Friday, September 30, 2016

** யோகத்தில் தாகம் (கிருஷ்ண கர்ணாம்ருதம்)




கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய் (4)
காசிராமசுரம் பத்ரிஅமரபுரம் என்றுசாமியைநான் தேடினேன்
அந்தசாமி-என் நெஞ்சிலான்மஒளி என்றிருப்பது-நான் காண்கிலேன்
கங்கைகாவிரியும் புனிதமாய்நதிகள் தேடியங்குநீ..ராடினேன்
பக்திநீர்வழிய அன்புத்தந்தைஉனை என்றுநெஞ்சகத்தில் நாடினேன்?

மாயமோகவலை ஆசைப்பாசப்புதை மண்ணில்கால்புதைக்க ஓடினேன்
ரோஷவேஷத்துடன் வந்தமூடமதி தந்தஆணவத்தி லாடினேன்
காயமாயமது உண்டுநான்எனது என்றுவாய்கிழியப் பேசினேன்
மாயும்போதுஅது வந்திடாதுதுணை என்றுநான்அறியக் கூசினேன்
கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய்
சொந்தமாய்மனது வந்தநான்எனது என்றதன்னுணர்வு வாட்டுது
வந்தமாயமிது செல்லுமாபிறகு திறக்குமா மனதுபூட்டது ?
எந்தன்தாய்குழந்தை தந்தைஎன்மனைவி என்றஎண்ணமென்று போவது
இந்தமானுடத்தில் வந்தயாவருமென் சொந்தமென்றுஎன்றாவது ?

பந்தபாசங்களும் வந்தநேசங்களும் இந்தபூவுலகில் மாயுது
என்றஎண்ணமிது சென்றுமாய்ந்திடவே நல்லஞானம்உரு..வாகுது
எந்தஜென்மத்திலும் வந்தயாவருமென் சொந்தசோதரரே..யாவது
என்றஞானம்வர அன்புத்தந்தைஉன் அருளுக்காக மனம்-ஏங்குது
கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய்

அன்புதெய்வம்என நன்குநான்எழுதி சொல்லினேன்எனது பாட்டிலே
அந்தஅன்புவர செய்யும்சேவைதனை விட்டுத்தூங்கினேன் வீட்டிலே
முன்புராமனுமாய் பின்புகண்ணனுமாய் வந்தஉன்அருமை உணர்ந்திலேன்
அன்புமுழுவதுமாய் மண்ணில்உன்வடிவைக் கண்டபின்னும்மனம் தெளிந்திலேன்

ஐயகோஎனக்கு நல்லபுத்திதரும் ஆன்மஜோதி என்றுஒளிர்வது
ஐயமோஉனக்கு எந்தன்-யோக்கியத்தில் என்றுஎன்றுநான் தெளிவது
உய்யவோர்வழியும் தோன்றிடாதுவினை வந்துவந்துஅலைக் கழிக்குது
பைய்யவாயிடினும் செய்யுவாய்அருளை எந்தன்பொறுப்புஇனி உன்னது
கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய்

ஒன்று நான்கிரண்டு என்றுமூச்சுமே நன்குஆடி ஒளிகூடுமா
நன்கு-நான்தொழும் உந்தன்திருவடி எந்தன்-நெஞ்சில்தினம் ஆடுமா
என்றுஎன்மனத் தாடல்நிற்குமோ சென்றுசின்மயம் தேடுமோ?
நன்றுநன்றென வந்துஉன்னருள் என்றுஎன்மனதில் கூடுமோ

அந்த நாள்வரை துன்பப்பாசறை தன்னில்-வாழ்ந்திடுதல் வேண்டுமோ ?
வந்த நாள்முதல் இன்பம்என்றிதை எண்ணிச் சிறைபுகுந்த வாழ்வுமோ?
அந்த..கன்திரும்ப கொண்டுசெல்லுவதும் பின்னர்திரும்புவது மாகினேன்
சொந்தம் நீஎனது பந்தமாய்உலகு வந்துகாத்திடுகோ..விந்தனே
கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய்

