Sunday, September 18, 2016

27. என் போல் (புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே**)



என்-போல் தினம்-தவிக்கும் நண்பர்களே
நம் முன்னோரின் சொல்லைக் கொஞ்சம் கேளுங்களேன் 
(2)
திண்டாட்டம் மட்டும்-இக லோகத்திலே
அதைத் துண்டாடிடும் வழி யோகத்திலே
திண்டாட்டம் மட்டும்-இக லோகத்திலே
அந்த நிலை-மாற்றிடும் வழி யோகத்திலே  
என்-போல் தினம்-தவிக்கும் நண்பர்களே
நம் முன்னோரின் சொல்லைக் கொஞ்சம் கேளுங்களேன் 
 (MUSIC)
கண்ணீர் தனைச்-சொரியும் தாய்மார்களே
உங்கள் உடல்-நோய்க்கு ஒரு-மாற்றைக் காணுங்களேன்
(2)
என்பூடிச் செல்லும்-பல நோய்-பின்னிலே
அதை முன்கூட்டித் தள்ளீர்-கொள்ளும் யோகத்திலே (2)
என்-போல் தினம்-தவிக்கும் நண்பர்களே
நம் முன்னோரின் சொல்லைக் கொஞ்சம் கேளுங்களேன் 
(MUSIC)
பொருள் நாடி மண்ணில் தினம் அலைகின்றனர் 
அந்தப் பெரும் பாட்டில் வாழ்நாளைக் கழிக்கின்றனர்
பொருள் நாடி மண்ணில் தினம் அலைகின்றனர் 
அதைப் பெறும் பாட்டைப் பேறாகக் களிக்கின்றனர்
நிஜமானத் தன்மை தன்னை மறக்கின்றனர்
அந்த அஹங்காரம் தன்னில் உண்மை மறக்கின்றனர்   
அந்தோ அஹங்காரம் தன்னில் உண்மை மறக்கின்றனர்
என்-போல் தினம்-தவிக்கும் நண்பர்களே
நம் முன்னோரின் சொல்லைக் கொஞ்சம் கேளுங்களேன் 
(MUSIC)
போர்த்-தேரின் தளம்-நின்று கீதை உரைத்தான்
அங்கு ஏனவன் யோகம்-தன்னை நன்கே-உரைத்தான்
(2)
வாழ்க்கையென்னும் போர்-முடித்து நன்றே-எழத்தான்
நம் படிப்பினைக்கு கீதை-தனில் யோகம் உரைத்தான்
போர்-முடிப்பதற்கு கீதை-தரும் யோகம் மட்டும்-தான்

என்-போல் தினம்-தவிக்கும் நண்பர்களே
நம் முன்னோரின் சொல்லைக் கொஞ்சம் கேளுங்களேன் 
திண்டாட்டம் மட்டும்-இக லோகத்திலே
அதைத் துண்டாடிடும் வழி யோகத்திலே
என்-போல் தினம்-தவிக்கும் நண்பர்களே
நம் முன்னோரின் சொல்லைக் கொஞ்சம் கேளுங்களேன் 


No comments:

Post a Comment