ENGLISH
21. தீவ்ர ஸம்வேகானாமா ஸன்ன : ||
சாதனை
பயன் கிடைக்கத் தீவிரமான முனைப்புடன் கூடிய முயற்சி தேவை .
மனது அலைபாயும் தன்மையது என்பதாலும் நம்முடைய பூர்வ ஜென்ம வாசனையாலும் இது மிகக் கடினமாகிறது.
என்றாலும் இறைவனின் அருளை வேண்டி அழுது திரும்பத் திரும்ப, அலை பாயும் மனதை ஆத்ம விசார லட்சியத்தில் செலுத்த வேண்டும்.
*அஞ்சுநெறி செஞ்சதில்லே அஞ்செழுத்து சொன்னதில்லே
அன்புநெறி நெஞ்சத்தில்லே பஞ்சுத்திரி போலதில்லே
முன்னின்குறி கொஞ்சத்திலே மிச்சமின்றி போவதில்லே
என்னின்அறி யாமையாலே வந்தவலி ஓயவில்லே
சொந்தமென நெஞ்சத்திலே கொண்டதனம் நிற்பதாலே
அந்தஅரி நெஞ்சத்திலே நிற்கஇடம் சற்றுமில்லே
இந்தஎண்ணம் வந்தபின்னும் எந்தன்மனம் மாறவில்லே
எந்தயுகம் ஓயும்ஐயோ எந்தனுக்கு மாயத்தொல்லை
* அஞ்சு நெறி = பஞ்ச சம்ஸ்காரங்கள் என வைணவத்தில் அழைக்கப்படும்
செந்நெறிகள் : 1.சங்கு சக்ரம் தரித்தல், 2.நாமம் உடலணிதல், 3.தாச நாமம்
ஒன்றை ஏற்றல் , 4.திருமால் வடிவங்களில் ஒன்றை பூசித்து வருதல்,
5.வைணவ திரு மந்திரத்தை உபதேசித்தல்.
அஞ்செழுத்து = நமசிவாய
பஞ்சுத்திரி போலதில்லே = பஞ்சுத் திரி போல நெஞ்சம் இல்லை. பக்தனுடைய நெஞ்சு பஞ்சுத்திரி போலிருக்க வேண்டும். பஞ்சு போல்
மென்மையுடனும், திரி போல் தீபத்தைத் தாங்கி ஒளிவிடும் திறத்துடனும்
இருக்க வேண்டும்.பஞ்சு தீயில் எரிந்து போகும். திரி தீபமாய் ஒளி விடும்.
முன்னின்குறி = முன்வினை வடு (குறி = வடு)
இஷ்ட தெய்வத்தின் நாம ஜெபத்தையும் ரூப த்யானத்தையும் கைக்கொண்டு ,அலை பாயும் மனதை நாமத்தையும் ரூபத்தையும் துணை கொண்டு அடக்கி ஒரு முனைப் படுத்த முடியும்.
