ஜதி
தினம் அலைந்தே-தேடும் இன்பம்-எங்கே
சொல்வாய் ..
தினம் அலைந்தே-தேடும் இன்பம்-எங்கே
உண்ணும் கிறக்கத்திலா கொள்ளும் உறக்கத்திலா
சொல்லு.. தினம்-அலைந்தே தேடும் இன்பம்-எங்கே
(2)
அனுதினமும்
(Short Music)
(Short Music)
உலகில் அனுதினமும்
பரந்திருக்கும் உலகில் அனுதினமும்
அந்தக் குரங்கினுக்கும் மேலே பரபரப்பும்
(2)
கொண்டு
தினம்-அலைந்தே தேடும் இன்பம்-எங்கே
ஜதி
என்றிருந்தாலும் தன்னைத் தானறிந்தே
உய்ய..வில்லையென்றால்-கேடு தான் அறிவாய்
(2)
போதையில் நாம்-வாழ வேணுமா (2)
சொந்த நாட்டுக்கு நாம்-போக வேண்டாமா (2)
*மாளவா ? மீளவா ? மாயவா ? ஓயவா ?
தினம்-அலைந்தே தேடும் இன்பம்-எங்கே
ஜதி
மாயத்திலே தினமும் உழல என்றா
இந்த லோகத்திலே வந்தே நீ பிறந்தாய்
(2)
சோகத்திலே உன்னை மூழ்கவைக்கும்
சோகத்திலே பின்னே மூழ்கவைக்கும்
சோகத்திலே பின்னே மூழ்கவைக்கும்
சிறு இன்பத்திலே விட்டில் பூச்சியைப் போல் (2)
*மாளவா ? மீளவா ? மாயவா ? ஓயவா ?
தினம்-அலைந்தே தேடும் இன்பம்-எங்கே
ஜதி
தேறாத வாழ்வோடு விதியோடு ஏன்-வாட ?
வந்து-விடு யோகம்-பூண
கூரான வினையோடு முடியாது தினம்-வாட
முனைந்து-விடு உண்மை-தேட
துணிவோடு மனம்மாறி இதை-நாடி இதுவேளை விரைவினில் வினைபோக நாடி-வருவாய்
தூயனே ஆகவா மாயமே போகவா உனக்காணும் ஆவலால் வா
தினம்-அலைந்தே தேடும் இன்பம்-எங்கே
கொல்லும் மோகத்திலா கொள்ளும் யோகத்திலா
என்று
உணர்ந்து கொண்டாய் இன்னும் தயக்கம் என்ன
ஜதி
*மாள விரும்புகிறாயா இல்லை பிறப்பிறப்பினின்று மீள
விரும்புகிறாயா
மாய
விரும்புகிறாயா ? இல்லை பிறப்பிறப்பென்னும் மாய விளையாட்டிலிருந்து , இறைவனடி கண்டு,
நிரந்தரமாக ஓய விரும்புகிறாயா
No comments:
Post a Comment