Tuesday, September 13, 2016

23. யோக ராஜ்ஜியம் இருக்கு (காதல் ராஜ்ஜியம் எனது ) **

யோக ராஜ்ஜியம்-இருக்கு வெறும்-போக பூஜ்ஜியம்-எதற்கு
இருள்-என்னும் மோகத்தை-விலக்கு ஒளி-கூட்டும் யோகத்தின்-விளக்கு
(2)
(Short Music)
கண்ணாரக் கண்டிட-வனப்பு அய்யா-உன் நெஞ்சினில் இருக்கு
ஆவி-மேவியுன் ஒளி-மேனி ஒன்றும்-சொல்லாமல் சாட்சியென்றிருக்கு
(2)
யோக ராஜ்ஜியம்-இருக்கு வெறும்-போக பூஜ்ஜியம்-எதற்கு
இருள்-என்னும் மோகத்தை விலக்கு 
ஒளி-கூட்டும் யோகத்தின்-விளக்கு
(MUSIC)
திங்கள் முடி-தன்னில் ஒளிர்-கண்ணை நுதல்-தன்னில்
தான்-சூடும் ஈசன்-மொழி
யாக்கை எனும்-மெய்யில் உறை-ஆன்மம் எனும்-மெய்யை
தான்-காண யோகம்-வழி
(2)
எந்நாளும் தேகத்தில்-பிணைப்பு *எத்தாலும் மோகத்தின்-நினைப்பு
காலை-மாலையும் இது-தானோ
சென்று-கொள்ளாயோ யோகத்தில்-பிடிப்பு
யோக ராஜ்ஜியம்-இருக்கு வெறும்-போக பூஜ்ஜியம்-எதற்கு
இருள்-என்னும் மோகத்தை விலக்கு ஒளி-கூட்டும் யோகத்தின்-விளக்கு
(MUSIC)
தஞ்சம் அவர்-பாதம் என-நெஞ்சில் குரு-போதம்
கொண்டாலே யோகம் வரும்
கத்தும் மனம்-நிற்கும் அதில்-சத்வம் இடும்-சத்தம்
ஓமாகக் காதில்-விழும்
எல்லாமும் ஒன்றெனும் லயிப்பு
சென்றோடும் ஜீவனின்-தவிப்பு
அமுதச்-சாகரம் இது-தானோ
சொற்கள் சொல்லாது பார் அதன்-சிறப்பு
யோக ராஜ்ஜியம்-இருக்கு வெறும்-போக பூஜ்ஜியம்-எதற்கு
இருள்-என்னும் மோகத்தை விலக்கு ஒளி-கூட்டும் யோகத்தின்-விளக்கு

*எத்தாலும்=எதனாலும்
(எதுவென்றாலும் அதில் இன்பம் ஒன்றையே குறிக்கோளாக இருத்தல்.
What is in it for me attitude)

FIRST PAGE

No comments:

Post a Comment