உலக வாழ்வு மாயச் சேறு
துன்பக் கடலில் சேர்க்கும் ஆறு
இறைவன் நாமம் கூறித் தேறு
ஓடிப் போகும் வினைகள் பாரு
ராம-ராம ராம-என்று சொல்லப்-போகும் பாபமே
வேகம்-கொண்டு அமைந்திடாமல் கணமும்-அலையும் நெஞ்சிலே
மோகமென்னும் ரோகம்-போக்கி அமர-வைக்கும் நாமமே
ஸ்நேக-பாவம் கொண்டு-சொல்ல காட்டும்-அவனின் ரூபமே
செயல்துறக்கும் தேக்கத்திலே ஆவதில்லை வளர்ச்சியே
அயர்நதிருக்கும் தூக்கத்திலே தெரிவதில்லை காட்சியே
புயலெடுத்த வேகம்கொண்டு புயல்கடந்த அமைதிசென்று
செயல்படுத்து யோகமின்று இறைகிடைக்கும் நெஞ்சில் நின்று
tivra sanveganam asannah ||21||
तीव्रसंवेगानामासन्नः ॥२१॥
tīvra-saṁvegānām-āsannaḥ ||21||
The goal is achieved through intensive practice. ||21||
tivra (तीव्र, tīvra) = (iic.) intensive
sanvegana (संवेगान, saṁvegāna) = (g. pl. m./acc. pl. m.) practice; exercise; intensity
asannah (आसन्नः, āsannaḥ) = (nom. sg. m. from asanna (आसन्न, āsanna)) near; nearness
http://www.ashtangayoga.info/philosophy/yoga-sutra-patanjali/chapter-1/item/tivra-sanveganam-asannah-21/
22. ம்ருதுமத்யாதி மாத்ரத்வாத்
ததோ ஸபி விசேஷ : ||
சாதனையின் தீவிரம்
எரியும்தீயின் உக்கிரம் காட்டைக்கணத்தில் அழிந்திடும்
திரியில் தீபமாகிட இரவுமுழுதும் எறித்திடும்
தீயின்வேகம் போலவே யோகம்கூடும் வேகமும்
புரியும்முனைப்பைப் பொருத்ததாய் அமைந்திருத்த லாயிடும்
இதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க
मृदुमध्याधिमात्रत्वात्ततोऽपि विशेषः ॥२२॥
mṛdu-madhya-adhimātratvāt-tato'pi viśeṣaḥ ||22||
This practice can be light, moderate or intensive. ||22||
mridum (मृदुम्, mṛdum) = (acc. sg. m. from mridu (मृदु, mṛdu)) light; gentle
madhya (मध्य, madhya) = (iic.) moderate
adhimatra (अधिमात्र, adhimātra) = (m./f./n.) intensive
vat (वात्, vāt) = or
tatah (ततः, tataḥ) = (adv.) this (this practice)
api (अपि, api) = (conj./prep.) also; even
visheshah (विशेषः, viśeṣaḥ) = (nom. sg. m. - vishesha (विशेष, viśeṣa)) level; differentiation
Thanks to:
http://www.ashtangayoga.info/philosophy/yoga-sutra-patanjali/chapter-1/item/mridu-madhya-adhimatratvat-tato-visheshah/
------------------------------------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------------------------------
22. ம்ருதுமத்யாதி மாத்ரத்வாத்
ததோ ஸபி விசேஷ : ||
சாதனையின் தீவிரம்
சாதனையின் தீவிரத்திற்கேற்ப பயன் கிடைக்கிறது. ஆழ்ந்த தீவிரம் விரைந்தும் , மிதமான தீவரம் சிறிது தாமதித்தும் , குறைந்த தீவிரம் தாமதித்தும் பலன் தரும்.
ஆனாலும் மேற்கூறியபடி, தீவிரமும் முனைப்பும் குறையும் போதெல்லாம் ,இறைவனின் அருளை வேண்டி அழுது திரும்பத் திரும்ப, அலை பாயும் மனதை ஆத்ம விசார லட்சியத்தில் செலுத்த வேண்டும்.
