(ஆளுக்கொரு தேதி வச்சு)
ஆசை
இன்ப அனுபவத்தை தொடர்வது தான் விருப்பம்/ஆசை எனப்படும். அது புறச் சூழ்நிலைகளினால்
ஏற்படுகிறது என்ற அறியாமையும் தோன்றுகிறது.
____________________
நெஞ்சே உனக்கென்ன தீராத பசியோ
நீ கொண்ட சுகம் பத்தலையோ அடங்கிடவில்லையோ
கொண்ட சுகம் பத்தலையோ அடங்கிடவில்லையோ
வேளைக்கொண்ணு தேடி-மனம் இன்பத்துக்கலையும் உலகத்தில் அலையும்
(1+SM+1)
அப்போ மான-வெக்கம் சொரணை-சூடு அதுக்கெங்கத் தெரியும் (2)
வேளைக்கொண்ணு தேடி-மனம் இன்பத்துக்கலையும் உலகத்தில் அலையும்
(MUSIC)
பூமியிலே பொறக்கையிலே வந்ததந்த கோரம்
பூமி-விட்டு போறவரை போவதில்லை பாரும் (2)
வேளைக்கொண்ணு தேடி-மனம் இன்பத்துக்கலையும் உலகத்தில் அலையும்
(MUSIC)
பாழ்-மனதை நிறுத்திவைக்க யாராலே ஆகும்
வேறு-வேறு இன்பத்தையே நில்லாமல் தேடும் (2)
(SM)
இன்னொரு-பேர் இருக்கத்துக்குக் கொள்ளிவாய்ப் பிசாசு
இன்னொரு-பேர் அதுக்கிருக்குக் கொள்ளிவாய்ப் பிசாசு
அடங்கிடுமா ஆசைப்-பசி அதுக்கு-என்ன லேசில் (2)
சத்துவிட்ட பொருளையெல்லாம் சுத்திக்கிட்டுத் திரியும்
(1+ஆ..+1)
தன்னைப்-பத்தி அறியாத அதுக்கு-என்ன தெரியும் (2)
வேளைக்கொண்ணு தேடி-மனம் இன்பத்துக்கலையும் உலகத்தில் அலையும்
அட மனம் அலையும்.. அட மனம் அலையும்
_________
No comments:
Post a Comment