அறியாமை - அறிவு சம்வாதம்
அத்தனையும்
நானறிவேன் என்பதல்ல-பே..ரறிவு
அத்தனையும்
நானறிவேன் என்பதன்றோ அறியாமை
சாத்திரத்தை நான்-படித்தேன்
கரைத்ததைக் குடித்துவிட்டேன்
சாத்திரத்தை நான்-படித்தேன்
நானறியா நூல்கள்-இல்லை
கண்டபடி நான்-படித்தேன்
பண்டிதனைப் போல-நன்றாய் (2)
அத்தனையும்
நானறிவேன் கற்க-இன்னும் வேறிலையே
(MUSIC)
பாரில்-கண்ட நூல்களிலே
நீயும்--கற்ற கல்வி
தனில் ஒன்றும்-இல்லை மண்ணும்-இல்லை
ஐயோ அது தோல்வி
(2)
அறிந்து-விட்டேன் யார்-புகழும்
தேவை-இல்லை போங்கள் (2)
என்-மேல்-பொ..றாமையினால்
கூறுகிறீர்-நீங்கள்
என்னைப் போல யார் உண்மை சொல்லவா
மூடன் என்பதார் உன்னைச் சொல்லவா
அத்தனையும்
நானறிவேன் என்பதல்ல பேரறிவு
(MUSIC)
உண்மை-எது பொய்மை-எது நன்மை-தீமை
யாது
என அறியாத நிலைமையன்றோ
ஐயா-அறியாமை
வாலறிவன் தாள்-பணிந்து
நல்..லறிவைத் தேடி
தன்னைத் தான்-உணர்ந்து
கரைந்து-செல்ல வேணும் உந்தன்-ஆவி
அறிவேனே நான்-எதையும் அறிந்த-வரை போதும் (2)
அறிவேனே நான்-எதையும் அறிந்த-வரை போதும் (2)
உடனே போய் பைத்தியமே வைத்தியரைப்
பாரும்
என்னைப்
போல யார் உண்மை சொல்லவா
மூடன் என்பதார் உன்னைச் சொல்லவா
அத்தனையும்
நானறிவேன் என்பதன்றோ அறியாமை
அத்தனையும்
நானறிவேன் கற்க-இன்னும் வேறிலையே
______________
No comments:
Post a Comment