Wednesday, May 11, 2016

1.48 to 1.51 நல்லது ரிதம்பரமே (அந்தரங்கம் நானறிவேன் )




நல்லது-ரி..தம்பரமே பொல்லது-வி..டும் கணமே (2)
சத்தியத்தைக் கூறிடுமே சாதனையும் முடிவுறுமே
சத்தியத்தைக் கூறிடுமே சா..தனை முடிவுறுமே
முக்தி-தரும் வாலறிவே வந்துன்-நிஜம் தெரிந்திடுமே
நல்லது-ரி..தம்பரமே பொல்லது-வி..டும் கணமே 
(MUSIC)
ஊடி-உன்னைத் துளைப்பதில்லை தாமசத்தின் சோம்பல் 
மனமான-மண்ணில் முளைப்பதில்லை எண்ணம் ஆகும்-சாம்பல் 
(2)
ரிதம்பரத்தில் வேறெதற்கும் இடமுமில்லை போங்கள் (2) 
கணந்தோறும் ஆனந்தத்தில் திளைத்திடலாம் நீங்கள் 
பின் சொல்லவோ இன்றே அல்லவோ 
என்ன சொல்லவோ ஒன்றேயல்லவோ 
நல்லது ரிதம்பரமே பொல்லது-விடும் கணமே 
(MUSIC)
இக-பரத்தில் தொடர்ந்திருக்கும் பந்த-பவம் போக 
அந்த ரிதம்பரத்தில் வினைமுளைப்பும் இல்லை-அவன் சாக 
(2)
புரியும்-உன் சாதனைகள் இதுவரையில் போதும் (2)
அலைமோதும் ஆனந்தத்தின் சாகரமே யாவும் 
பின் சொல்லவோ இன்றே அல்லவோ 
என்ன சொல்லவோ ஒன்றேயல்லவோ 
நல்லது-ரி..தம்பரமே பொல்லது-வி..டும் கணமே (2)




No comments:

Post a Comment