ஆசை பக்தியையும் நல்ல-புத்தியையும் கெடுத்துக்குட்டிச் சுவராக்குது
ஆசைவந்துபே..ராசையாகிப்பின் வளர்ந்துநற் செயலைக் கெடுக்குது
ஆசைப்பாதையிலே வந்ததடைகளையே கோபம்விலகச்செய்யப் பாக்குது   
ஓசையின்றிஅது கொஞ்சநஞ்சமாய் வந்தஞானத்தையே நீக்குது

*காசுகாசென சேர்த்துக் காசினைக் காசுகொண்டுநான் பூசினேன்
**மூசுவண்டறைப் பொய்கை தண்மலர்ப் பாதம்காண-நா வரசிலேன்
நேசப் பாதையினை ராசலீலையென வாழ்ந்துகாட்டியகோ-விந்தனே
மாசுதூசென சென்றுபறந்திட  அருளைவீசு வசுநந்தனே
கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய்
மண்ணில் உன்பதங்கள் வந்துநர்த்தனமும் நூறுஅற்புதமும் செய்தது
கண்களதனைதினம் கண்டபோதும்-அகம் காரம்வந்ததனை மூடுது
அந்தகோவிந்தனை எண்ணுவாய்தினமும் என்றுசங்கரனும் சொன்னது
எண்ணிடாதுஉனைக் கேட்டிடாததனை செய்யுமென்வினையைக் கொன்றிடு
செய்தபாவங்களும் உலகமாயங்களும் வந்துவந்துபயம் காட்டுது
எந்தன்நெஞ்சம்தனில் அந்தபொன்தனமும் வந்துஆணவத்தைக் கூட்டுது
அந்தவேதங்களும் சொல்லும்தத்துவமும் எந்தன்அறிவில்எங்கு ஏறுது
உந்தன்பாதங்களை எந்தகாலத்திலும் நெஞ்சிலாடும்படி செய்திடு
கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய்
எந்தன்மன்மனது தந்ததொந்தரவு நீக்குபோக்குகோ..விந்தனே
சொந்தமென்றுநிதம் வந்துவல்வினைகள் தருதுதருதுபாழ் சிந்தனை
சித்தம்நின்றுபதம் நன்குதண்ணொளியை வீசுவீசுமா றருளவே
எந்தனிடையும்சுழு முனையும்பிங்கலையும் ஒன்றுசேர்ந்து நடமாடுமே
என்றுஅந்தநிலை வந்துபிறவிஅலை சென்றுஓயும்கோ..விந்தனே
மென்றுமென்றுஎனை தின்றுதின்றுவினை கொன்றுகொன்றுவரும் மெல்லவே
நன்றுநன்றுஎனக் கண்டி..டாமலருள் வந்துதந்திடு கோ..விந்தனே
அன்றுஅன்றுவரை எங்கும்தாவிடுமென் நெஞ்சிலாடணுமுன் சிந்தனை
கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய்
சாடுசாடுஅடி என்றுதிருமழிசை யாரும்சொன்னதிருப் பாதமே
காடுஆடுபொடி பூசிநின்றதரு கீழமர்ந்தகுரு மூர்த்தமே
கோடிகோடியுகம் கண்டபிரமனையும் தந்தநாபியுடை தந்தையே
மடுவிலாடுமொரு நாகமாடுமிரு பாதம்காட்டுகோ..விந்தனே


கண்டிடாதபடி விண்ணிலாடும்முடி தொட்டிடாதஅடி உன்னது
எண்ணிடாதபடி செய்தகர்மவினை பட்டுவாடும்மனம் என்னது
மட்டிலாதபடி அன்புகொண்டபடி உள்ளஉன்னடியை நாடினேன்
கண்ணிலாடும்படி எந்தன்ஆன்மஒளி காட்டுகாட்டுகோ..விந்தனே
கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய்
அன்புகொண்..டிடு உதவிசெய்..திடு துன்புறுத்தலைத் தள்ளிடு
என்றசொன்னது அன்புதந்தையின் வேதவாக்குமாய் ஆகுது
காலகாலமாய் மண்ணில்ஞானியர் தந்ததத்துவ ஞானமே
தூலரூபமாய் வந்தபிரமம்நீ சொன்ன வார்த்தையில் தோணுமே

