Tuesday, September 13, 2016

20. அமைதியாக மனதினையே (அமைதியான நதியினிலே) **


அமைதியாக மனதினையே மாற்றும்
யோகம் அளவில்லாத *இன்பம்-கொண்டே சேர்க்கும்
அமைதியாக மனதினையே மாற்றும் யோகம்
அளவில்லாத நன்மை-கொண்டே சேர்க்கும்
போற்றிடினும் தூற்றிடினும் கலங்க-வைக்கும் துயர்-வரினும் (2)
மலையெனவே ஸ்திர-மனதாய் மாற்றும் யோகம்
அமைதியாக மனதினையே மாற்றும்
யோகம் அளவில்லாத இன்பம்-கொண்டே சேர்க்கும்
(MUSIC)
கண்ணனவன் கீதையிலே..
கண்ணனவன்-கீதையிலே மேலாகச் சொன்னதிது
கண்ணனவன்-கீதையிலே நாம்-வாழத் தந்ததிது
உண்மைதனைக் காட்டிவிடும் உன்-காலம் வரும்பொழுது
உன்-பழுதைப் போக்கி-விடும் இயல்பாக எழும்-முழுது
அமைதியாக மனதினையே மாற்றும்
யோகம் அளவில்லாத இன்பம்-கொண்டே சேர்க்கும்
(MUSIC)
ஏற்றம்-தரும் பாதையிலே கூட்டிச்-செல்லும் யோகமது (2)
ஆசையினால் சாய்வதில்லை நொடிந்து-மனம் வீழ்வதில்லை (2)
அமைதியாக மனதினையே மாற்றும்
யோகம் அளவில்லாத இன்பம்-கொண்டே சேர்க்கும்
ஓ …. ஓ ..
தேடி-உள்ளே பார்-முயன்று விலகும்-மெல்ல உன்-பழுது 
தேடி-உள்ளே பார்-முயன்று தெரியும்-அந்த உன்-முழுது
யோகம்-தரும் அங்கங்களின் எட்டில்-விழும் உன்-பழுது
யோகம்-தரும் அங்கங்களின் எட்டில்-எழும் உன்-முழுது
அமைதியாக மனதினையே மாற்றும் 
யோகம் அளவில்லாத இன்பம்-கொண்டே சேர்க்கும்
(MUSIC)
சிந்தையில் துலங்கி-எழும் காதினுள் ப்ரணவம்-விழும்  (2)
அந்த-ஒலி கேட்டு-விட்டால் உந்தன்-நிலை மாறிவிடும்
அந்த-ஒலி கேட்டு விட்டால் உன்னில்-நிஜம் கூடிவிடும்
அமைதியாக மனதினையே மாற்றும்
யோகம் அளவில்லாத *இன்பம்-கொண்டே சேர்க்கும்
போற்றிடினும் தூற்றிடினும் கலங்க-வைக்கும் துயர்-வரினும்
மலையெனவே ஸ்திர-மனதாய் மாற்றும் யோகம்
அமைதியாக மனதினையே மாற்றும்
யோகம் அளவில்லாத இன்பம்-கொண்டே சேர்க்கும்


* பேரின்பம் = ஆனந்தம்

No comments:

Post a Comment