அடடா யோகத்தின் மேலது (2)
மண்ணில் உழன்றிடும்-உயிருக்கு வேறேது
அறிவாயே-அதனின் அட்டாங்கம் செல்லப் படியென-விளங்கும் அது-போதும்
அடடா யோகத்தின் மேலது
(MUSIC)
முதல்-முதலாய்க் கொள்ள *தார்மீகம்
தன்னை யமம்-எனவே சொல்லும் உயர்-யோகம்
யமம்.. முதல்-அங்கம்
(MUSIC)
அடுத்தது நியமங்கள் ஐந்தாகும்
அதில் தூய்மை-தவம்-த்ருப்தி மூன்றாகும்
முதலில் மூன்றாகும்
(SM)
சோதித்துப் பார்த்த்திடல் மேலாக்கும்
நல் சுய-பரி..சோதனை நேராக்கும்
அது நி..ய..மம் நான்காகும்
(SM)
ஐந்தாவதாய்-இன்னும் ஒரு-நியமம்
அது ஈஸ்வரன்-யாவும்-எனும் பொது-நோக்காம்
அதில்-நியமம் முடிவாகும்
(SM)
நீ-உனக்..கென-ஒன்றைத் தேர்ந்தெடுத்து-தன்னை எண்ணும் வண்ணம்-அமர்தல் ஒரு-அங்கம்
ஆசனம் அதுவாகும்
(SM)
மூச்சில்லை-என்றால் உயிர்-போகும்
அதைப் பார்த்திடலும்-ஒரு பெரும்-அங்கம்
ப்ராணாயாமம் அதுவாகும்
(SM)
புலன்-வழியே-என்றும் பாய்ந்தோடும்
மனம் எனும்-நிலை மாற்றிட ஒரு-அங்கம்
ப்ரத்யா..ஹரமாகும்
(SM)
மனதினை-ஓரிடம் நிலையாக்கும்
அந்த தாரணை-யோகத்தின் ஒரு-அங்கம் பெரும்-அங்கம்
(SM)
தாரணை-கொண்டு-நீ அமர்ந்தாயே-கண்
மூடி-நீ-அமர்ந்தது எதற்காக..த்யானம் தனில்-பார்க்க
(SM)
*விதி கடந்து-மன..மது-கடந்து-அவன் நினைவில்-நினைவே அவனாக
நினைவழிந்து-வரும் நிலை-தொடர்ந்து-வரும் உணர்வில்
உண்மை தெளிவாக
மூன்றும்-சேர்ந்து-ஒன்றாக நீ கொள்ள-வேண்டுவது அதுவாகும்..சமாதி முடிவாகும்
(MUSIC)
அடடா யோகத்தின் மேலது
அடடா யோகத்தின் மேலது
மண்ணில் உழன்றிடும்-உயிருக்கு வேறேது
அடடா யோகத்தின் மேலது
அடடா யோகத்தின் மேலது
வேறேது.. வேறேது.. வேறேது
*தார்மீகம்(யமம்)= அஹிம்சை,சத்யம்,கள்ளாமை,ப்ரரும்மச்சர்யம்,
அபரிக்ராஹம்(பிறர் பொருள் வேண்டாமை,பொறாமையின்மை,
பேராசையின்மை
*விதி கடந்து.. =கர்ம விளைவுகள் கடந்து , மனத்தின் எண்ண அலைகள் ஓய்ந்து இறைவனின் பால் கொண்ட த்யானத்தில் , த்யானம் என்னும் தொழில் , த்யானப் பொருள்,த்யானிப்பவர் மூன்றும் ஒன்றாவது சமாதி
No comments:
Post a Comment