Friday, June 26, 2015

1.6. சாதகரே சாதகரே (கோபியரே கோபியரே)

6. ப்ரமாண - விபர்யாய - விகல்ப 
நித்ரா - சம்ருதய ||

மன அலைகள் ஐந்து
அந்த ஐந்து வகையாவது : சரியாகப் புரிந்து கொள்வது , தவறாகப் புரிந்து கொள்வது , பொருளற்ற கற்பனை, நினைவு(Memory) , தூக்கம் 

கடலின்அலையைப் போன்றது மனதிலைகள்  ஐந்தது 
சிலதுநன்று அறிவது சிலதுதவறாய்ப் புரிவது 
சிலதுநினைவில் நிற்பது கற்பனைவெற் றுருவது
சிலதுஉலகை மறக்குமந்த  உறக்கத்திலும் தொடர்வது..!

சாதகரே சாதகரே கொஞ்சமிதைக் கேளுங்களேன்
எண்ணங்களின் ஐந்து-வகை என்ன-வென்று கேளுங்களேன்

(SM)

சமுத்திரத்தின் அலையெனவே மோதுவதைப் பாருங்களேன்
உள்-சென்று காண-அது யாதென்று தேறுங்களேன்

(MUSIC)
சிலது நன்றாய்த் தெரிகிறது சில-தவறாய்ப் புரிகிறது
சிலது-பொருள் அற்ற-வெறும் கற்பனை-போல் போகிறதே

 சிலது நன்றாய்த் தெரிகிறது சில தவறாய்ப் புரிகிறது
சிலது-பொருள் அற்ற-வெறும் கற்பனை-போல் போகிறதே
நினைவு-தரும் எண்ணமென கனவு-வரும் தூக்கம் என
எஞ்சியவை மீதி வகை எண்ணங்களாய் ஆகிறதே
எஞ்சியவை மீதி வகை எண்ணங்களாய் ஆகிறதே
நினைவு-தரும் எண்ணமென கனவு-வரும் தூக்கம் என
எஞ்சியவை மீதி வகை எண்ணங்களாய் ஆகிறதே
சாதகரே சாதகரே கொஞ்சமிதைக் கேளுங்களேன்
எண்ணங்களின்  ஐந்து-வகை என்ன-வென்று கேளுங்களேன்
எண்ணங்களின்  ஐந்து-வகை என்ன-வென்று கேளுங்களேன்
(MUSIC)
பதஞ்சலியார் யோகம் தந்தார் அதில்-அழகாய்ச் சொல்லுகிறார்
இணைபிரியா எண்ணங்களை இரக்கமின்றித் தள்ளு-என்றார்
இணைபிரியா எண்ணங்களை இரக்கமின்றித் தள்ளு என்றார்
பதஞ்சலியார் யோகம் தந்தார் அதில்-அழகாய்ச் சொல்லுகிறார்
இணைபிரியா எண்ணங்களை இரக்கமின்றித் தள்ளு-என்றார்
நாடியதன் வகைகண்டு தேடியதன் விதைஎடுத்து
உய்ந்திடவே உயர்ந்திடுவாய் நீ ஒரு யோகி என

நாடியதன் வகை-கண்..டு தேடியதன் விதைஎடுத்து
உய்ந்திடவே உயர்ந்திடுய் நீ ஒரு யோகி என
சாதகரே சாதகரே கொஞ்சமிதைக் கேளுங்களேன்
எண்ணங்களின் ஐந்து-வகை என்ன-வென்று கேளுங்களேன்
எண்ணங்களின் ஐந்து-வகை என்ன-வென்று கேளுங்களேன்
 
____________
 
No comments:

Post a Comment