Tuesday, September 27, 2016

31. எல்லாமும் உள்ளே உண்டு (பிச்சாண்டி தன்னைக் கண்டு )




எல்லாமும் உள்ளே-உண்டு கண்டு கொள்ளுங்கள் 

எங்கும் இருக்கும் பரம்பொருள்- தாள் கண்டு உய்யுங்கள்
(SM)
எல்லாமும் உள்ளே-என்று கண்டு-உய்யுங்கள்
உண்மை அறிய-முயற்சியினால் யோகம்-கொள்ளுங்கள்
எச்சமயத்தும்-மனத்தில் அன்பு வையுங்கள்
சென்று நல்ல-குரு..விடத்தில்யோ-கம் கல்லுங்கள்
*அந்த ஈசனது யோகம்-கொண்டு நன்கு-உய்யுங்கள்
உங்கள் கையிரண்டு கொண்டு-என்றும் தொண்டு செய்யுங்கள்
எல்லாமும் உள்ளே-என்று கண்டு-உய்யுங்கள்
உண்மை அறிய-முயற்சியினால் யோகம்-கொள்ளுங்கள்
(MUSIC)
எப்பவும் முடியாது இன்று-செய்யுங்கள்
அப்போதைக்..கிப்போதே நன்று-செய்யுங்கள்
(Very Short Music)
பித்தனைப் போல் நாளும் தேம்பி-அழுங்கள்
இப்போதே அவன் தாளைத் தேட-எழுங்கள்
(VVSM)
புத்தியெனும் கத்திதனைக் கையிலெடுங்கள்
மெய்யில் ஒட்டியுள்ள கேடு-தன்னை  வெட்டி-விடுங்கள்
மெய்யின் *ஐம்புலனின் தேடுதலை வெட்டி-விடுங்கள்
எல்லாமும் உள்ளே-என்று கண்டு-உய்யுங்கள்
உண்மை அறிய-முயற்சியினால் யோகம்-கொள்ளுங்கள்
(MUSIC)
ஆண்டவன் என்று-சிலை தன்னை-அழைத்தோம்
வேண்டிப் பொருள்-ஒன்றே அங்கு-விழைந்தோம் 
நம்மிடத்தில் உள்ளதய்யா நல்ல செல்வம்
பொன் ஆத்திரத்தில் மறந்து-விட்டோம் ஐயோ-பாவம்
பொன் ஆத்திரத்தில் இழந்து-விட்டோம் ஆன்ம-லாபம்
எல்லாமும் உள்ளே-என்று கண்டு-உய்யுங்கள்
உண்மை அறிய-முயற்சியினால் யோகம்-கொள்ளுங்கள்
(MUSIC)
ஐம்புலன் ஆசை-பின்னால் பறந்து-சென்றோம்
அங்குக் கையேந்திப் பிச்சை-சிறு இன்பத்தைக் கொண்டோம்
ஐம்புலன் ஆசை-பின்னால் பறந்து-சென்றோம்
அது கோலோச்சிப் பிச்சை-தந்தால் பெற்றுக்-கொள்கின்றோம்
ஐந்தறிவாக-அந்தோ நடந்து கொண்டோம்
நாம் பேரின்ப-ரூபம் அதை மறந்து-விட்டோம்
நாம் தான் ப்ரம்ம ரூபம்-அதை உணர்ந்து கொள்வோம்
எல்லாமும் உள்ளே-என்று கண்டு-உய்யுங்கள்
உண்மை அறிய-முயற்சியினால் யோகம்-கொள்ளுங்கள்


*அந்த ஈசனது யோகம்=சிவபெருமான் அருள யோக ஞானத்தைப் பதஞ்சலி முனிவர் ஈசனிடமிருந்து நேரடியாகப் பெற்றார்
*அத்தனை =அப்பனை-பெருமானை

*ஐம்புலனின் தேடுதல்=புலன் வழிச் சிற்றின்பம் 


FIRST PAGE

No comments:

Post a Comment