Wednesday, July 1, 2015

1.15.கண்ணால்-காதால்(புத்தன் ஏசு காந்தி பிறந்தது)

(புத்தன் ஏசு காந்தி பிறந்தது)
 
வசீகார சமஜ்ஞா வைராக்யம் ||
வைராக்கியம்  என்பது என்ன ?
கண்ணாலும் காதாலும் ஏற்படும் ஆசைகள் அடங்கி மனதலைகள் இயக்கத்தில் நடுநிலை வகித்து இருக்குங்கால் வைராக்கியம் ஏற்படுகிறது 

கண்ணால்-காதால் பார்ப்பதில்-கேட்பதில் ஆசைகள் உருவாக
யோகம் அதை விடு..வதற்காக
புலனை தொடர்ந்தே ஓடிடும் மனதை அடக்கணும் கணக்காக
அது-வை..ராக்யம் கொடுத்திடும் என்குது சூத்திரம் நமக்காக
வேள்விகள் என்னும் யாகமும் யக்ஞமும் செய்வது எதற்காக
த்யாகம்-ஒன்றே யோகம்-என்பதை 
உணர்த்துவ..தற்காக
கண்ணால்-காதால் பார்ப்பதில்-கேட்பதில் ஆசைகள் உருவாக
யோகம் அதை விடு..வதற்காக
(MUSIC)
இறை-தன்னை நெஞ்சில் சிறை-என்று கொண்டு
துயர்-கொண்ட நெஞ்சம் தனைச்-சென்று கண்டு
மனம் தன்னில்-அன்பு தனைக்-கொண்டு நன்கு
உயர்-சேவை ஒன்று செய்வாயே இன்று
சேவை செய்திடு என்று சொன்னது தெய்வத்தின் மொழியாகும்
உண்மை என்றுதன் பேரைக் கொண்டது காட்டிய வழியாகும்
கண்ணால்-காதால் பார்ப்பதில்-கேட்பதில் ஆசைகள் உருவாக
யோகம் அதை விடு..வதற்காக
(MUSIC)
 பொருள் கொண்டு-பூஜை தனை-வேண்ட..வில்லை
பொருள் கண்டு-தெய்வம் அருள் தந்ததில்லை
மனம்-கொண்ட அன்பில் இலை-ஒன்று போதும்
அளிப்பாயே என்றே கண்ணன் சொன்ன பாடம்
ஆசைகள் தீர்த்திட வரங்களைக் கேட்டிட புரிவது பூஜையில்லை
மன-அலை ஓய்ந்திட சேவையைச் செய்திட வேறொன்றும் தேவையில்லை

கண்ணால்-காதால் பார்ப்பதில்-கேட்பதில் ஆசைகள் உருவாக
யோகம் அதை விடு..வதற்காக
  புலனை தொடர்ந்தே ஓடிடும் மனதை அடக்கணும் கணக்காக
அது-வை..ராக்யம் கொடுத்திடும் என்குது சூத்திரம் நமக்காக
வேள்விகள் என்னும் யாகமும் யக்ஞமும் செய்வது எதற்காக
த்யாகம்-ஒன்றே யோகம்-என்பதை உணர்த்துவ..தற்காக
கண்ணால்-காதால் பார்ப்பதில்-கேட்பதில் ஆசைகள் உருவாக
யோகம் அதை விடு..வதற்காக
__

No comments:

Post a Comment