Friday, September 9, 2016

19. உடல்-விழப் படுக்கையில் (சரவணப் பொய்கையில் நீராடி**)



உடல்-விழப் படுக்கையில் நீ வேண்டி
எனைக் காத்தருள் என்றே-என்ன பயன்
(1+SM+1)
இரு-விழி போச்சு எனப் பின்னே (2)
அந்த ஆதவன் வந்தனம் பலன் உண்டா
உடல்-விழப் படுக்கையில் நீ வேண்டி
எனைக் காத்தருள் என்றே-என்ன பயன்
 (MUSIC)
அமர்ந்து நீ  சரி செய்வாய்  மூச்சுதனை 
அந்த ஒன்றிலே-கண்டிடுவாய் ஆறுதலை
ஓரிடம் அமர்கின்ற அந்த-நிலை
ஒன்று மட்டுமே நீ-தரும் சின்ன விலை 
ஓ …. ஓ ..
உடல்-விழப் படுக்கையில் நீ வேண்டி
எனைக் காத்தருள் என்றே-என்ன பயன்
 (MUSIC)
சொர்க்கமும் உன்..னில் தோன்றிடுமே  அந்த நரகமும்-உன்னால் தோன்றுவதே (2)
வேண்டியதை-நீ தேர்ந்தெடுப்பாய்
வேண்டியதை-நீ தேர்ந்தெடுப்பாய் அதை ஆண்டவன் உன்னிடம் விட்டுவிட்டான்
உடல்-விழப் படுக்கையில் நீ வேண்டி
எனைக் காத்தருள் என்றே-என்ன பயன்
இரு-விழி போச்சு எனப் பின்னே (2)
அந்த ஆதவன் வந்தனம் பலன் உண்டா
உடல்-விழப் படுக்கையில் நீ வேண்டி
எனைக் காத்தருள் என்றே-என்ன பயன்

FIRST PAGE

No comments:

Post a Comment