Tuesday, September 13, 2016

22. உலகத்தில் வாழ்நாள்(வசந்தத்தில் ஓர்நாள்)




உலகத்தில் வாழ்நாள் முழுவதும்-நாமும்
நல்-யோகம் பூண்டிருப்போமா தோழி *கண்மூடிப் பார்த்திருப்போமா
(1+SM+1)
தோழி *கண்மூடிப் பார்த்திருப்போமா
(MUSIC)
 மெய்விட்டு மெய்யோடு நாம்-உறவாட (2)
 மௌனத்தில் ஆழ்ந்திருப்போமா தோழி
தேவனின்-நாடகம் *சிதம்பர-மேடை (2)
தனில்-எழ லயித்திருப்போமா தோழி
(Short Music)
தருமா-அம்மா இதை-இக போகம் (2) 
ஆசையை-வென்றிடுவோமா தோழி 
ஆசையை-வென்றிடுவோமா தோழி நல்-யோகம் பூண்டிடுவோம் வா
உலகத்தில் வாழ்நாள் முழுவதும்-நாமும்

நல்-யோகம் பூண்டிருப்போமா தோழி கண்மூடிப் பார்த்திருப்போமா
(MUSIC)
என்றென்றும்-நாளை வாராது வாழ்வில் (2)
ஆதலின் இன்று-கொள்வோமா நங்காய்
(Short Music)
இன்றே இறை-காட்டும் மங்கல-நாளாய் (2)
நெஞ்சினில் கொண்டிடுவோமா நங்காய்
நாமுடன் சென்..று யோகத்தைப் பூண்டு (2)
நற்கதி அடைந்திடுவோம் வா தோழி-
நல்யோகம் பூண்டிடுவோம்-வா தோழி  நல்யோகம் பூண்டிருப்போம் வா
(SM)
உலகத்தில் வாழ்நாள் முழுவதும்-நாமும்
 நல்-யோகம் பூண்டிருப்போமா 
தோழி கண்மூடிப் பார்த்திருப்போமா 
தோழி  நல்-யோகம் பூண்டிருப்போமா

*கண்மூடி= ஊனக்கண்ணை மூடி ஞானக் கண் திறக்கப் பாடுபடவேண்டும்
(பில்வமங்கள், ஞானக் கண் ஒன்று இருந்திடும் போதினிலே ஊனக்கண் மறைந்ததால் உலகில் குறையுமுண்டோ என்று பாடுகிறார்)

*சிதம்பரம்=சித்+அம்பரம்; சிதாகாசம்; மெய்ஞ்ஞானப் பெருவெளி

*குருபதம் கொண்டு=குருவைச் சரணடைந்து


FIRST PAGE


No comments:

Post a Comment