Monday, February 22, 2016

1.37. ஆசையினாலே மனம் (ஆசையினாலே மனம்)



37. வீத ராக  விஷயம்  வா  சித்தம் 

மனதை ஆசையின்பார் படாமல் நிறுத்தலும் அமைதிக்கு ஒரு வழியாம்
_______________

ஆசையினாலே மனம் அலையென அலையுது தினம் 
ஆசை-அடக்கி வாழ்வதாலே அமைதியில்-அடங்குது அதும்
(2)
(MUSIC)
நாளும்-நம்மைப் பாபம்-செய்யத் தூண்டும்-ஆசையே 
அதை-வெல்லும் வண்ணம்-செய்தல் வேண்டும்-நன்றாய் யோகமே
(1+SM+1)
ஆசை ஓடிவிட்டதெனில் அமைதி-நாடிவரும்-உனில் 
ஆசை-கொல்ல ஆசைகொள்ள வேண்டும்-நீ-இறை தன்னில்
ஆசையினாலே மனம் அலையென அலையுது தினம் 
ஆசை-அடக்கி வாழ்வதாலே அமைதியில்-அடங்குது அதும்
(MUSIC)
ஆசை-மேலும் ஆசை-கொள்ள மனதைத்-தூண்டுதே 
மனம்-வாலை கொண்ட-குரங்கைப் போல பின்னால்-போகுதே
(1+SM+1)
வசப்படாத-மனம் புதிர் இருத்துது-அதற்கொரு பதில்
நாடி-தேடிக் காணுவாயே பதஞ்சலி-சூத்திரம் தன்னில்
ஆசையினாலே மனம் அலையென அலையுது தினம் 
ஆசை-அடக்கி வாழ்வதாலே அமைதியில்-அடங்குது அதும்
(2)



No comments:

Post a Comment