Sunday, June 28, 2015

1.10. சத்தம் அடங்கும் உறக்கத்திலும்(எண்ணப் பறவை சிறகடித்து)

(எண்ணப் பறவை சிறகடித்து)
 
 அபாவ - பிரத்யயாலம்பனா 
வ்ருத்திர்நித்ரா 
தூக்கம் 
மனது எண்ண-அலை இல்லையென்று உணரும் நிலை தூக்கமாகும் 
 
சத்தம்-அடங்கும் உறக்கத்திலும் எண்ணம் இருக்குதய்யா
உன் நினைவினிலே தூங்குகிறேன் என்றே பிறக்குதய்யா
(1+Short Music+1)
(MUSIC)
தென்றல் வீசும் பூங்காற்றிங்கே செடியால் பிறக்கின்றதா (2)
இல்லை வீசிடும்-காற்றில் மிக-அழகாக செடியும்-அசைகிறதா (2)
(MUSIC)
ஒன்றனுக்-கொன்றாய் உள்ளது-காற்றாய் இருப்பது புதிரில்லையா
எண்ணம்-அதுபோல் உறக்கத்திலும் இருக்குது அறிந்திடையா
சத்தம்-அடங்கும் உறக்கத்திலும் எண்ணம் இருக்குதய்யா
உன் நினைவினிலே தூங்குகிறேன் என்றே பிறக்குதய்யா
(MUSIC)
பூமியின்-மேலே நடப்பதைப்-போலே யாவும் நடக்கணுமா (2)
உந்தன் புலன்களினாலே உணர்வது-ஒன்றே உண்மை ஆகணுமா (2)
(SHORT MUSIC)
உன்னுடல்-உள்ளே உன்னுயிர்-உள்ளே உண்மை இருக்குதையா
நீ அமைதியுடன் தவம்-கொள்ள அதுவும் தெரியுமையா
சத்தம்-அடங்கும் உறக்கத்திலும் எண்ணம் இருக்குதய்யா
உன் நினைவினிலே தூங்குகிறேன் என்றே பிறக்குதய்யா
 
______________
 
No comments:

Post a Comment