என்னை யாரென்று கண்டு-கொள்ள நான் பார்க்கிறேன்
தினம் பலதான சாத்திரத்தில் நான் தேடுறேன்
(2)
நான் பலநூலைப் பலகாலம் படித்தேனம்மா
என் தேடல் தனில்-சென்ற நாள்-கொஞ்சமா
என் தேடல் தனில்-சென்ற நாள்-கொஞ்சமா
என்னை யாரென்று கண்டு-கொள்ள நான் பார்க்கிறேன்
(MUSIC)
(MUSIC)
ஏட்டுப் படிப்பாலே தனில்-மட்டும் நலன்-ஏதய்யா
முடிக்காமல் செயல்-தன்னில் பலன்-ஏதய்யா
(2)
கனி-என்ற சொல்-என்றும் இனிக்காதய்யா (2)
தூற்றாமல் உமி-நெல்லில் போகாதையா
யோகம் கொளல்-விட்டு நூல்-மட்டும் ஏன்-கற்கிறாய்
(MUSIC)
இன்று வரை-நூலின் புழுவாக இருந்தேனம்மா
என்-கண்ணை நீ-இன்று திறந்தாயம்மா
(2)
அறிவொன்று நீ-கூறிச் சிறந்தாயம்மா
குருவென்று நீ இன்று வந்தாயம்மா
இனி-நானும் என்-செய்ய சொல்வாயம்மா
என்னை யாரென்று கண்டு-கொள்ள நான் பார்க்கிறேன்
நான் பலநூலைப் படித்தே அதைத் தேடுறேன்
நான் பலநூலைப் படித்தே அதைத் தேடுறேன்
(MUSIC)
என்றும் நமக்காக உயர்கீதை துணை இல்லையா -அதில்
ஒரு பாதை உயர் யோகம் என இல்லையா
(2)
நமக்காக அவன் தந்த வரமில்லையா
நல்கீதை அவன் தந்த வரமில்லையா
நல் யோகம் நீ-இன்று பயிவாயய்யா
இன்று தான்-என்னை காண்- உண்மை கண்டேனம்மா
இனி நான்-யோகம் தவறாமல் செய்வேனம்மா
(2)
நான் பலநூலைப் பலகாலம் படித்தேனம்மா
என் தேடல் தனில்-சென்ற நாள்-கொஞ்சமா
இன்று தான்-என்னை காண்- உண்மை கண்டேனம்மா
No comments:
Post a Comment