Tuesday, July 7, 2015

1.17. தூய்மையான அறிவு(அமைதியான நதியினிலே)

 

 
( அமைதியான நதியினிலே )
 
 


தூய்மையான அறிவெதிலே தோன்றும்
என்றே மிக-அழகாய் சூத்திரமும் கூறும்
(2)
தெள்ளிய-நல் அறிவினையே தேடுதலே சாதனையே (2)
அது-விரைவாய் இறைவனடி காட்டும் .. அந்த
தூய்மையான அறிவெதிலே தோன்றும்
என்றே மிக-அழகாய் சூத்திரமும் கூறும் 
(MUSIC)
கற்கப்-பல நூலிருக்கு..
கற்கப்-பல நூலிருக்கு கோடானு கோடியென (2)
அத்தனையும் படிப்பதென்றால் ஓர்-பிறப்பில் ஆகிடுமா (2)
தூய்மையான அறிவெதிலே தோன்றும்
என்றே மிக-அழகாய் சூத்திரமும் கூறும்
 (MUSIC)
கற்ற-பல பேருடனே கூடித் தர்க்கம் புரிவதிலே (2)
கற்றவையும் விளங்கப்-பெறும் கல்லாததும் விளங்கம்-பெறும் (2)
தூய்மையான அறிவெதிலே தோன்றும்
என்றே மிக-அழகாய் சூத்திரமும் கூறும் …ஓ..
கற்றவையும் தெளிந்திடவே கொள்ளுவாய் விசாரமதை (2)
அங்கு-கிட்டும் ஆனந்தமே நல்லறிவை வழங்குவது (2)
தூய்மையான அறிவெதிலே தோன்றும்
என்றே மிக-அழகாய் சூத்திரமும் கூறும்
(MUSIC)
அந்தியில் மயக்கம்-தரும் காலையில் விளக்கம்-தரும் (2)
 அவ்வியற்கை இயைபு-தன்னால் நல்லறிவு விளங்கப்பெறும் (2)
தூய்மையான அறிவெதிலே தோன்றும்
 என்றே மிக-அழகாய் சூத்திரமும் கூறும்
 தெள்ளிய-நல் அறிவினையே தேடுதலே சாதனையே
 அது-விரைவாய் இறைவனடி காட்டும் ..
 
____________
 


No comments:

Post a Comment