Friday, June 26, 2015

1.5. எண்ணங்களின் கடலாகும் மனது(எண்ணிரண்டு பதினாறு வயது)

வ்ருத்தய பஞ்சதய்ய :
க்லிஷ்டாக்லிஷ்டா: ||
மன அலைகள் ஐந்து வகை  
மன அலைகள் ஐந்து வகைப்படும். அவற்றுள் துன்பம் தரக்கூடியவைகளும் உள்ளன. இன்பம் தரக்கூடியவைகளும் உள்ளன
_____________

எண்ணங்களின் கடலாகும் மனது 
(Short Music)
எண்ணங்களின் கடலாகும் மனது
அதில் பொங்கி-வரும் நினைவலைகள் ஆகும் ஐந்து பிரிவு
(2)
எண்ணங்களின் கடலாகும் மனது
(MUSIC)
வந்து சில மனதினிலே ஆசைகளைத் தருமாம்
வந்தவுடன் இன்பமுமாம் பின்னர்-கொடும் விஷமாம் 
(2)
வந்தவுடன் இன்பமுமாம் பின்னர்-கொடும் விஷமாம் 
 எண்ணங்களின் கடலாகும் மனது
அதில் பொங்கி-வரும் நினைவலைகள் ஆகும் ஐந்து பிரிவு
எண்ணங்களின் கடலாகும் மனது
  (MUSIC)..
ஆஹஹாஹா
காலனவன் கொடும்-பிடியில் சிக்கவைக்கும் அதுதான்
போகம்-தர நெஞ்சில்-வரும் ஆசை-கொடும் விஷம்தான்
(2)
 போகம்-தர நெஞ்சில்-வரும் ஆசை-கொடும் விஷம்தான்
எண்ணங்களின் கடலாகும் மனது
அதில் பொங்கி-வரும் நினைவலைகள் ஆகும் ஐந்து பிரிவு
எண்ணங்களின் கடலாகும் மனது

(music)
சுட்டிடாமல் இன்பம்-தரும் எண்ணத்தையே கொள்வோம் (2)
ஒரு பற்றிலான் தாள் ஒன்றினையே பற்றி நாமும் உய்வோம்
பற்றிலான் தாள் ஒன்றினையே பற்றி நாமும் உய்வோம்
எண்ணங்களின் கடலாகும் மனது
அதில் பொங்கி-வரும் நினைவலைகள் ஆகும் ஐந்து பிரிவு
எண்ணங்களின் கடலாகும் மனது
______________
 
No comments:

Post a Comment