Friday, August 19, 2016

10. இது வரை கடந்த (மதுரையில் பறந்த)

இதுவரை-கடந்த காலம்தனை-நீ நினைப்பதுவும்-வீணே
யோகம் செய்திட-மறுத்து நேரம்-போக்கும் சோம்பலும் வீண்-தானே
(1+Short Music+1)
இன்றைக்கு-விதைத்த விதைகளும்-நாளை பலன்-தருதல்-போலே (2)
உடன் யோகம்-பூண்டு தோன்றும்-பலனை கண்டிடு-தன்னாலே
நாளை கண்டிடு-தன்னாலே
இதுவரை-கடந்த காலம்தனை-நீ நினைப்பதுவும் வீணே
யோகம் செய்திட-மறுத்து நேரம்-போக்கும் சோம்பலும் வீண்-தானே
 (MUSIC)
சோம்பிக்-கிடந்தே நோயில்-விழத்தான் பெண்மணியே-உன் பொன்னுடலோ...ஓ.. 
சோம்பிக்-கிடந்தே நோயில்-விழத்தான் பெண்மணியே-உன் பொன்னுடலோ
தினம்-தினம் ஆட்டம் சுகம்-தனில் நாட்டம்
கொண்டிடத்தான்-உன் ஊனுடலோ
தேகத்தில் விளையும் ரோகங்கள்-அவைதான் சேர்த்திடவே-நல் செல்வங்களோ
நோய்கள்-உடலில்  வந்த-கணத்தில் 
போனது-தான் உன் புன்னகையோ (2)
இதுவரை-கடந்த காலம்தனை-நீ நினைப்பதுவும் வீணே
யோகம் செய்திட-மறுத்து நேரம்-போக்கும் சோம்பலும் வீண்-தானே
 (MUSIC)
இளமைமுறுக்கில்  படபட–வென்றே இருப்பதுதான்-உன் படிப்பறிவோ (2)
முதுமை வரையில் மனதின் பிடியில் வரும்-ஆசைப் பேய் தன் உறவோ 
தேவைகள் பலவும் பெருக்கிடும் வகையில் இருப்பதில் தான் உன் வாழ்விருக்கோ
அமைதியைத்தேடும் அறிவுதன்-உதயம் இறுதியிலேதான் என்றிருக்கோ
இதுவரை-கடந்த காலம்தனை-நீ நினைப்பதுவும் வீணே
யோகம் செய்திட-மறுத்து நேரம்-போக்கும் சோம்பலும் வீண்-தானே

No comments:

Post a Comment