எந்தன் பாடலில் வந்தகூவலைக் கேளுகேளுகோ..விந்தனே
சித்தம்ஆடுகின்ற வெற்றுஆட்டத்தைப் போக்கு-தேவகியின் பாலனே
எந்தன்ஊடலைப் போக்கவல்லதாய் உள்ளயா..வையினும் நல்லதே
உந்தன்கூடலால் எந்தன்ஊடலைப் போக்கிநிறுத்து என்தேடலை
கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய்
எந்தன்தாய் மொழியாம் உந்தன்வாய்மொழியைச் சொல்லிச்சொல்லிநான் போற்றுவேன்
எந்தன்மாயவினை நின்றுஓயும்வரை உந்தன்திருவடியில் அரற்றுவேன்
இந்தலோகத்திலும் எந்தலோகத்திலும் உந்தன்திருமொழியே ஒலிக்குதே
அந்தஓம்ஒலியில் வந்தபொன்மொழியை எந்தன்சேய்மொழியில் பிதற்றுவேன்
கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய் (3)

* பணப் பைத்தியமாய் செல்வம் சேர்த்துக் காசினை (குற்றங்களை) காசு கொண்டு (சேர்த்த செல்வத்தைக் கொண்டு) பூசி மறைக்க முயல்கிறேன்


**மூசுவண்டரையனைய உன் குளிர்ந்த மலர்ப்பாதங்களை உணரக் கூடிய பாக்யமும் ஞானமும் பெற்ற நாவுக்கரசன் அல்லேன் நான்.






FIRST PAGE






Thursday, September 29, 2016

40. யோகத்தில் சென்று விடு(மோகத்தைக் கொன்று விடு-பாரதியார்)




யோகத்தில் சென்று விடு ஐய்யா-முழு மூச்சில் இறங்கி விடு (4)
த்யானத்தில் மூழ்கி-விடு பின்னாலச்-ச..மாதியில் மூழ்கி-விடு
த்யானத்தில் மூழ்கி-ழு ஐயா-நல்ல முத்தினை முங்கி-எடு
 யோகத்து..யிலில்-படு ஐயா-அதில் நன்கு-வி..ழித்து-இரு
ஈசன் திரு உளமும் அன்று-உன்னில் யாவும்-விளக்கிடுமே (2)
யோகத்தில் சென்று விடு ஐய்யா-முழு மூச்சில் இறங்கி விடு
 சொந்தத்தைக் கண்டு விடு ஐயா அதில் மாயத்தைப் போக்கி விடு
ஆ ..ஆ..
சொந்தத்தைக் கண்டு-விடு ஐயா-அதில் மாயத்தைப் போக்கி-விடு (3)
உன்னை அவனாக்கு ஐயா-அதில் *மொத்த உடல்-பாரு
உன்னை அவனாக்கு ஐயா-அதில் *மொத்த உணர்..வாகு
உன்னை அவனாக்கு ஐயா-சச்சிதானந்தமே..யாகு
இந்த கணம் முதல்-*நான்’ ஒன்றாகிட யோகம் புரியோமோ
இந்த கணம் முதல்-*நான்’ நன்றாய் விட யோகம் புரியோமோ
அந்தப் பரம்பொருளை உள்ளே-சென்..றடைந்திட-யோகமொன்றே
யோகத்தில் சென்று விடு ஐய்யா-முழு மூச்சில் இறங்கி விடு
 நித்தம் புரியோமோ ஐயா மனச் சத்தம் ஒழியோமோ (3)
வெல்லம்-எனும் பாகோ என்றே-பக்தி உன்னில் பெருகாதோ (2)
அய்யன்க-ருணையிலே அய்யா-உந்தன் ஐயம் கரையாதோ (4)
கொள்ளற்கரியதுவே ஆயினும் யோகமென்றே வழியே (3)

யோகத்தில் சென்று விடு ஐய்யா-முழு மூச்சில் இறங்கி விடு (3)

*மொத்த உடல் பாரு =விஸ்வரூப தரிசனம்
*மொத்த உணர்வாகு = சத்-சித்தானந்தம்
The conscious mind is what we operate with during our daily activities and waking hours. It represents only a small portion of our consciousness and awareness.

