ஆ ..ஆ..ஆ ..ஆ..
ஜீவன் *சிவனூடிக் கூடிடும்-அச்-சமாதியின்-பின்னர்
ஜீவன் *சிவனூடிக் கூடிடும்-அச்-சமாதியின்-பின்னர்
இரண்டென வேறேதும் இல்லையே
(1+SM+1)
இன்னும் அதன்-மேலே நாம்-போகப் பாதை-இல்லையே
பின்பு-எல்லாமே அன்பு-வெள்ளமே
இன்னும் அதன்-மேலே நாம்-தேடத் தேவை-இல்லையே
ஒன்றும் சொல்லாமல் *ஒன்று தோன்றுமே
ஜீவன் சிவனூடிக் கூடிடும்-அச்-சமாதியின்-பின்னர்
இரண்டென வேறேதும் இல்லையே
(Music)
கண்கள்-மூடியும் பார்த்திடும்-தாளை
எண்ணங்கள்-ஓடியே கூடிடும்-வேளை
(2)
அந்தச்-சமாதியில் கலந்த-பின்னாலே
வெறுமே இருக்காமல் வேறென்ன-வேலை
(2)
பின்னே-தெரியுமா உலகமும்-உடலுமே ?
(Pause)
*பின்னே தெரியுமா உலகமும் உடலுமே
இருந்தாலும் இருக்காதே *கூடினாலே
அந்த உலகாளும் சிவமோடுக் கூடினாலே
என்றும் உன்னில்-மேலோனின் எண்ணமே
(MUSIC)
ஓ …. ஆ ..ஆ..ஆ ..ஆ..
(MUSIC)
மோனச் சமாதியில் ஆனந்தம் பொங்கும்(MUSIC)
யோகி-உன் இதயமோ ஸ்வாமியின்
சொந்தம்
அதன்-பின் உன்னிடம் ஆனந்தம்
பொங்கும்
அன்பின் இதயமோ ஸ்வாமியின்
சொந்தம்
(2)
நினைவில் ஊறுவான் அதுவாய் மாறுவான்
நெஞ்சின் நினைப்பெலாம் நிறைந்தவன் தோன்றுவான்
(2)
வேறே வேண்டுமோ ஆசையும் தோன்றுமோ
(2)
வேண்டாது தோன்றாது பிறகு-வேறே
ஏதும் வேண்டாது தோன்றாது பிறகு-வேறே
ஜீவன் சிவனூடிக் கூடிடும்
ஜீவன் சிவனூடிக் கூடிடும்
நல்-சமாதியே வாழ்வின் நோக்கம்-
தான் வேறு இல்லையே
வேறு எதுவேண்டும் வாழ்-நாளில்
இன்ப வெள்ளமே
பின்பு எந்நாளும் அன்பு-வெள்ளமே
ஆ ..
ஜீவன் சிவனூடிக் கூடிடும் (3)
அச்-சமாதியின்
பின்னர்
தனியே நான்-ஏதும் இல்லையே
சிவனூடி =சிவனுக்குள்ளே ஊடி இரண்டற (சிவனோடு அல்ல,அதில் இருமை தெரிகிறது. ஊடி(புகுந்து) கலத்தலில் ஒருமை தோன்றுகிறது)
*கூடினாலே=சமாதியில் கூடினால்
*கூடினாலே=சமாதியில் கூடினால்
மேலோன்= யோக ராஜன் சிவன்
*ஒன்று தோன்றுமே = ஒன்றான ப்ரம்மம்
*தெரியுமா உலகமும்-உடலுமே=தெரியும் + மா (உலகமும் உடலும்) எனக்கொள்க.
மா உலகம் = பிரபஞ்சம் ,மா உடல் = விஸ்வரூபம்
*தெரியுமா உலகமும்-உடலுமே=தெரியும் + மா (உலகமும் உடலும்) எனக்கொள்க.
மா உலகம் = பிரபஞ்சம் ,மா உடல் = விஸ்வரூபம்
No comments:
Post a Comment