மூச்சுப் பயிற்சியில்-நின்று நல்ல விதம் தனி..லதை-வென்று
ஸ்வாசம் விட-மனம் நின்று பிறகு அடங்குது நன்கு
(2)
(MUSIC)
ஐயோ-வீணில் அலையாய்-மோதும் எண்ணமும்-ஓயாதோ
(1+SM+1)
ஐயா-சாமி உந்தன்-காதும் கொஞ்சமும்-கேளாதோ
என்றே-தினமும் ஏங்கிய-பேர்க்கு இன்று-கிடைத்தது பதில் ஒன்று
அல்லும்பகலும் யோகம்கொண்டால் கையின்மேலே பலன்உண்டு
மூச்சுப் பயிற்சியில்-நின்று நல்ல விதம் தனி..லதை-வென்று
ஸ்வாசம் விட-மனம் நின்று பிறகு அடங்குது நன்கு
(MUSIC)
சூரிய-நாடி சந்திர-நாடி-இயங்கிடும் ஒரு-சீராய் (1+SM+1)
ஸ்வாசம்-அடக்கும் பயிற்சியிலே-நீ மனமடங்கிடப்-பாராய்
என்றிந்த-சூத்ரம் சொல்கிற-பொழுது ஐயம்-கொள்வது நன்றன்று
நீயும்-விரைந்து ப்ராண-நியம யோகம்-பூண்டால் பயன்-உண்டு
மூச்சுப் பயிற்சியில்-நின்று நல்ல விதம் தனி..லதை-வென்று
ஸ்வாசம் விட-மனம் நின்று பிறகு அடங்குது நன்கு
(MUSIC)
ஆடிடும்-தன்சேய் வெளியில்-சென்..றாலும் கவனமும்-பிறழாமே
(1+SM+1)
தனை-மறவாமே கணம்-மறவாமே பார்த்திடும் தாய்-போலே
உனது-கவனம் உனது-மூச்சில் இருக்க-வேணும் எனும்-மொழியே
நினைவில்-கொண்டு புரியவேணும் என்றுசொன்னார் பதஞ்சலியே
மூச்சுப் பயிற்சியில்-நின்று நல்ல விதம் தனி..லதை-வென்று
ஸ்வாசம் விட-மனம் நின்று பிறகு அடங்குது நன்கு
No comments:
Post a Comment