Tuesday, July 7, 2015

1.18. உலகை மறக்கணும் மெதுவாக (உலகம் பிறந்தது எனக்காக)

 
 
( உலகம் பிறந்தது எனக்காக )
 
 உலகை மறக்கணும் மெதுவாக யோகம் புரியணும் “*அது”வாக
வாழ்வும் இருக்கணும் மிதமாக அந்தத்-தாமரை இலைமேல் நீராக
உலகை மறக்கணும் மெதுவாக யோகம் புரியணும் “அது”வாக
(2)
(MUSIC)
நிலையில் அமர்திடு சிலையெனவே
யோகம் பயின்றிடு **கலையெனவே

பாவங்..கள்-எனும் வினை விடவே
பாதம் அடைந்திடு சரண் எனவே
(2)
உலகை மறக்கணும் மெதுவாக யோகம் புரியணும் “*அது”வாக (MUSIC)

பிறப்பை எடுத்தால் வினை வளரும்
யோகம் பயின்றால் அது விலகும்   
உடலின் நிழலாய்த் தொடர்ந்து வரும்
செயல்விளை.. வறுந்திட ஜபம் போதும்
கடலைத் தாண்டிட அனுமானும்
சொன்னது ராம் எனும் ஒரு நாமம்
உலகை மறக்கணும் மெதுவாக யோகம் புரியணும் “*அது”வாக
(MUSIC)

நன்றாய் யோகம் புரிந்தாலும்
முன்னைப்-பிறப்பின் வினைப் பயனும்
சூக்கும வடிவில் தொடர்ந்திருக்கும் 
ஐய்யா அது-உன் சம்ஸ்காரம்
சூக்கும வடிவில் தொடர்ந்திருக்கும்
அசம்ப்ரக்..ஞை-யிலே அது-போகும்  
உலகை மறக்கணும் மெதுவாக யோகம் புரியணும் “அது”வாக (2)
வாழ்வும் இருக்கணும் மிதமாக அந்தத்-தாமரை இலைமேல் நீராக
உலகை மறக்கணும் மெதுவாக யோகம் புரியணும் “அது”வாக



 
*உண்மையான ரூபம் ஆத்மா   ** அசம்ப்ரஞ்ஞாத சமாதி


No comments:

Post a Comment