மெய்கொண்டு கண்டேன் மெய்கண்டு கொண்டேன்
மெய்யின்றி மெய்-கண்டதாரம்மா
மெய்யொன்று நான் சொல்லுவேனம்மா
(MUSIC)
ஊர்-சொல்லக் கேட்டேன் அதைக்-காணச் சென்றேன்
ஏனென்று நான்-சொல்லக் கேளம்மா
கேள்-அந்தக் கதை-தன்னைக் கேளம்மா
(MUSIC)
நடராஜ தெய்வம் அது-தந்த யோகம்
அழகாக-இன்னும் புவிமீது-மின்னும்
நம்நாட்டுச் செல்வம் எளிதாக இன்னும்
பலர்-பூணும் வண்ணம் அது-வாழும் என்றும்
எள்ளளவும் …
தீமையிலா ...
எள்ளளவும்-தீமையிலா
நிகண்டுகளும்..
விளக்கம் தரா..
நிகண்டுகளும் விளக்கம் தரா
விண்ணோர்க்கும் விளங்காத பொருள்காட்டும் கலையல்லவோ
என்றே.. ம்ஹ்ம்..
கண்டேன்.. ம்ஹ்ம்..
சொன்னேன்
மெய்கொண்டு கண்டேன் மெய்கண்டு கொண்டேன்
மெய்யின்றி மெய்-கண்டதாரம்மா
மெய்யொன்று நான் சொல்லுவேனம்மா
ஊர்-சொல்லக் கேட்டேன் அதைக்-காணச் சென்றேன்
ஏனென்று நான்-சொல்லக் கேளம்மா
கேள்-அந்தக் கதை-தன்னைக் கேளம்மா
(MUSIC)
நான்-பார்த்த உண்மை பார்-சொல்ல வந்தேன்
நான்-கொண்ட நன்மை பார்-கொள்ளவென்றே (2)
என்-வாழ்க்கை-இன்று முன்-போல இல்லை
என் நெஞ்சு லேசில் நோய்-கொள்வதில்லை (2)
உன் உடலில் …
நினைவிருந்தால் …
உன் உடலில் நினைவிருந்தால்
உன் வாழ்வே
நரகமதாம்
உன் வாழ்வே நரகமதாம்
ஏனென்று நான்-சொல்ல ஓர்-தேவை இன்றில்லையே
என்றே.. ம்ஹ்ம்..
கண்டேன்.. ம்ஹ்ம்..
சொன்னேன்
மெய்கொண்டு கண்டேன் மெய்கண்டு கொண்டேன்
மெய்யின்றி மெய்-கண்டதாரம்மா
மெய்கொண்டு கண்டேன் மெய்கண்டு கொண்டேன்
மெய்யின்றி மெய்-கண்டதாரம்மா
மெய்யொன்று நான் சொல்லுவேனம்மா
ஊர்-சொல்லக் கேட்டேன் அதைக்-காணச் சென்றேன்
ஏனென்று நான்-சொல்லக் கேளம்மா
கேள்-அந்தக் கதை-தன்னைக் கேளம்மா
No comments:
Post a Comment