எப்பொழுது நமது-மனம் நின்று ஓய்வது
(1+SM+1))
அது எப்பொழுது-பதஞ்சலியின் யோகம் கொள்வது
ஆசை-கொண்டு மேதினியில் மாட்டிக்-கொண்டது (2)
அதுவாய் வெஞ்சிறையில் சென்று-தன்னைப் பூட்டிக் கொண்டது
எப்பொழுது நமது-மனம் நின்று ஓய்வது
(MUSIC)
தருமம் எனக்-கூறி நல் யோகம் தன்னைத் தந்தது
நாம்-செல்லப் பாதையுமாய் அதைத்-தானே சொல்லுது
(2)
போர்க்களத்தில் கண்ணனவன் யாருக்கென்று சொன்னது (2)
பார்த்தனுக்கு மட்டுமன்று நமக்கும்-தான் ஆகுது
(SM)
எப்பொழுது நமது-மனம் நின்று ஓய்வது
(MUSIC)
எக்கணமும் பிரியுமன்றோ உடலை-உயிர்
அதற்குள் இக்கணமே நீ-வளர்ப்பாய் யோகப்-பயிர்
(2)
என்னவெல்லாம் நமக்காகக் கொடுத்துச் சென்றார்
(SM)
என்னவெல்லாம் முன்னோர்கள் கொடுத்துச் சென்றார்
கணக்கு உட்கார்ந்து பார்க்க-யுகம் போகுமன்றோ
எப்பொழுது நமது-மனம் நின்று ஓய்வது
(MUSIC)
நமக்கென்று உய்யச்-சொல்லி பதஞ்சலி தந்ததய்யா
அதைக்-கொஞ்சம் எண்ணி-எண்ணி யோகம் கொண்டிட வா
(2)
உன் திறத்தில் ஏதுமில்லை என்பதனை உணர்ந்திடய்யா (2)
பள்ளி தரும் கல்வியிலே மெய்-கிடைப்பதில்லையய்யா
மெய் கிடைப்பதில்லை மெய்யாய்
எப்பொழுது நமது-மனம் நின்று ஓய்வது
எப்பொழுது நமது-மனம் நின்று ஓய்வது
அது எப்பொழுது பதஞ்சலியின் யோகம் கொள்வது
எப்பொழுது நமது-மனம் நின்று ஓய்வது
No comments:
Post a Comment