Wednesday, February 10, 2016

1.36. உள்ளதே ஒரு-ஜோதி (சொல்லடி அபிராமி)



36. விசோகா வா ஜ்யோதிஷ்மதீ
ஜோதி தியானம்
நம்முள்ளே தோன்றுகின்ற ஜோதியை த்யானிப்பதன் மூலமும் யோக முன்னேற்றம் பெறலாம் 
_________________________________ 



உன்னிலே ஒரு ஜோதி..உள்ளதே ஒரு-ஜோதி 

தேகம் எனும்-வ்யாதி போக்கும் அதன்-காட்சி
உனில் .. உள்ளதே ஒரு-ஜோதி
(2)
(Short Music)
உன்னிரு கண்ணாலே..உன்னிரு கண்ணாலே 
அதைக் கண்டிட..லாம்-என எண்ணாதே
உள்ளதே ஒரு-ஜோதி
(Music)
பல்பிறப்பில்-புரிந்த கருமங்களே வந்து-மறைத்ததனால் சென்ற நிஜம் அல்லவோ 
(2)
நீ மெய்யில்-மெய்யாய் இருந்த மெய்யல்லவோ 
நீ *பொய்யை மெய்யாய் நினைக்கும் மெய்யல்லவோ 
பந்த-வேதனைத் தனைத்-தள்ள வழி-சொல்லவோ
உள்ளதே ஒரு-ஜோதி
(MUSIC)
வாராயோ உன்னுரு-தேடாயோ நிஜமுனைப் பாராயோ அவனுடன் சேராயோ
(2) 
மனதின்-கோஷத்துக்கும் உலக-வேஷத்துக்கும் நடுவில்-நின்றாடும் நிலை-விடுத்தே
த்யானம்-கூட முடிந்திடாது அது-என எழுந்தோடுகிற நிலைவிடுத்தே
வெள்ளை உள்ளம் கொண்டு உந்தன் மேனியை -
விட்டு விட எக்கணமும் சித்தமென 
வாராயோ உன்னுரு-தேடாயோ நிஜமுனைப் பாராயோ அவனுடன் சேராயோ
(Music)
சிந்தையில்-நின்ற நிஜம் தனைக்-கண்டு பவம்-பயம் என்றோட 
ஒரு சங்கதியென்றிரு காதினில்-நல்லிசை நன்கு-எழுந்தாட 
பல மங்கல-ஒசைக..ளோடு-உன் நாவினில் தேனின்-சுவை கூட
தினம் காலையும்-மாலையும் மட்டுமிலாது-என் நேரமும் கண்-மூட 
அமர்ந்து பாராயோ முனைந்து தேடாயோ ஒளியைக் காணாயோ…
(Short Music)
Pause
ஊழி நடம்-புரி ஆதி பரம்-பொறி கண்களில் தெரியும்-பார் 
கண்கள் திறந்திடும் எண்ணம் எழா-விதம் காட்சி-கி..டைக்கும்பார்
வாழ்ந்திடுமுலகினில் யாதுமிலை-எனும் நோக்கும் தோன்றும்-பார்
உன்னகம்-உள்ளிரும் ஆத்துமம்-பேரொளி வடிவாய்த்-தெரிந்திடும் பார்
ஒளி வடிவாய்த் தெரிந்திடும் பார்
உன்னில் தெரியும்-பார் உன்-உள்ளே தெரியும் பார் (2)
ஓம் நீயும்-ஓம்.. ஜோதி-ஓம் யாவும்-ஓம் ஸ்வாமி-ஓம்..


* மாயை 

No comments:

Post a Comment