The subconscious mind, lies below the level of conscious awareness. Its physical seat in the body is the lower brain and the spine. It records everything we do: every activity we engage in, our thoughts about those activities, our likes and dislikes about what we encounter each day. Although nothing is forgotten by the subconscious mind, for the most part this part of our consciousness remains hidden from our everyday awareness. The subconscious has a tremendous influence on how we think and act when in the conscious state.

The superconscious mind encompasses a level of awareness that sees both material reality and also the energy and consciousness behind that reality.

The Supra-conscious mind– It’s believed to exist outside our own mind. It has been referred as “master mind theory”, humanity global conscious or universal consciousness. It’s a belief that the supra-conscious is, on an essential level, being one with our Higher Self, which might be the same as saying to the universe. It works as some sort of non-physical communicating system between consciousnesses, sort of what Einstein called “spooky action at a distance”.
*நான்’ ஒன்றாகிட = நான் எனும் தனி உணர்வு (ஜீவாத்மா) போய் பரமாத்மாவுடன் ஒன்றாவது
நான்நன்றாய் விட = நான் என்னும் அகந்தை போக இறைவன் என ஒன்றாய்



39. என்றைக்கும் ஜோதியே (நெஞ்சுக்கு நீதியும்-பாரதியார்)



என்றைக்கும்-ஜோதியே என்றிரும்-ஆதியைக் கண்டிட முடிவெடுப்போம்
இன்றைக்கே-ஜோதியே என்றிரும்-ஆதியைக் கண்டிட முடிவெடுப்போம்
இன்றிங்கில்லாவிடில் சென்றெங்கு என்று-மெய்
கண்டு-நன்றாகிடுவோம்

என்றைக்கும்-நாளை வரும்-என்று நாம்-சொல்லி யோகம் –கொள்ளாதிருந்தோம்
(2)
நாளை-இல்லை நமதே உணர்ந்தே இன்றைக்கே
செய்யுவோம் செய்யுவோம்
நாளை-இன்றே எனவே  இன்றைக்கே
செய்யுவோம் செய்யுவோம் செய்யுவோம்

நான்கு-ம..றைப்-பொரு..ளாக-வி..ளங்கிடு..மாமந்த ப்ரணவத்தின்-ஓம் (2)
கும்பிட்டு யோகமும் கொண்டு விட்டால்-அது கேட்டிடும் காதினிலே

என்றைக்கும் யாதொரு நோவின்றி-நோன்பினைக்
கொள்வதென்றால் எப்படி
(2)
இன்றைக்கு நாம்-சற்று முனைந்திடுவோம்-யோ..கம்
கொள்ளுவோம் .. கொள்ளுவோம்
(2)
மந்திரத்தில்-திரு ஏறும்-அதை-உரு வேற-உ..ரைப்பதனால் (3)
என்பது போல்-அந்த யோகமும்-பலன்-தரும் உன்-தவ ஆற்றலினால்
உள்ளத்தில்லெப்.பொழுதும் அவனன்றி இராதென்று ஆகிடவே உள்ளத்தில்லெப்.பொழுதும் நினைவொன்றி சிதானந்தம் மேவிடவே
அய்யன்-பதம் நினைப்போம் இப்பவே இப்பவே இப்பவே இப்பவே
யோகம்-தனைப் புரிவோம் இப்பவே இப்பவே இப்பவே இப்பவே



FIRST PAGE

Wednesday, September 28, 2016

38. தாள் வராதா (ஸ்ரீகணேசா)





