Wednesday, February 24, 2016

1.40. மனதை அடக்கணும் (உலகம் பிறந்தது எனக்காக)



40. பரமாணு  பரம  மகத் வாந்தோஸஸ்ய வசீகார :

மனதை அமைதிப் படுத்தும் நோக்கினில் வெற்றிகண்ட ஒருவனின் ஆற்றல் அளவற்றதாகிறது. அணுமுதல் அண்டம்வரை அடக்கிகாட்டும் எல்லையற்ற சக்தி பிறக்கிறது அவனிடம்.

________________

மனதை அடக்கணும் நனி-நன்று 
அமைதி கொள்ளணும் அதைவென்று 
உலகில் அனுதினம் *செயல்-நன்று
கொள்ளத்-தானாய் தோன்றும் திறன்-ஒன்று

மனதை அடக்கணும் நனி-நன்று 
அமைதி கொள்ளணும் அதைவென்று
(2)
உலகில் அனுதினம் *செயல்-நன்று
கொள்ளத்-தானாய் தோன்றும் திறன்-ஒன்று
மனதை அடக்கணும் நனி-நன்று 
அமைதி கொள்ளணும் அதைவென்று 
(MUSIC)
காற்று-அடித்த பையினிலே அதனை-உடல்-என உலகினிலே
இறைவன்-வைத்ததை நான்-அறிவேன்
என்றும்-உடலை நான்-மதியேன்
என்று உயிரிரு..க்கும்-பொழுதே 
மனதை-அடக்கிட முயன்றிடுவாய்
மனதை அடக்கணும் நனி-நன்று 
அமைதி கொள்ளணும் அதைவென்று 
(MUSIC)
அலையும் மனதால் துன்பம் வரும் 
வாலினை விடுத்தக் குரங்கதுவும் 
கணமும்-மரத்துக்கு மரம்-தாவும்
அமைவது அதற்கு அரிதாகும் 
கணமும்-தாவும் மனதாகும்
அமைதியில் அதற்கொரு வெறுப்பாகும் 
மனதை அடக்கணும் நனி-நன்று 
அமைதி கொள்ளணும் அதைவென்று 
(MUSIC)
எல்லாம்-அடக்கும் திறன்-பிறக்கும்
தொல்லை-அடங்கும் துயர்-அடங்கும்
அண்டம்-முதலே அணு-வரைக்கும் 
தானே அடங்கும் அமைதியிடம்
அண்டம் அடக்கும் அணுவடக்கும் 
திறனைக் கொள்ளும் அமைதி மனம் 
மனதை அடக்கணும் நனி-நன்று 
அமைதி கொள்ளணும் தைவென்று
(2)
உலகில் அனுதினம் *செயல்-நன்று
கொள்ளத்-தானாய் தோன்றும் திறன்-ஒன்று
மனதை அடக்கணும் நனி-நன்று  
அமைதி கொள்ளணும் அதைவென்று

* யோகம்

No comments:

Post a Comment