Wednesday, July 1, 2015

1.14. ஸ்வாசத்தை நீ(தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்)

( தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் )

ஸ து தீர்க கால நைரந்தர்ய 
சத்கார சேவிதோ த்ருடபூமி : ||
 
இடையறா சாதனை
இடையறாத  சாதனையே பற்றுறாத வைராக்கியம் (நடுவிருத்தல், நடுநிலைப்படுதல்) தரும்
 
ஸ்வாசத்தை நீ-ஒரு கணம்-துறந்தாலும் உயிர்-செல்லப் பார்த்திடுமே  
அந்த யோகத்தை-நீ-ஒரு கணம்-துறந்தாலும் மாயை ஈர்த்திடுமே
 (MUSIC)

இன்பத்தைப்-புலன்கள் கணம்-அசந்தாலும் பிடித்து-அலைந்திடுமே (2)
 சிந்தயை-வைரம் போல்-பலமாக்கும் தொடர்ந்த சாதனையே .. வேறு 
மாற்றிலையே
ஸ்வாசத்தை நீ-ஒரு கணம்-துறந்தாலும் உயிர்-செல்லப் பார்த்திடுமே
அந்த யோகத்தை-நீ-ஒரு கணம்-துறந்தாலும் மாயை ஈர்த்திடுமே
(MUSIC)
பிறரை-எள்ளாமல் சேவையைப்-புரிந்து இருத்தல் சாதனையே (2)
பலன் ஆசை-கொள்ளாமல் நடுநிலைப்-படுத்தும் அந்த சாதனையே
சேவைக் கீடில்லையே
ஸ்வாசத்தை நீ-ஒரு கணம்-துறந்தாலும் உயிர்-செல்லப் பார்த்திடுமே
அந்த யோகத்தை-நீ-ஒரு கணம்-துறந்தாலும் மாயை ஈர்த்திடுமே
(MUSIC)
காலம்-பார்க்காமல் இறைவன் பணி-என்று உலகின் நலம்-நாடுவாய்
(2)
உயர் ஞானம்-தருகின்ற போதம்-இதுவென்றே வேதங்களில்-காணுவாய் 
யோகம் எனப் பூணுவாய்
ஸ்வாசத்தை நீ-ஒரு கணம்-துறந்தாலும் உயிர்-செல்லப் பார்த்திடுமே
அந்த யோகத்தை-நீ-ஒரு கணம்-துறந்தாலும் மாயை ஈர்த்திடுமே
 
_______________
 
No comments:

Post a Comment