கா..ட்சி வருமா பேரொளி எழுமா என் மனம் அதில் விழுமா 
ப்ரபோ பிறப்பிறப்பறுந்திடுமா 
(2)
நானுள்ளே பார்த்தால் நீ எனைப் பார்ப்பாய்
நான்-எனைப் பார்த்தால் நீ எனைப் பார்ப்பாய்
நான்-தனைப் பார்த்தால் நீ உண்மை பார்ப்பாய்
என-முனி பதஞ்சலி சொல்லி..னாரய்யா  
நானாய் எனை-நான் பார்த்தல்-நி..கழுமா 
கா..ட்சி வருமா பேரொளி எழுமா என் மனம் அதில் விழுமா 
ப்ரபோ பிறப்பிறப்பறுந்திடுமா 
இப்புவிச் சுகம்-தனை முற்றும் துறந்தால் (3)
பக்தரின் நெஞ்சினில் ஜோதி-தோன்றுமாம்
சொன்ன படியெல்லாம் எனக்கு நடக்குமா 
கா..ட்சி வருமா பேரொளி எழுமா என் மனம் அதில் விழுமா 
ப்ரபோ பிறப்பிறப்பறுந்திடுமா 
கொக்குடை மனத்தால் சிக்கெனப் பிடித்தால் (3)
சிக்கிடு..வாய்-என மணிவா..சகனார்
சொன்னபடியெலாம் எனக்கு முடியுமா
கா..ட்சி வருமா பேரொளி எழுமா என் மனம் அதில் விழுமா 
ப்ரபோ பிறப்பிறப்பறுந்திடுமா 
சத்சங்க சாதுக்கள் தன்னுடன் இருந்தால் (3)
கொஞ்சமேனும் சிதானந்தம் பெறுவாய்
என்று-உரைத்தால் எனக்கும் பொருந்துமா
கா..ட்சி வருமா பேரொளி எழுமா என் மனம் அதில் விழுமா 
ப்ரபோ பிறப்பிறப்பறுந்திடுமா 
ஸ்ரீ-கைலாசபு..ரம்-அது வேண்டாம்
ஸ்ரீ-வை..குண்..டத்தில்பதவியும் வேண்டாம்
ஸ்ரீ-கைலாச-வை..குண்டமும் வேண்டாம்
என் மனக் கண்ணின் முன்னே உன் தாள் காட்டிடு ஈசா
 என் ஜெபப் பலனாய் பாதம்-எழாதா
கா..ட்சி வருமா பேரொளி எழுமா என் மனம் அதில் விழுமா 
ப்ரபோ பிறப்பிறப்பறுந்திடுமா 
ஈசா ஈசலாய்த் தோன்றுது எண்ணங்கள் (2)
*ஸ்வாமீ உன்னடி நினைப்பதை தடுக்குது
உன்னடி எழுமா தயை புரி  தேவா.. என்னுளே வா வா
கா..ட்சி வருமா பேரொளி எழுமா என் மனம் அதில் விழுமா 
ப்ரபோ பிறப்பிறப்பறுந்திடுமா 
(4)

ஈசா ஈசலாய்த் தோன்றுது எண்ணங்கள்
*ஸ்வாமீ உன்னடி நினைப்பதை தடுக்குது =
1) உன்னுடைய திருவடியை நினைப்பதை ஈசலாய்த் தோன்றும் பல் எண்ணங்கள் தடுக்கின்றன. நீ அவ்வெண்ணங்களை , உன் திருவடி நிழலால் எழாமல்  தடுத்திடு
2) உன்னுடைய திருவடி நினைப்பு  ஈசலாய்த் தோன்றும் பல் எண்ணங்களைத் தடுக்கிறது . எனவே உன் திருவடியை என் த்யானத்தில் காட்டிடு.



37. எந்தன் பிரிய எண்ணம் (சின்னஞ் சிறிய வண்ணப் பறவை)


