Sunday, June 28, 2015

1.8. உண்மை அறிவுதானா (நேத்துப் பரிச்ச ரோஜா)

 


(நேத்துப் பரிச்ச ரோஜா)
 
 
ஞானமதத்ரூப பிரதிஷ்ட்டம் 
அறிவின்  திரிபு
உண்மைக்கும் போலிக்கும் வித்தியாசம் தெரியாத போது அறிவில் மயக்கம் உண்டாகும் 

உண்மை அறிவுதானா வீண் என்னும் திரிபு தானா

உண்மை அறிவுதானா வீண் என்னும் திரிபு தானா (2)
உண்மை என்றாலும் அதற்கோர் திரிபுண்டு
*கோசம் ஒன்றால் மோசம் போகும்
கோசம் போகாமல் ஞானம் ஆகாது
உண்மை அறிவுதானா வீண் என்னும் திரிபு தானா
உண்மை அறிவுதானா
(MUSIC)
இருட்டில் கயிறை பாம்பாய் எண்ணி அறிவும்-மிரள்கிறதே
அதுவே ஒளியில் அதையே -மிதித்தே வீரம்-கொள்கிறதே
(1+Short Music+1)
வெய்யில் கானல் நீரும் பையில் கஞ்சன் காசும்
தாகம் தீர்க்க ஆமா வறுமை போக்க ஆமா
pause
உண்மை அறிவுதானா வீண் என்னும் திரிபு தானா
உண்மை அறிவுதானா
(MUSIC)
அடடா நோயில் அருந்தும் உணவும் விடமாய் ஆகிறதே 
அதுபோல் விடமே நோய்களுக்கென்றால் மருந்தாய் ஆகிறதே
(1+Short Music+1)
இதனை நீயும் கண்டு + (SM) + உணவும் நஞ்சும் ஒன்று +(sm)
இதனை நீயும் கண்டு உணவும் நஞ்சும் ஒன்று  
என்றால் பித்தன் என்று சொல்வார் உன்னைக் கண்டு
உண்மை அறிவுதானா வீண் என்னும் திரிபு தானா
உண்மை அறிவுதானா
(MUSIC)
உந்தன் உயிரை வைத்திடத் தந்தான் உடலை-வீடென்று
அதனை நிஜமாய்ப் பார்த்திட வைக்கும் அறிவின் திரிபிங்கு
(1+Short Music+1)
நீ குடியிருக்கும் வீடு அது-குடி இருப்பதுன் மனது  
வீடுன் நெஞ்சினில் வாழும் அறிவின் திரிபே ஆகும்
அறிவின் திரிபே ஆகும்..(2)


*கோசம்=உடல்
 
_____________









No comments:

Post a Comment