என்னுயிர்த் தோழி கேளொரு-சேதி
இது-தா..னாய்ப்-பார் தரும்-அனு..பூதி
(2)
என்னுயிர்த் தோழி கேளொரு-சேதி
மன்னுயிர் சாபம் போக்கிடும் யோகம்
இதனை அறிவாயே தோழி
என்னுயிர்த் தோழி கேளொரு-சேதி
இது-தா..னாய்ப்-பார் தரும்-அனு..பூதி
(2)
(MUSIC)
உலகினை அறிந்தாய் பலப்-பல புரிந்தாய்
ஆ.ஆ ..
இறைவனைப் பிரிந்தாய் உலகினில்-பிறந்தாய்
வந்தப்பு..றம்-உந்தன் நிஜம்தனை-மறந்தாய்
உடலினைச் சதமாய் நினைத்து வளர்த்தாய்
*அதன்-வழி தோழி அதை உடன் கடப்பாய்
என்னுயிர்த் தோழி கேளொரு-சேதி
இது-தா..னாய்ப்-பார் தரும்-அனு..பூதி (2)
(MUSIC)
இன்றே..னும்-நீ இதை-நினையாயோ
நிஜம்-தனைப் பார்க்க தினம்-முய..லாயோ
நன்று தோழி-நீ யோகம்-கொள்ளாயோ
உன்-நிஜ இலக்கை நோக்கிச்-செல்லாயோ
என்னுயிர்த் தோழி கேளொரு-சேதி
இது-தா..னாய்ப்-பார் தரும்-அனு..பூதி
(2)
* உடல் எடுத்ததன் நோக்கமே
, யோகம் புரிந்து இறைவனை அடைய வேண்டும்
என்பதுதான். உடல் வழி புரியும் யோக சாதனை
மூலம்தான் உடலைக் கடக்க இயலும்.இறைவனுடன் கலக்க இயலும். என்னே இறை விளையாட்டு.!
இதைத் தான் திருவள்ளுவர் “பற்றுக பற்றற்றான் பற்றினைப் பற்றுக அப்பற்று விடற்கு “
என்று அழகாகச் சொல்கிறார்.
உடலைப் பற்றி புரியும் யோக சாதனை மூலம் தான் உடல்வழி ஏற்படும் புலன் ஆதிக்கத்தைக் கடந்து
இறை ஆதிக்கத்திற்கு உட்பட முடியும்.
No comments:
Post a Comment