(சம்வாதம்)
உலகினிலே ஏதுமில்லை உணருவாயம்மா
இதை லயித்து-உணர்ந்து துறவிகளே கூறினார்-அம்மா
உலகினிலே ஏதுமில்லை உணருவாயம்மா
இதை நினைத்து-உணர்ந்து யோகக்கலை பூணுவாயம்மா
யோகக்கலை போதுமென்று கூறினாய்-அக்கா
ஒரு இடத்தில்-அமரல் நன்மை-என்று நம்ப-நான் மக்கா
துறவிகளே சொன்னதென்று கூறினாய்-அக்கா
அவர் ஓடிச்-செல்வம் தேடத்-தேவை இருக்குதா-அக்கா
யோகக்கலை போதுமென்று கூறினாய்-அக்கா
ஒரு இடத்தில்-அமரல் நன்மை-என்று நம்ப-நான் மக்கா
(MUSIC)
செல்வம்-தேவை இல்லையென்று சொல்லலை அம்மா (2)
செல்வத்தையே தேடிடத்தான் சொல்கிறேன் அம்மா
நானும் செல்வத்தையே தேடிடத்-தான் சொல்கிறேன் அம்மா
அமர்ந்திருந்தால் செல்வம்-வந்து சேருமா-அக்கா
சொல்லு அமர்ந்திருந்தால் செல்வம்-வந்து சேருமா-அக்கா
என்றும் கண்ணை மூடிக்கொண்டிருந்தால் ஆகுமா-அக்கா
பலதடவை கேட்டுவிட்டேன் போதுமே-அக்கா
இதை மறுபடியும் கேட்கச்-சொன்னால் முடியுமா-அக்கா
யோகமெல்லாம் எனக்கு இல்லை உனக்குத்தான் அக்கா
அது இளமைத் துடிப்பில் இருக்கும் எனக்கு எதுக்கு சொல் அக்கா
(MUSIC)
நானும்-உன்போல் கூறிவந்தேன் அறிந்திடாய் அம்மா (2)
பின் நானும்-யோகம் செய்து-உண்மை அறிந்திட்டேன் அம்மா
பின்னால் நானும்-யோகம் செய்து-உண்மை அறிந்திட்டேன் அம்மா
எனக்கதெல்லாம் தினமும்-செய்ய முடியுமா-அக்கா (2)
அட என்ன-செய்ய நீயும்-சொல்லு முயல்கிறேன்-அக்கா
சொல்லுகிறாய் என்று-நானும் முயல்கிறேன்-அக்கா
நான் இதுவரையில் செய்ததில்லை சொல்லித் தா அக்கா
(MUSIC)
இன்றுவரை நடந்ததெல்லாம் போகட்டும்-அம்மா (2)
இனி சற்றேனும் அமர்ந்து-யோகம் கொள்ளு-நீ அம்மா
இனி சற்றேனும் அமர்ந்து த்யானம் கொள்ளு-நீ அம்மா
சொல்லுகிறாய் என்று-நானும் முயல்கிறேன்-அக்கா (2)
சில நிமிடமேனும்-யோகம் த்யானம் புரிகிறேன்-அக்கா
இன்று முதல் யோகம் செய்ய முயல்கிறேன் அக்கா
நீ சொல்லித் தந்தால் கொஞ்ச நேரம் செய்கிறேன் அக்கா
உலகினிலே ஏதுமில்லை உணருவாயம்மா
இதை லயித்து-உணர்ந்து துறவிகளே கூறினார்-அம்மா
உலகினிலே ஏதுமில்லை உணருவாயம்மா
இதை நினைத்து-உணர்ந்து யோகக்கலை பூணுவாயம்மா
யோகக்கலை பெருமையினைக் கூறினாய்-அக்கா
அதை அறிந்திடாமல் இதுவரையில் இருந்திட்டேன் மக்கா
அந்த ஆன்மச் செல்வம் தன்னை துறந்து இருந்திட்டேன் மக்கா
யோகக்கலை பெருமையினைக் கூறினாய்-அக்கா
அதைப் புரிஞ்சுக்கிட்டேன் பிடிசிச்சுக்கிட்டேன் உடும்பு போல் சிக்கா
FIRST PAGE
No comments:
Post a Comment