Showing posts with label வளர்ந்த கலை மறந்து விட்டாள். Show all posts
Showing posts with label வளர்ந்த கலை மறந்து விட்டாள். Show all posts

Tuesday, September 13, 2016

21. உலகினிலே ஏதுமில்லை (வளர்ந்த கலை மறந்து விட்டாள்) **


(சம்வாதம்)

உலகினிலே ஏதுமில்லை உணருவாயம்மா
இதை லயித்து-உணர்ந்து துறவிகளே கூறினார்-அம்மா
உலகினிலே ஏதுமில்லை உணருவாயம்மா
இதை நினைத்து-உணர்ந்து யோகக்கலை பூணுவாயம்மா
யோகக்கலை போதுமென்று கூறினாய்-அக்கா
ஒரு இடத்தில்-அமரல் நன்மை-என்று நம்ப-நான் மக்கா
துறவிகளே சொன்னதென்று கூறினாய்-அக்கா
அவர் ஓடிச்-செல்வம் தேடத்-தேவை இருக்குதா-அக்கா
யோகக்கலை போதுமென்று கூறினாய்-அக்கா
ஒரு இடத்தில்-அமரல் நன்மை-என்று நம்ப-நான் மக்கா
(MUSIC)
செல்வம்-தேவை இல்லையென்று சொல்லலை அம்மா (2)
செல்வத்தையே தேடிடத்தான் சொல்கிறேன் அம்மா
நானும் செல்வத்தையே தேடிடத்-தான் சொல்கிறேன் அம்மா
அமர்ந்திருந்தால் செல்வம்-வந்து சேருமா-அக்கா
சொல்லு அமர்ந்திருந்தால் செல்வம்-வந்து சேருமா-அக்கா
என்றும் கண்ணை மூடிக்கொண்டிருந்தால் ஆகுமா-அக்கா
பலதடவை கேட்டுவிட்டேன் போதுமே-அக்கா
இதை மறுபடியும் கேட்கச்-சொன்னால் முடியுமா-அக்கா  
யோகமெல்லாம் எனக்கு இல்லை உனக்குத்தான் அக்கா 
அது இளமைத் துடிப்பில்  இருக்கும் எனக்கு எதுக்கு சொல் அக்கா
(MUSIC)
நானும்-உன்போல் கூறிவந்தேன் அறிந்திடாய் அம்மா (2)
பின் நானும்-யோகம் செய்து-உண்மை அறிந்திட்டேன் அம்மா
பின்னால் நானும்-யோகம் செய்து-உண்மை அறிந்திட்டேன் அம்மா
எனக்கதெல்லாம்  தினமும்-செய்ய முடியுமா-அக்கா (2)
அட என்ன-செய்ய நீயும்-சொல்லு முயல்கிறேன்-அக்கா
சொல்லுகிறாய் என்று-நானும் முயல்கிறேன்-அக்கா 
நான் இதுவரையில் செய்ததில்லை சொல்லித் தா அக்கா 
(MUSIC)
இன்றுவரை நடந்ததெல்லாம் போகட்டும்-அம்மா (2)
இனி சற்றேனும் அமர்ந்து-யோகம் கொள்ளு-நீ அம்மா
இனி சற்றேனும் அமர்ந்து த்யானம் கொள்ளு-நீ அம்மா
சொல்லுகிறாய் என்று-நானும் முயல்கிறேன்-அக்கா (2)
சில நிமிடமேனும்-யோகம் த்யானம் புரிகிறேன்-அக்கா
இன்று முதல் யோகம் செய்ய முயல்கிறேன் அக்கா 
நீ சொல்லித் தந்தால் கொஞ்ச நேரம் செய்கிறேன் அக்கா 

உலகினிலே ஏதுமில்லை உணருவாயம்மா
இதை லயித்து-உணர்ந்து துறவிகளே கூறினார்-அம்மா
உலகினிலே ஏதுமில்லை உணருவாயம்மா
இதை நினைத்து-உணர்ந்து யோகக்கலை பூணுவாயம்மா
யோகக்கலை பெருமையினைக் கூறினாய்-அக்கா 
அதை அறிந்திடாமல் இதுவரையில் இருந்திட்டேன் மக்கா
அந்த ஆன்மச் செல்வம் தன்னை துறந்து இருந்திட்டேன் மக்கா
யோகக்கலை பெருமையினைக் கூறினாய்-அக்கா
அதைப் புரிஞ்சுக்கிட்டேன் பிடிசிச்சுக்கிட்டேன் உடும்பு போல் சிக்கா




FIRST PAGE