Thursday, September 22, 2016

** இதோ அருளுதே (ப்ரபோ கணபதே- கடவுள் வாழ்த்து)



விருத்தம்
(வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்)

காக்கும் தாள் .. வந்து உதவும் தாள்  (2)
*நான் மலராய் பூக்கும் தாள்
மேனி..யிடம்-கோது நெருங்காது ஒன்றாய் உருமாறி பதஞ்சலியார் யோகம் நன்றாகக் கொள்வார் தமக்கு
__________
இதோ அருளுதே குரு முழுமுதற் கடவுளின் தாளே
இதோ அருளுதே குரு-முழுமுதற் கடவுளின் தாளே
இதோ அருளுதே குரு-பதஞ்சலி யோகத்தின் தாளே
(2)
இதோ அருளுதே அருளுதே
(MUSIC)
சோர்ந்துச் சுணங்கி-மதி வாடி வதங்கி-மன நிம்மதி தனைஇழந்தோரே (2)
கலக்கம் விடுத்து வந்தே-இங்கு யாவரும் (2)
யோகத்தைக் கொண்டிடுவீரே (2)
இதோ அருளுதே குரு-முழுமுதற் கடவுளின் தாளே
இதோ அருளுதே குரு-பதஞ்சலி யோகத்தின் தாளே
இதோ அருளுதே
(MUSIC)
தேடித-தேடி எங்கோ ஓடணுமா
தேடித-தேடி எங்கோ ஓடணுமா-நம்மைத் தேடி வந்த-குரு பாரீர்
தேடித-தேடி எங்கோ ஓடணுமா-நம்மைத் தேடி வந்த உண்மை பாரீர்
கோடி-கோடிப் பொருள்-யாவினும் உயர்ந்தநல் (2)
மெய்ப்பொருள் தரும் குரு பாரீர் .. மெய்ப்பொருள் குரு தருவாரே
இதோ அருளுதே குரு-முழுமுதற் கடவுளின் தாளே
இதோ அருளுதே குரு-பதஞ்சலி யோகத்தின் தாளே
இதோ அருளுதே
(MUSIC)
ஜோதி-ரூபம் என ஆன-சிதானந்த அற்புத ரூபத்தைக் காணீர் (2)
நாத-ப்ரம்மம்-என ஒலித்திடும் ஓம்-எனும் (2)
தன்-மய ப்ரணவத்தைக் கேளீர் (2)
இதோ அருளுதே குரு-முழுமுதற் கடவுளின் தாளே
இதோ அருளுதே குரு-பதஞ்சலி யோகத்தின் தாளே..


*நான் மலராய் பூக்கும் தாள் =பதஞ்சலி யோகத்தின் சமாதி,சாதன,விபூதி,கைவல்யம் எனும்  நான்கு பாதங்கள்
  

FIRST PAGE


No comments:

Post a Comment