Tuesday, September 27, 2016

36 உடலுக்குள்-உணர்வே (மலருக்குத் தென்றல் பகையானால்)

விருத்தம்
வேறெதுமே வழியிலையே
வளர்ந்து வரும் கலியினிலே
உழன்றிடுவோர்  வாழ்வினிலே
 யோகமன்றி வேறிலையே
வேறெதுமே வழியிலையே
_______________

உடலுக்குள்-உணர்வே உன்-ஆன்மா-அதைக் கண்டிடு-யோகத்தின் துணை-கொண்டு
(1+SM+1)
* உலகத்தில்-தேடும் ஒரு-மானாய்-நீ வாழ்வதனாலே பயன்-ஏது
உடலுக்குள்-உணர்வே உன்-ஆன்மா அதைக் கண்டிடு-யோகத்தின் துணை-கொண்டு
(MUSIC)
உடலுக்குச் சுகமுன் நினைப்பானால் பின் முதுமையால்-பெரும் சோகம்-உண்டு
(2)
உடலைக்-க..டந்தே நீ-போ..னால்-உன்னை -
யாரென அறிந்திடும் வழி-உண்டு
உணர்வுக்குள்-த்யானம் தனில்-போனால் அதில் கிடைப்பதைக்  கூற மொழி-ஏது
உடலுக்குள்-உணர்வே உன்-ஆன்மா அதைக் கண்டிடு-யோகத்தின் துணை-கொண்டு
(MUSIC)
உடல்-தனை விடுத்து நீ-போனால் அங்கும் யோகத்தினாலே உதவி-உண்டு
யோகத்தை-முடித்து நீ-போனால் அந்த யோகத்தினால்-மேல் பதவி-உண்டு
உடலுக்குள்-நீயே ஒரு-ஆளாய்ப்-பின்பு புகுந்திடும் நிலை-என்றும் கிடையாது
உடலுக்குள்-உணர்வே உன்-ஆன்மா அதைக் கண்டிடு-யோகத்தின் துணை-கொண்டு
(MUSIC)
கண்ணுக்குப்-பார்வை ஒளி-ஆனால் அது-குருடாய் மாறிட இருள்-உண்டு
உள்ளுக்குள்-யோகம் தனில்-போனால் அந்த-யோகியின் வாழ்வில் இருள்-ஏது 
(Short Music)
 உடலுக்குள்-உணர்வே உன்-ஆன்மா-அதைக் கண்டிடு-யோகத்தின் துணை-கொண்டு
உலகத்தில்-தேடும் ஒரு-மானாய்-நீ வாழ்வதனாலே பயன்-ஏது 
உடலுக்குள்-உணர்வே உன்-ஆன்மா அதைக் கண்டிடு-யோகத்தின் துணை-கொண்டு
(BOTH)

*கஸ்தூரி மான் தன்னுள்ளிருந்து மணம் வருகிறது என்று தெரியாமல் அதை வெளியே உலகத்தில் தேடும்.

No comments:

Post a Comment