Tuesday, August 16, 2016

8. பழகு பழகு..யோகத்தைப் பழகு (அழகு அழகு ..ஐயப்பன் அழகு)




பழகு-பழகு பழகு-பழகு யோகத்தைப் பழகு (2)
குரு-திருவடியைப் பணிந்து-ஞான யோகத்தைப் பழகு (2)
பழகு-பழகு பழகு-பழகு யோகத்தைப் பழகு (2)
(MUSIC)

எரிமலையாய் எரியும்-நெஞ்சம் அடங்கிடப்-பழகு 
அது-பதறாதிர சிதறாதுற யோகத்தைப்-பழகு
அம்மா-மனம் சீராக்க யோகத்தைப் பழகு (2) 
அதற்..கென்று-இடம் தந்து-அதை வைத்திடப் பழகு
பழகு-பழகு பழகு-பழகு யோகத்தைப் பழகு (2)
(MUSIC)

நெஞ்சிலூறும் அன்பினூற்று சுரந்திடப் பழகு
நல்ல ஞானம்-வர யோகம்-தரும் பாதையில்-ஒழுகு 
தேகமிலை என்ற-நிலை வந்திடப் பழகு (2)
பின்பு-பேரானந்தக் கடலில்-மூழ்க யோகத்தைப் பழகு
பழகு-பழகு பழகு-பழகு யோகத்தைப் பழகு (2)
(MUSIC)

விதி-விட்டு மதி-கட்டுப் பட்டிடப்-பழகு
அதை குரு-மொழியும் நல்வழியில் செலுத்திடப் பழகு
மெய்யாலே மெய்-காணும் வித்தையைப் பழகு (2)
இன்று-முதல் அன்று-வரை யோகத்தில் ஒழுகு
பழகு-பழகு பழகு-பழகு யோகத்தைப் பழகு
குரு-திருவடியைப் பணிந்து-நல்ல யோகத்தைப் பழகு (2)
(FAST paced)
பழகு-பழகு பழகு-பழகு யோகத்தைப் பழகு (2)
பழகு .. பழகு .. பழகு யோகத்தைப் பழகு
பழகு யோகத்தைப் பழகு
தினமும் யோகத்தைப் பழகு
ஞான யோகத்தைப் பழகு



No comments:

Post a Comment