Monday, August 8, 2016

4 நோய்கள் போக என்ன வழி (ஆயர்பாடி மாளிகையில்)



நோய்கள்-போக என்ன-வழி தாங்கலையே அந்த-வலி 
என்று-வாடும் மாந்தர்களே கேளீரோ 
(1+SM+1)
மன நோய்-மறைய வழியுமுண்டு வலி-குறைய மார்க்கமுண்டு 
யோகமென்ற பேரில்-நன்று கேளீரோ 
யோகம் தனைப் பூண்டு சுகம் காணீரோ 
நோய்கள்-போக என்ன-வழி தாங்கலையே அந்த-வலி 
என்று-வாடும் மாந்தர்களே கேளீரோ 
(MUSIC)
என்ன-வழி என்று-விழி ரெண்டிலுமே நீர்-பெருக்கிக் கதறியழும்
மாந்தர்களே கேளீரோ
(2)
எந்த மந்திரமும் அதனில்-இல்லை மாயங்களும் அதனுள்-இலை 
அதை-உடனே  நீர்-புரிந்து பாரீரோ
வந்து-யோகம் புரிந்து நீரும் பாரீரோ 
நோய்கள்-போக என்ன-வழி தாங்கலையே அந்த-வலி 
என்று-வாடும் மாந்தர்களே கேளீரோ 
(MUSIC)
நாகம்-பிறை சூடு..பவன் நர்த்தனங்கள் ஆடும்-சிவன் 
தந்தது-தான் இந்த யோகம் கேளீரோ
(2)
அதைக் கேட்டுப்-பதஞ்..சலி-பெருமான் உலகளித்து அருள்-புரிந்தார் 
நமக்கதனை பரிந்தளித்தார் வாரீரோ (2)
நோய்கள்-போக என்ன-வழி தாங்கலையே அந்த-வலி 
என்று-வாடும் மாந்தர்களே கேளீரோ 
(MUSIC)
மனதில்-பிணி தங்கி-விட்டால் வாழ்வில் வலி கூடி விடும்  
என-உடனே அதை-விரட்டப் பாரீரோ
(2)
அலை ஓய்ந்திடவே காத்திருப்போம் நல்ல-நேரம் பார்த்திருப்போம்
என்ற-நிலை விடுத்து மீளப் பாரீரோ 
யோகவழி சென்று நிஜம் காணீரோ
நோய்கள்-போக என்ன-வழி தாங்கலையே அந்த-வலி 
என்று-வாடும் மாந்தர்களே கேளீரோ 
யோகமதைப் பூண்டிடலாம் வாரீரோ







No comments:

Post a Comment