ஆ ..
எந்தன்-பிரிய எண்ணம்-பிரிய என்னத்தைச்-சொல்வதம்மா

எந்தன்-பிரிய எண்ணம்-பிரிய என்னத்தைச்-சொல்வதம்மா
அந்த எண்ணங்கள்-ஓட என்னத்தைக் கொண்டு என்னத்தைக் காண்பதம்மா
(2)
எந்தன்-பிரிய எண்ணம்-பிரிய என்னத்தைச் சொல்வதம்மா
(MUSIC)
உலகம்-தெரிவதில்லை..உடலும்-தெரிவதில்லை
ஒவ்வொரு-நாளும் த்யானம்-கொள்ள ஒன்றும் தெரிவதில்லை
ஒன்றும் தெரிவதில்லை -
ஒவ்வொரு-நாளும் த்யானம்-கொள்ள ஒன்றும் தெரிவதில்லை
உலகம் தெரிவதில்லை .. உடலும் தெரிவதில்லை
ஒன்றும் தெரிவதில்லை (2)

மனதினிலே-போச்சு எண்ணங்கள்-ஓடி… ஆ ..
மனதினிலே-போச்சு எண்ணங்கள்-ஓடி
அந்த நிலையினில்-நான் வாடினேன் பயத்தில்- தேடி
பயத்தினிலே வாடினேன் நானும் தேடி
எந்தன்-பிரிய எண்ணம்-பிரிய என்னத்தைச் சொல்வதம்மா
அந்த எண்ணங்கள் ஓட என்னத்தைக் கொண்டு என்னத்தைக் காண்பதம்மா
எந்தன்-பிரிய எண்ணம்-பிரிய என்னத்தைச் சொல்வதம்மா
(MUSIC)
கூச்சல் ஓய்ந்திருக்கும் (2)
ஓசை-தந்த எண்ணங்களின் ஒலி-மறைந்திருக்கும்
கூச்சல் ஓய்ந்திருக்கும்
ஓசை-தந்த எண்ணங்களின் ஒலி-மறைந்திருக்கும்
கூச்சல் ஓய்ந்திருக்கும்

மனதினிலேதோன்றும் காட்சிகள் தேடி (2)
எண்ண-எண்ணமில்லை போனதே-சென்று ஓடி
எண்ணமில்லை போனதே-சென்று ஓடி

எந்தன்-பிரிய எண்ணம்-பிரிய என்னத்தைச் சொல்வதம்மா
அந்த எண்ணங்கள் ஓட என்னத்தைக் கொண்டு என்னத்தைக் காண்பதம்மா
எந்தன்-பிரிய எண்ணம்-பிரிய என்னத்தைச் சொல்வதம்மா
ஆ .. ஆ & 
(SWARAM)
எந்தன்-பிரிய எண்ணம்-பிரிய என்னத்தைச் சொல்வதம்மா
அந்த எண்ணங்கள் ஓட என்னத்தைக் கொண்டு என்னத்தைக் காண்பதம்மா

எந்தன்-பிரிய எண்ணம்-பிரிய என்னத்தைச் சொல்வதம்மா



Tuesday, September 27, 2016

36 உடலுக்குள்-உணர்வே (மலருக்குத் தென்றல் பகையானால்)



விருத்தம்
வேறெதுமே வழியிலையே
வளர்ந்து வரும் கலியினிலே
உழன்றிடுவோர்  வாழ்வினிலே
 யோகமன்றி வேறிலையே
வேறெதுமே வழியிலையே
_______________

