Showing posts with label யார் யார் யார் அவள் யாரோ. Show all posts
Showing posts with label யார் யார் யார் அவள் யாரோ. Show all posts

Friday, May 5, 2023

41.வா வா வா சென்று காண்போம்(யார் யார் யார் அவள் யாரோ)

 

வா வா வா நிஜம் காண்போம்
நாம் யார் யார் எனக் காண்போம்
(2)
உலுக்குள்ளே சிறையாக 
இந்தப் பாரே மெய்யாக 
ஆசைகளில்-நாம் பழியாக ..
இருந்துவிட்டோமே ..
(Music)
சத்தை உடல் சுகம் தந்திடுமோ 
உன்னுடன் மேனி வந்திடுமோ
சொத்தை உடல் சுகம் தந்திடுமோ 
உன்னுடன் மேனி வந்திடுமோ 
உலகில் அலைந்த மனதாலே உண்மை காணுதல் ஆகிடுமோ
உலகில் அலைந்த மனதாலே உன்னைக் காணுதல் ஆகிடுமோ

வா வா வா நிஜம் காண்போம்
நாம் யார் யார் எனக் காண்போம்
(Music)
கண்கள் இருந்தும் குருடானோம் பாழும் கிணற்றில் விழலானோம் (2)
உலகில் மயங்கும் பொருளானோம் அறிவும் மழுங்கி இருளானோம் (2)
வா வா வா நிஜம் காண்போம்
நாம் யார் யார் எனக் காண்போம்
(Music)
சஞ்சிதம் கொண்டாய் தினம் கொண்டாய்
அதனால் உலகில் உழல்கின்றாய்
சஞ்சிதம் ப்ராரப்..தம்-கொண்டாய்
அதனால் உலகில் உழல்கின்றாய்
விரைவில் ஆகாமியம் கொள்வாய் 
அதனால் சுழலில் அமிழ்ந்திடுவாய் 
விரைவில் ஆகாமியம் கொள்வாய் 
அதனால் சுழலில் அமிழ்ந்திடுவாய் 
வா வா வா நிஜம் காண்போம்
நாம் யார் யார் எனக் காண்போம்
உலுக்குள்ளே சிறையாக 
இந்தப் பாரே மெய்யாக 
ஆசைகளில்-நாம் பழியாக ..
இருந்துவிட்டோமே ..
வா வா வா நிஜம் காண்போம்..
ஆஹாஹாஹாஹா..ஹா ஆஹாஹாஹாஹா..ஹா
 .ஓஹோஹோ..ஹோஹோ ஹோ.. .ஓஹோஹோ..ஹோஹோ ஹோ