Monday, August 8, 2016

2 எண்பதிலே-கூன் திரை(தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்) **

எண்பதிலே-கூன் திரை-விழுந்தானதும் யோகத்தில் பலனுமுண்டோ 
வெறும் ஒன்பதிலே-ஏன் யோகமும்-என்னும் வாதம் சிறிதும் நன்றோ
(2)
(Short Music)

நஞ்சை-என்றாலும் உழுவதில்லாமல் விளைச்சல்-தருவதுண்டோ (2)
சிந்தையும்-உடலும் பண்பட-யோகம்  உழுதல் போல-அன்றோ 
யோகம் போல-உண்டோ  
எண்பதிலே-கூன் திரை-விழுந்தானதும் யோகத்தில் பலனுமுண்டோ 
வெறும் ஒன்பதிலே-ஏன் யோகமும்-என்னும் வாதம் சிறிதும் நன்றோ
(MUSIC)

துன்பமில்லாமல் நிம்மதி-வாழ்வில் தவழ வழியில்லையா (2)
எனும் கேள்விக்குப் பதிலாய் பதஞ்சலி-வகுத்த யோகம் திகழுதய்யா
யோகம் திகழுதய்யா
எண்பதிலே-கூன் திரை-விழுந்தானதும் யோகத்தில் பலனுமுண்டோ 
வெறும் ஒன்பதிலே-ஏன் யோகமும்-என்னும் வாதம் சிறிதும் நன்றோ
(MUSIC)
காலம்-கடத்தாமல் யோகமதைச்-செய்யும் பாதை தனை-நாடுவாய் (2)
அது காட்டும் உனை என்று நல்ல முனைப்போடு ராஜ நடை போடுவாய் 
ராஜ நடை போடுவாய்
எண்பதிலே-கூன் திரை-விழுந்தானதும் யோகத்தில் பலனுமுண்டோ 
வெறும் ஒன்பதிலே-ஏன் யோகமும்-என்னும் வாதம் சிறிதும் நன்றோ

No comments:

Post a Comment