இரவு-பகல் த்யானம்-என்று தூக்கம்-கொள்வது அதுதான்
யோகமா
என்று கேட்டுக்-கேட்டுக் கேலி-செய்தாய் அம்மா-ந்யாயமே
பதிலைக் கேட்டிடு அதில் தர்க்கம் விட்டிடு
(MUSIC)
உயர்ந்த-எதையும் ரசிக்கும்-பொழுது கண்கள்-என்றும் மூடும்
உன் நினைவு-கீழே இறங்கி-விட்டால் இமைகள்-மூட மறுக்கும்
(2)
அறியாதார் சொல்வாரே அதைத்-தூக்கம் என்று
த்யானம்-கொள்ள விழிப்பு-வரும் என்றே சொல்லுது
பதில் கீதை-சொல்லுது அது கண்ணன்-சொன்னது
இரவு-பகல் த்யானம்-என்று தூக்கம்-கொள்வது அதுதான்
யோகமா
என்று கேட்டுக்-கேட்டுக் கேலி-செய்தாய் அம்மா-ந்யாயமே
பதிலைக் கேட்டிடு அதில் தர்க்கம் விட்டிடு
(MUSIC)
சண்டை-போட வக்கிரங்கள் மட்டும்-உன்னில் தோன்றும்
அந்த நிலையில்-உனக்குத் த்யானம்-என்றால் தூக்கம்-போலத் தோன்றும்
உனைப்போலே அறியாமல் பல-நானும் கேட்டேன்
உயர்ந்தோர்கள் பொறையோடு எனக்குச் சொன்னது
அது பெருமை-கொண்டது பதில் நன்றே தந்தது
(MUSIC)
நீயும்-நானும் சேர்ந்திருந்தோம் இறைவனோடு-கூடே
யார் கண்-விழுந்து பிரிந்து-விட்டோம் அறியவில்லை-நாமே
இறையோனும் நமைப்-பார்த்துக் கேலி செய்தல்-போல
ஓர்-நொடியில் நமைப்-பிணைத்தான் தனி-உடலோடு
அதில் *தூக்கம்-வந்தது அது-இன்னும் தொடருது
இரவு-பகல் த்யானம்-என்று தூக்கம்-கொள்வது அதுதான் யோகமா
இரவு-பகல் த்யானம்-என்று தூக்கம்-கொள்வது அதுதான் யோகமா
என்று கேட்டுக்-கேட்டுக் கேலி-செய்தாய் அம்மா-ந்யாயமே
பதிலைக் கேட்டிடு அதில் யோகம் பூண்டிடு
*தூக்கம்=அறியாமை
FIRST PAGE
No comments:
Post a Comment