Showing posts with label அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது. Show all posts
Showing posts with label அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது. Show all posts

Thursday, September 22, 2016

28. எப்பொழுது நமது மனம்(அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது)



எப்பொழுது நமது-மனம் நின்று ஓய்வது
(1+SM+1))
அது எப்பொழுது-பதஞ்சலியின் யோகம் கொள்வது
ஆசை-கொண்டு மேதினியில் மாட்டிக்-கொண்டது (2)
அதுவாய் வெஞ்சிறையில் சென்று-தன்னைப் பூட்டிக் கொண்டது
எப்பொழுது நமது-மனம் நின்று ஓய்வது
 (MUSIC)
தருமம் எனக்-கூறி நல் யோகம் தன்னைத் தந்தது
நாம்-செல்லப் பாதையுமாய் அதைத்-தானே சொல்லுது
(2)
போர்க்களத்தில் கண்ணனவன் யாருக்கென்று சொன்னது (2)
பார்த்தனுக்கு மட்டுமன்று நமக்கும்-தான் ஆகுது
(SM)
எப்பொழுது நமது-மனம் நின்று ஓய்வது
 (MUSIC)
எக்கணமும் பிரியுமன்றோ உடலை-உயிர்
அதற்குள் இக்கணமே நீ-வளர்ப்பாய் யோகப்-பயிர்
(2)
என்னவெல்லாம் நமக்காகக் கொடுத்துச் சென்றார்
(SM)
என்னவெல்லாம் முன்னோர்கள் கொடுத்துச் சென்றார்
கணக்கு உட்கார்ந்து பார்க்க-யுகம் போகுமன்றோ
எப்பொழுது நமது-மனம் நின்று ஓய்வது
 (MUSIC)
நமக்கென்று உய்யச்-சொல்லி பதஞ்சலி தந்ததய்யா
அதைக்-கொஞ்சம் எண்ணி-எண்ணி யோகம் கொண்டிட வா
(2)
உன் திறத்தில் ஏதுமில்லை என்பதனை உணர்ந்திடய்யா  (2)
பள்ளி தரும் கல்வியிலே மெய்-கிடைப்பதில்லையய்யா

மெய் கிடைப்பதில்லை மெய்யாய்
எப்பொழுது நமது-மனம் நின்று ஓய்வது
அது எப்பொழுது பதஞ்சலியின் யோகம் கொள்வது
எப்பொழுது நமது-மனம் நின்று ஓய்வது