Showing posts with label காவேரி ஓரம். Show all posts
Showing posts with label காவேரி ஓரம். Show all posts

Friday, July 3, 2015

1.16. நீ வேறு அல்ல (காவேரி ஓரம்)

(காவேரி ஓரம்)

நீ-வேறு அல்ல *அவன்-வேறு அல்ல
என-உண்மை தனைக்-கூறுவார் அன்பே உன்-ரூபம் எனக்-கூறுவார்
இந்த மறைகூறும்-உண்மை மறவாத-நெஞ்சை
திடமான நிலை கூடுமாம்-அதிலே வைராக்கியம் உருவாகுமாம்
நீ-வேறு அல்ல *அவன்-வேறு அல்ல
என-உண்மை தனைக்-கூறுவார் அன்பே உன்-ரூபம் எனக்-கூறுவார்
(MUSIC)

பொருள்வேண்டி நீயும் புரிகின்ற-போது அது-பூஜை என-ஆகுமா
அவனின் அருள்வேண்டி-நெஞ்சே அழுகின்ற-நிலையைத் தரவேண்டி நீ கோருவாய்
சேவை தனின்-யாகத் தீ-மூட்டுவாய் அன்பை அவியாக அதில்- ஊற்றுவாய்
இந்த உலகான-மாயை தருகின்ற-ஆசைத்
தளை-போக்க அருள் கோருவாய் அதிலே வைராக்யம் வரக் காணுவாய்
நீ-வேறு அல்ல *அவன்-வேறு அல்ல
என-உண்மை தனைக்-கூறுவார் அன்பே உன்-ரூபம் எனக்-கூறுவார்
(MUSIC)

எது-உண்மை என்று புரியாத-போது அவன்-பாதம் தனை-நாடுவாய்
செய்கை பலன்-யாவும் அவனின் பதம்-தன்னில் பெய்து
*உனதானச் செயல் கொள்ளுவாய்
அன்பின் மொழிபேசி இனிப்பூட்டுவாய்
சேவை தனைக் கையில் நீ-பூணுவாய்
இந்த இரு-போதம் போதும் திரு-வேத சாரம்
இது காட்டும் வழி நாடுவாய்-உந்தன் இலக்கை-நீ போய்ச் சேருவாய்
நீ-வேறு அல்ல *அவன்-வேறு அல்ல
என-உண்மை தனைக்-கூறுவார் அன்பே உன்-ரூபம் எனக்-கூறுவார்
 
*அவன்= இறைவன் *உனதானச் செயல்=கடமை
 
 _____________