Wednesday, August 24, 2016

14 வாராய் என்-நெஞ்சே(வாராய் என் தோழி) **வாராய் என்-நெஞ்சே வாராயோ நிஜம்-காண யோகம் பூணாயோ (2) 

உளமே-புகுந்து நிஜமே-காணும் விதம்-யோக நியமம்-பூணாயோ 
வாராய் என்-நெஞ்சே வாராயோ நிஜம்-காண யோகம் பூணாயோ 
(மந்த்ரம்-1)
ஓம் ...
பூர்ப்புவ  ஸுவஹ
தத்ஸ விதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீ மஹீ
தியோ யோனா ப்ரச்சோதயாத்  
 (MUSIC)
கணம்-மாறுகின்ற நிலையை நீ விடயோகம்-நல்ல வழியே 
தடுமாற்றம் தந்து-உடனே உனைப் பலமோகம்-தாக்கும் பொழுதே 
சிறப்பான யோகம் காக்காதோ இரும்பாக உன்னை ஆக்காதோ
சிறப்பான யோகம் காக்காதோ இரும்பாக உன்னை ஆக்காதோ
வாராய் என்-நெஞ்சே வாராயோ நிஜம்-கா யோகம் பூணாயோ (மந்த்ரம்-2)

*யோகோ யோக விதம் நேதா பிரதான புருஷேச்வர:|
நாரசிம்ஹவபு: ஸ்ரீமான் கேசவ புருஷோத்தம: ||
(MUSIC)
தணியாத-ஆசை விடுமா அலைக்..கழிக்காமல்-லேசில் விழுமா 
சிசு-போலே லேசில்-மகிழ்வாய் உனைக் கண்மூடித் தூங்க-விடுமா
உதவாது- லோகம் உணராயோ நிஜம்காண-யோகம் புணராயோ
உதவாது-லோகம் உணராயோ நிஜம்காண-யோகம் புணராயோ
வாராய் என்-நெஞ்சே வாராயோ நிஜம்-காட்டும் யோகம் பூணாயோ

**வேத்யோ வைத்யஸ் ஸதாயோகீ வீரஹா மாதவோ மது: |
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: ||
(MUSIC)
மலராகச் சிரசில்-மலரும் அதில்-எழும்-ஆயி..ரத்தில்-இதழும்
மயக்கங்கள்-யாவும் தெளியும் உண்மைச் சுடராக-உன்னில் தெரியும்
பிற-ஓடும்-எங்கும் உனைக்காணும் விதம்-மாற யோகம் வழிகாட்டும் (2)

வாராய் என்-நெஞ்சே வாராயோ நிஜம்-காட்டும் யோகம் பூணாயோ 

உளமே-புகுந்து நிஜமே காணும் விதம்-யோக நியமம் பூணாயோ 

வாராய் என்-நெஞ்சே வாராயோ நிஜம்-கா யோகம் பூணாயோ 

( MUSIC )
(மந்திரங்கள்-3)


பாரப்ருத் கதிதோ யோகீ யோகீ ஸஸ் ஸர்வ காமத: |
ஆஸ்ரம ஸ்ரமண: க்ஷாமஸ் ஸுபர்ணோ வாயுவாஹந: ||
____________

த்ரயம்பகம் யஜா மஹே
சுகந்திம் புஷ்டி வர்தனம்
உர்வாருகமிவ வந்தனான்
ம்ருத்யோர் முக்ஷீய மா(அ )ம்ருதாத்
( MUSIC )
____________________________________________________________மந்திரங்களின் உட்பொருள்
ஓம் ...
பூர்ப்புவ  ஸுவஹ
தத்ஸ விதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீ மஹீ
தியோ யோனா ப்ரச்சோதயாத்  

அண்டம் படைத்து எல்லாமும் ஆன பரம்பொருளை தியானிக்கிறேன். அது என்னை ஒளிர்விக்கட்டும்,உய்விக்கட்டும்- ஸ்வாமி விவேகானந்தர்

அண்டம் படைத்திங்கு எல்லாமும் ஆனவன்
அணுவின் உள்ளேயும்  அணுவே நீ ஆனவன்.
தொண்டரின் உள்ளத்தில் உறைகின்ற ஆண்டவன். 
எம்மைக் காப்பாயே ..!
தோன்றி வளர்கின்ற சுயமான ஜோதிநீ ..
என்றும் உறைகின்ற விதமான  ஆதி நீ
மண்ணில் பிறக்கின்ற  யாவிலும் உயிரும் நீ .. 
உயிரின் உயிர் நீயே   ..!
போற்றி போற்றி நின் பாதங்கள்  போற்றியே ..
வெற்றி வெற்றி எம்  நெஞ்சில் நீ நின்றிட
சாற்றி சாற்றிப்  பறை செய்வோம் நாங்களே .. 
அருள் செய்  யோகீசா ..!

*யோகோ யோக விதம் நேதா பிரதான புருஷேச்வர:|
நாரசிம்ஹவபு: ஸ்ரீமான் கேசவ புருஷோத்தம: ||

* யோகம்தன்னில் உதிப்பவன் யோகம்கூட உதவுவான்
லோகம்தன்னில் தலையவன் சிம்மத்தலையில் தோன்றுவான்
திருமகளின் துணையவன் சுருண்டகுழலில் அழகிவன்
பிறந்திருக்கு மேழுலகின் சிறந்ததொரு நாயகன்

வேத்யோ வைத்யஸ் ஸதாயோகீ வீரஹா மாதவோ மது: |
அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோ த்ஸாஹோ மஹாபல: ||

அறியஉரிய  கருத்தவன்   நோய்கள்முறிய  மருத்துவன்
என்றும்யோகம் கொள்பவன் சமரில்வெற்றி கொள்பவன்
நின்றஞானக் குன்றவன் தின்றபொருளில் இனிப்பவன்
புலன்கள்ஓயக் கடப்பவன் உலகமாயை துடைப்பவன்
மலர்ந்தமுகத்தின் ஆர்வலன் மிகுந்தான ஓர்லன்*

*பலன் = பலமுடையவன் / பலசாலி

பாரப்ருத் கதிதோ யோகீ யோகீ ஸஸ் ஸர்வ காமத: |
ஆஸ்ரம ஸ்ரமண: க்ஷாமஸ் ஸுபர்ணோ வாயுவாஹந: ||

பாரம்தாங்கும் பரமனாம் வேதம்புகழும் இறைவனாம்
யோகப்பலனு மாவன் யோகிரின் தலைவனாம்
சாதகத்தின் முடிவில்தோன்றும் ஈடிலாச் சமாதியாம்
முயன்றயோகம் முடிவுற பிறவிதாண்டி உதவுவான்
ஊழின்முடிவில் அடங்குவான் ஊழைக்கடக்க படகிவன்
காற்றின்மீது மிதப்பவன் காற்றாய்எங்கும் பறப்பவன்


த்ரயம்பகம் யஜா மஹே
சுகந்திம் புஷ்டி வர்தனம்
உர்வாருகமிவ வந்தனான்
ம்ருத்யோர் முக்ஷீய மா(அ )ம்ருதாத்


முக்கட் பரமனே ,சுகந்தமே , எமைக் காக்கும் தந்தையே  வேண்டுகிறோம். வெள்ளரி , காம்பினின்று விடுபடுதல் போல , மரணத்தின் பிடிகள் எல்லாம் எமை விடட்டும். எம் வாழ்வில் கூடட்டும் மரணமிலா அமுதநிலை


No comments:

Post a Comment