Tuesday, September 27, 2016

30. என்ன அந்த அதிசயமே (அந்தரங்கம் நானறிவேன்)



( சம்வாதம் )

என்ன-அந்த அதிசயமே சொல்லவொண்ணா ரஹசியமே (2)
அதிசயம் ஒன்றுமில்லை சாதனையும் ரஹஸ்யமில்லை
யோகம்-அதி..சயமுமில்லைச் சொல்லவொண்ணா ரஹஸ்யமில்லை
யோக-வழி நான்-அறிந்தேன் கண்டதனைத் தான்-உரைப்பேன் 
கண்ட-வழி நான் உரைப்பேன் சொன்னபடி நீ-புரிவாய்
யோகம்-அதி..சயமுமில்லைச் சொல்லவொண்ணா ரஹஸ்யமில்லை
(MUSIC)
தேடி-நல்ல மூலை-சென்று மூடிக்-கொண்ட கண்கள்
மறு நாள்-வரையில் விழிப்பதில்லை போம்மா-அது தூங்கல்
தேடி-நல்ல மூலை-சென்று மூடிக்-கொண்ட கண்கள்
மறு நாள்-வரையில் விழிப்பதில்லை ஆஹா-நல்லத் தூங்கல்
உண்மைதனைக் அறிந்திருக்கீர் த்யானம் யோகத்-தூங்கல்
உண்மை-நன்றே கூறிவிட்டீர் த்யானம் யோகத் தூங்கல்
எப்போதும் யோகத்திலே த்யானம்-விழிப்புத் தூங்கல்
உண்மையல்லவா உண்மையாகவா
நன்மையல்லவா இன்னும் சொல்லவா
என்ன-அந்த அதிசயமே சொல்ல-வொண்ணா ரஹசியமே
(MUSIC)
தாமரை-உன் தலை-முளைக்கும் என்று-சிலர் கூறி
என்னை-மூடனென்று ஆக்கிவிட்டார் உன்போல்-கதை கூறி
(2)
புரிந்தீரே கேலிகளைப் புரிந்தவரை போதும்
புரிந்தீர்-பல் சோதனைகள் புரிந்தவரை போதும்
இனியேனும் சாதனையைப் பூண்டிடவே பாரும்
உண்மையல்லவா உண்மையாகவா
நன்மையல்லவா இன்னும் சொல்ல வா
என்ன-அந்த அதிசயமே சொல்ல-வொண்ணா ரஹசியமே
*யோகம்-ஒரு அதிரசமே *உண்ண - உண்ண அதில் ரசமே ..


*தாமரை-உன் தலை-முளைக்கும்=யோக முதிர்ச்சியில் சஹஸ்ராரத்தில் ஆயிரம் இதழ்த் தாமரை எழுதல்.

* யோகம் ஒரு அதி ரசமே = யோகம் உன்னதமான ரசத்தைக் காட்டக் கூடியது. அதுவே ‘ஒன்று’ என்னும்படியான, எதிலும் ரசமாய் விளங்கும் பரப்ரம்மம் என்றே விளங்குகிறது.இதைத் தான் விஷ்ணு  ஸஹஸ்ரநாமம் இப்படிக் கூறுகிறது

பூதாத்மா பரமாத்மா ச முக்தானாம் பரமா கதி: |
அவ்யய புருஷ சாக்ஷி ஷேத்ரக்ஜ்ஞோ க்ஷர ஏவ ச:

எதிலுமுள்ள ரசமும்நீ ஆத்துமத்தி னுள்ளும்நீ
செல்லுமுயிர் முடிவதாக உள்ளுகின்ற இடமும் நீ
கொல்லுகின்ற படியிலாத இணையுமிலாப் புருடனே
இடமறிந்த மாட்சிநீ அழிவிலாத சாட்சிநீ

*உண்ண =உள் +
உள்’ளுதல்’ = மீண்டும் மீண்டும் நினைத்தல் , நன்கு மதித்தல்
ந=திருவடி (See below)
அதன்படி உண்ண-உண்ண என்பது  இறைவனின் திருவடியை யோக சாதனை மூலம் இடைவிடாது  த்யானம் புரிவது என்று பொருள்படும். அப்படி உண்ண-உண்ண (உள்ந-உள்ந ) இறை ரசமே , எழும் நிசமே.. இது நிசமே..!
பஞ்சாக்ஷர மஹா மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்தும் த்யான மெய்ப் பொருளாகும்.
ந=திருவடி,ம=திருஉந்தி,சி=திருடத்தோள்கள்,வா=திருமுகம்,ய=திருமுடி




No comments:

Post a Comment