் இதைத்-தேறுங்களேன்


2.9.1. மரணம்-போக்குது உயிரம்மா(அண்ணன் காட்டிய வழியம்மா)


9. ஸ்வரஸவாஹூ விதுஷோஸ்பி
ததாரூடோஸ பிணவேக  : ||

உயிரின் மீது  பற்று 
உயிரின் மீது  பற்று அல்லது மரண பயம் என்பது தானாக எழும் உணர்வாகும். அது வாழ்வினை முழுதுமாகக் கூட ஆதிக்கம் செலுத்தும் தன்மை கொண்டது.
_______________________
மரணம்-போக்குது உயிரம்மா-அது பிறவிக்கு-இன்னொரு பெயரம்மா
பிறந்தால்-இறக்கணும் என்பதனால் அப்-பயமும் கூட வருகுதம்மா
மரணத்தில்-போகுது உயிரம்மா
(MUSIC)
தொட்டால் சுடும்-பயம் நெருப்பாலே
தொடாமல் தெரியுது பின்னாலே
செத்தால் உடல்-பயம் எதனாலே
செத்தாச்சு பலதரம் அதனாலே
மரணம்-போக்குது உயிரம்மா
(MUSIC)
பிழைக்கணும் என்றே நினைத்திருக்கோம்
பயத்துடனே என்றும் வாழ்ந்திருக்கோம்
கொடுத்திடுவாய் என்றே எமன் கேட்டால்
எடுத்துச் செல்வாய் என்றா கொடுத்திடுவோம்
மரணம்-போக்குது உயிரம்மா
 (MUSIC)
உடலை-நினைத்தே வாழ்ந்திருக்கோம்
அது உலகில்-நிலைத்தே வாழ்ந்திடுமோ
முன்பே பலமுறை இ றந்திருக்கோம் அதில்
மரணத்தின் பயம்-நமை விடுவதில்லை
மரணம்-போக்குது உயிரம்மா-அது பிறவிக்கு-இன்னொரு பெயரம்மா
பிறந்தால்-இறக்கணும் என்பதனால் அப்-பயமும் கூட வருகுதம்மா
மரணத்தில்-போகுது உயிரம்மா