பல்லவி
எங்குமிலை இலையே யோகம்-போல் நன்மை-தரும் கலையே
அனுபல்லவி
இம்மை மறுமையிலே-யோகம் ஏற்றம் அளிக்குமன்றோ
எங்குமிலை இலையே யோகம்-போல் நன்மை-தரும் கலையே
சரணம்
இன்றைக்கிங்கிப்பொழுதே அம்மம்மா யோகமெனும் அறமே
கொண்டு உயர்ந்திடவே நீ சென்று நாடிப் பெறுவாயே
எங்குமிலை இலையே யோகம்-போல் நன்மை-தரும் கலையே
கோடி பிறப்பினிலும் அம்மம்மா உன்னைத் தொடருமடி
நாடி குருவைக் கொண்டால் யோகத்தால் ஊழும் விலகுமடி
உச்சி..யில்-வான் விழுந்தால் அதையும் தாங்கி-இருக்கும்படி
சக்திதன்னைப் பாராய் அழகாய் யோகம்-கொடுக்குமடி
எண்ணத்தைக் கட்டிவிட்டால் யோகத்தால் நற்கதி கிட்டுமடி
தன்னை உணர்ந்திடிலோ அம்மம்மா சின்மயமாகுமடி
உள் கண்ணை நீ திறப்பாய் யோகத்தால் குருவின் வாக்குப்படி
பின் உன்னில் தோன்றுமன்றோ கண்ணன்-தாள் உன்னுயிர் உய்யுமன்றோ
உன்னுயிர் உய்யுமன்றோ (2)
No comments:
Post a Comment