Wednesday, September 28, 2016

38. தாள் வராதா (ஸ்ரீகணேசா)

கா..ட்சி வருமா பேரொளி எழுமா என் மனம் அதில் விழுமா 
ப்ரபோ பிறப்பிறப்பறுந்திடுமா 
(2)
நானுள்ளே பார்த்தால் நீ எனைப் பார்ப்பாய்
நான்-எனைப் பார்த்தால் நீ எனைப் பார்ப்பாய்
நான்-தனைப் பார்த்தால் நீ உண்மை பார்ப்பாய்
என-முனி பதஞ்சலி சொல்லி..னாரய்யா  
நானாய் எனை-நான் பார்த்தல்-நி..கழுமா 
கா..ட்சி வருமா பேரொளி எழுமா என் மனம் அதில் விழுமா 
ப்ரபோ பிறப்பிறப்பறுந்திடுமா 
இப்புவிச் சுகம்-தனை முற்றும் துறந்தால் (3)
பக்தரின் நெஞ்சினில் ஜோதி-தோன்றுமாம்
சொன்ன படியெல்லாம் எனக்கு நடக்குமா 
கா..ட்சி வருமா பேரொளி எழுமா என் மனம் அதில் விழுமா 
ப்ரபோ பிறப்பிறப்பறுந்திடுமா 
கொக்குடை மனத்தால் சிக்கெனப் பிடித்தால் (3)
சிக்கிடு..வாய்-என மணிவா..சகனார்
சொன்னபடியெலாம் எனக்கு முடியுமா
கா..ட்சி வருமா பேரொளி எழுமா என் மனம் அதில் விழுமா 
ப்ரபோ பிறப்பிறப்பறுந்திடுமா 
சத்சங்க சாதுக்கள் தன்னுடன் இருந்தால் (3)
கொஞ்சமேனும் சிதானந்தம் பெறுவாய்
என்று-உரைத்தால் எனக்கும் பொருந்துமா
கா..ட்சி வருமா பேரொளி எழுமா என் மனம் அதில் விழுமா 
ப்ரபோ பிறப்பிறப்பறுந்திடுமா 
ஸ்ரீ-கைலாசபு..ரம்-அது வேண்டாம்
ஸ்ரீ-வை..குண்..டத்தில்பதவியும் வேண்டாம்
ஸ்ரீ-கைலாச-வை..குண்டமும் வேண்டாம்
என் மனக் கண்ணின் முன்னே உன் தாள் காட்டிடு ஈசா
 என் ஜெபப் பலனாய் பாதம்-எழாதா
கா..ட்சி வருமா பேரொளி எழுமா என் மனம் அதில் விழுமா 
ப்ரபோ பிறப்பிறப்பறுந்திடுமா 
ஈசா ஈசலாய்த் தோன்றுது எண்ணங்கள் (2)
*ஸ்வாமீ உன்னடி நினைப்பதை தடுக்குது
உன்னடி எழுமா தயை புரி  தேவா.. என்னுளே வா வா
கா..ட்சி வருமா பேரொளி எழுமா என் மனம் அதில் விழுமா 
ப்ரபோ பிறப்பிறப்பறுந்திடுமா 
(4)

ஈசா ஈசலாய்த் தோன்றுது எண்ணங்கள்
*ஸ்வாமீ உன்னடி நினைப்பதை தடுக்குது =
1) உன்னுடைய திருவடியை நினைப்பதை ஈசலாய்த் தோன்றும் பல் எண்ணங்கள் தடுக்கின்றன. நீ அவ்வெண்ணங்களை , உன் திருவடி நிழலால் எழாமல்  தடுத்திடு
2) உன்னுடைய திருவடி நினைப்பு  ஈசலாய்த் தோன்றும் பல் எண்ணங்களைத் தடுக்கிறது . எனவே உன் திருவடியை என் த்யானத்தில் காட்டிடு.

No comments:

Post a Comment