Friday, September 16, 2016

26. எதால் அந்த விதியை வெல்லலாம் (மகாராஜன் உலகை ஆளலாம்)



எதால்-அந்த விதியை வெல்லலாம்
சொல்லு எதால்-பந்தச் சதியை-வெல்லுவாய்
எதால்-அந்த விதியை-வெல்லலாம்
(VSM)
பிறந்து-வாட இறந்து-ஓட என்று-உலகில் வாழலா
அதனை-வென்று பிறவி-நின்று முடிவை-என்று காணலாம்
விடாதே-நீ யோகம்-பூணுவாய்
அதில் சதா-நீயும் த்யானம் கொள்ளுவாய்
விடாதே-நீ யோகம்-பூணுவாய்
(VSM)
அவனைக்-காண அதனைப்-பூண அறிஞர்-யாரும் கூறினார்
உடலைத்-தள்ள எமனை-வெல்ல இதனைத்-தானே கூறினார்
யோகம்-பூணக் கூறினார்
விடாதே-நீ யோகம்-பூணுவாய்
 (MUSIC)
நாலு-பக்கம் வினைகள்-சாட ஜீவனும்-அஞ்சும்
அதன்-நடுவினிலே சென்றிடுமோ யோகத்தில்-நெஞ்சம்
வீண்-கலக்கம் பயத்தினையே விட்டிடு-கொஞ்சம்
நல்ல-குருவினையே தேடி-அடை அவரடி தஞ்சம்
ஏதந்த  குரு எனக்கும்
  பார்ப்பாய் வழி கிடைக்கும்
யோகத்தை உரை எனக்கும் 
நேரம் அதைக்-கொடுக்கும்
ஆ..
எதால்-அந்த விதியை-வெல்லலாம்
(MUSIC)
கண்ணன்-அன்று கீதையிலே சொல்லவில்லையா
அது-பார்த்தனுக்கு மட்டும்-இல்லை நமக்கும்-தானய்யா
 எள்ளளவும் இல்லை-ஞானம் எனக்கு-கீதையா
என்னை எள்ளல்-விடும் புரிவது-போல் ஒன்றைச் சொல்லையா 
கீதையது பொது-எவர்க்கும்
அதை-எது புரியவைக்கும்
உன்னறிவு அதைக்-கொடுக்கும்
முயல்கிறேன் நன்றி-உனக்கும்
ஆ..

எதால்-அந்த விதியை-வெல்லலாம்…


No comments:

Post a Comment