வாடும் உள்ளங்களே குரு சொல்-கேளீரோ
(1+SM+1)
யோகம் புரிவதிலே
ஆறுதல் காணீரோ (2)
வாடும் உள்ளங்களே
குரு சொல்-கேளீரோ
(MUSIC)
யாராலும் கூறிடவே முடிவதில்லை-யார் என்றே
காட்டிலுள்ள முனிவர்களும் தேடுவதார்-நான் என்றே
(2)
*ஆயுளில்-நீயும்-தேடு உனக்குத்-தொழில்-வேறேது
தேடுதலே-பண்பாடு
தினம்-யார் அந்த-நான் என்று தேடுவதொன்றே பீடு
வாடும் உள்ளங்களே
குரு சொல்-கேளீரோ
யோகம் புரிவதிலே
ஆறுதல் காணீரோ (2)
(MUSIC)
நிம்மதியாய்த் தூங்குகிறாய் புரியலையே-ஏன் உனக்கு
காலையிலே விழிக்கையிலே கழிகிறதே-எமன் கணக்கு
(2)
உண்பதிலே-கொஞ்ச நேரம் உறக்கத்திலே-கொஞ்ச நேரம்
உலகினிலே-மிச்ச-நேரம்
இதில்-யார் அந்த-நான் என்று தேடுதற்கெங்கே நேரம்
வாடும் உள்ளங்களே
குரு சொல்-கேளீரோ
யோகம் புரிவதிலே
ஆறுதல் காணீரோ (2)
வாடும் உள்ளங்களே
குரு சொல்-கேளீரோ
*இந்த
ஆயுளிலேயே
No comments:
Post a Comment