உடலுக்குள்-உணர்வே உன்-ஆன்மா-அதைக் கண்டிடு-யோகத்தின் துணை-கொண்டு
(1+SM+1)
* உலகத்தில்-தேடும் ஒரு-மானாய்-நீ வாழ்வதனாலே பயன்-ஏது
உடலுக்குள்-உணர்வே உன்-ஆன்மா அதைக் கண்டிடு-யோகத்தின் துணை-கொண்டு
(MUSIC)
உடலுக்குச் சுகமுன் நினைப்பானால் பின் முதுமையால்-பெரும் சோகம்-உண்டு
(2)
உடலைக்-க..டந்தே நீ-போ..னால்-உன்னை -
யாரென அறிந்திடும் வழி-உண்டு
உணர்வுக்குள்-த்யானம் தனில்-போனால் அதில் கிடைப்பதைக்  கூற மொழி-ஏது
உடலுக்குள்-உணர்வே உன்-ஆன்மா அதைக் கண்டிடு-யோகத்தின் துணை-கொண்டு
(MUSIC)
உடல்-தனை விடுத்து நீ-போனால் அங்கும் யோகத்தினாலே உதவி-உண்டு
யோகத்தை-முடித்து நீ-போனால் அந்த யோகத்தினால்-மேல் பதவி-உண்டு
உடலுக்குள்-நீயே ஒரு-ஆளாய்ப்-பின்பு புகுந்திடும் நிலை-என்றும் கிடையாது
உடலுக்குள்-உணர்வே உன்-ஆன்மா அதைக் கண்டிடு-யோகத்தின் துணை-கொண்டு
(MUSIC)
கண்ணுக்குப்-பார்வை ஒளி-ஆனால் அது-குருடாய் மாறிட இருள்-உண்டு
உள்ளுக்குள்-யோகம் தனில்-போனால் அந்த-யோகியின் வாழ்வில் இருள்-ஏது 
(Short Music)
 உடலுக்குள்-உணர்வே உன்-ஆன்மா-அதைக் கண்டிடு-யோகத்தின் துணை-கொண்டு
உலகத்தில்-தேடும் ஒரு-மானாய்-நீ வாழ்வதனாலே பயன்-ஏது 
உடலுக்குள்-உணர்வே உன்-ஆன்மா அதைக் கண்டிடு-யோகத்தின் துணை-கொண்டு
(BOTH)

*கஸ்தூரி மான் தன்னுள்ளிருந்து மணம் வருகிறது என்று தெரியாமல் அதை வெளியே உலகத்தில் தேடும்.



32. இரவு பகல் த்யானம் (பரமசிவன் கழுத்திலிருந்து)



 

இரவு-பகல் த்யானம்-என்று தூக்கம்-கொள்வது அதுதான் யோகமா
என்று கேட்டுக்-கேட்டுக் கேலி-செய்தாய் அம்மா-ந்யாயமே
பதிலைக் கேட்டிடு அதில் தர்க்கம் விட்டிடு
(MUSIC)
உயர்ந்த-எதையும் ரசிக்கும்-பொழுது கண்கள்-என்றும் மூடும்
உன் நினைவு-கீழே இறங்கி-விட்டால் இமைகள்-மூட மறுக்கும்
(2)
அறியாதார் சொல்வாரே அதைத்-தூக்கம் என்று
த்யானம்-கொள்ள விழிப்பு-வரும் என்றே சொல்லுது
பதில் கீதை-சொல்லுது அது கண்ணன்-சொன்னது
இரவு-பகல் த்யானம்-என்று தூக்கம்-கொள்வது அதுதான் யோகமா
என்று கேட்டுக்-கேட்டுக் கேலி-செய்தாய் அம்மா-ந்யாயமே
பதிலைக் கேட்டிடு அதில் தர்க்கம் விட்டிடு
(MUSIC)
சண்டை-போட வக்கிரங்கள் மட்டும்-உன்னில் தோன்றும்
அந்த நிலையில்-உனக்குத் த்யானம்-என்றால் தூக்கம்-போலத் தோன்றும்
உனைப்போலே அறியாமல் பல-நானும் கேட்டேன்
உயர்ந்தோர்கள்  பொறையோடு எனக்குச் சொன்னது
அது பெருமை-கொண்டது பதில் நன்றே தந்தது
(MUSIC)
நீயும்-நானும் சேர்ந்திருந்தோம் இறைவனோடு-கூடே
யார் கண்-விழுந்து பிரிந்து-விட்டோம் அறியவில்லை-நாமே
இறையோனும் நமைப்-பார்த்துக் கேலி செய்தல்-போல
ஓர்-நொடியில் நமைப்-பிணைத்தான் தனி-உடலோடு
அதில் *தூக்கம்-வந்தது அது-இன்னும் தொடருது
இரவு-பகல் த்யானம்-என்று தூக்கம்-கொள்வது அதுதான் யோகமா
என்று கேட்டுக்-கேட்டுக் கேலி-செய்தாய் அம்மா-ந்யாயமே
பதிலைக் கேட்டிடு அதில் யோகம் பூண்டிடு


*தூக்கம்=அறியாமை


FIRST PAGE