Thursday, September 22, 2016

** மெய்ப்பொருள் தா தா (ஓம் குருநாதா - குரு வணக்கம் )



மெய்ப்பொருள் தா தா  மெய்ப்பொருள் *தாதா
சரணம் சரணம் குருதேவா
(2)
ஊனுடலின்-உயிர் உள்ளுக்குள்ளே-உயிர் தந்தது யார்-சொல் குருநாதா
விந்தையிலும் பெரும் விந்தையென்றாகிய சிந்தையிலே நில் குருநாதா

மெய்ப்பொருள் தா தா  மெய்ப்பொருள் *தாதா
சரணம் சரணம் குருதேவா
(2)
பார்த்துவிட்டேன்-உனைப் பார்த்ததுவே-என் பாக்கிய..மே குருநாதா (2)
யார் தருவார் குருபத தரிசன ஆனந்தமே குருநாதா
யார் பெறுவார் குருபத தரிசன ஆனந்தமே குருநாதா

மெய்ப்பொருள் தா தா  மெய்ப்பொருள் *தாதா
சரணம் சரணம் குருதேவா
(2)
சத்யம் புரிந்து-நல் சபதமும்-ஏற்கிறேன் உன்னெதிரே குருநாதா
நித்தியம் நன்றாய் யோகமும் புரிந்திட உன்னருள் தா குருநாதா


* தாதா = வள்ளல்


FIRST PAGE

No comments:

Post a Comment