"என்னிடம் சரணடைவதற்கு ஏற்றாற்போலவே
நான் பலனளிக்கிறேன்-கீதை 4:11"
குளம் நிறைந்த நீரிலே
முகந்த அளவு குடமுமே
இறைவன் கருணைக் கடலிலே
மனிதன் கொள்ளும் கருணையும்
இதயத் தூய்மை அளவிலே
வாய்மை தன்னின் அளவிலே
இதயத் தூய்மை பெருக்கிடு
மனதுக் குடத்தைக் கடலுமாய்
தூய்மை கொண்டு நிரப்பிட
அன்பு சேவை செய்திடு
பிறகு நினைந்து வேண்டிட
விளங்கும் மனமும் கடலென
இறைவன் கருணை நிரம்பிட
ஆகும் வெண்மை நிறம் பட
எரியும்தீயின் உக்கிரம் காட்டைக்கணத்தில் அழிந்திடும்
திரியில் தீபமாகிட இரவுமுழுதும் எறித்திடும்
தீயின்வேகம் போலவே யோகம்கூடும் வேகமும்
புரியும்முனைப்பைப் பொருத்ததாய் அமைந்திருத்த லாயிடும்
இதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க
मृदुमध्याधिमात्रत्वात्ततोऽपि विशेषः ॥२२॥
mṛdu-madhya-adhimātratvāt-tato'pi viśeṣaḥ ||22||
This practice can be light, moderate or intensive. ||22||
mridum (मृदुम्, mṛdum) = (acc. sg. m. from mridu (मृदु, mṛdu)) light; gentle
madhya (मध्य, madhya) = (iic.) moderate
adhimatra (अधिमात्र, adhimātra) = (m./f./n.) intensive
vat (वात्, vāt) = or
tatah (ततः, tataḥ) = (adv.) this (this practice)
api (अपि, api) = (conj./prep.) also; even
visheshah (विशेषः, viśeṣaḥ) = (nom. sg. m. - vishesha (विशेष, viśeṣa)) level; differentiation
Thanks to:
http://www.ashtangayoga.info/philosophy/yoga-sutra-patanjali/chapter-1/item/mridu-madhya-adhimatratvat-tato-visheshah/
------------------------------------------------------------------------------------------------------------
23. ஈஸ்வர ப்ரணிதானாத் வா ||
சரணாகதி
கையில்வெண்ணை கொண்டுநீயும் நெய்க்கலைதல் போன்றதே..!
சரணாகதி
சாதனையின் வெற்றிக்கு சாதகனின் முயற்சி மட்டுமின்றி இறைவனைத் துணை கொள்ளும் சரணாகதியும் தேவை. இது தனித்த முயற்சியின் ஆணவத்தை களைந்திட்டு விரைந்து பலனளிக்கும்.
நாரத பக்தி சூத்திரத்தில் இறைவனைத் தவிர வேறொன்றும் வேண்டா நிலையே பக்தி என்று கூறப்படுகிறது.
அந்த நிலையை அடைய நாம் செய்யும் முயற்சியில் முன்னேற அதே இறைவனிடம் சென்றே முறையிடுதலும் அழுது வேண்டுதலும் நல்ல பலனை அளிக்கும்.
அமுதக் கடல்கடைந்து *வாருணைத் துளிசுவைத்து
சுமுகத்தின் சுகிர்தநிலை சிரச்சுடரால் தான்பெற்று
எழுத்தில் வடிக்கவொண்ணா *நறைகமழுன் பதம்பிடித்து
சுழுமுனையின் எழுவிசையை முயன்றெழுப்பும் சாதகத்தை
அணுவளவும் பழகாத நாயேனாம் கீழோனென்னை
*ஏழீசா இறையோனே மறவாதே மறுக்காதே
ஊழாலே சுழன்றழுகும் ஊனாலே உழல்கின்ற
கழுபிறப்பைப் போக்குஉன் அருளாலே திறப்பாயே
பாழ்மனதின் இருட்கதவை பொருளாலே கிடைக்காத
விழுப்பொருளே விரைசிவமே இமயமுறை விரிசடையே
அழுதிடவும் நீர்சுரக்கா கல்மனத்தின் மானிடன்நான்
தொழுதிடவும் அறிந்திலனே அருளிடுமா மாணிக்கமே
*சுமுக சுகிர்தநிலை = பேரமைதி பெருநிலை
*வாருணை = ஆனந்தக் கள்
*நறைகமழ் = இன்பம் அளிக்கும்
*ஏழீசா = ஏழாம் எண்ணுக்குரியோனே / எழுலகை ஆள்வோனே / ஏழு
நாடிகளையும் ஆள்வோனே
தன்னுள்ளுறையும் அவனைக்காண அவனையேநீ சரணடை
உன்னில்தோன்றும் அவனின்நாமம் தோற்றம்கொள்ளல் விட்டுநீ
பின்னில் வேறுதேடலும் தன்னில்செயலைப் புரிதலும்
இதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க
ईश्वरप्रणिधानाद्वा ॥२३॥
īśvara-praṇidhānād-vā ||23||
The goal can also be attained via submission to the concept of an ideal being (ishvara). ||24||
īśvara-praṇidhānād-vā ||23||
The goal can also be attained via submission to the concept of an ideal being (ishvara). ||24||
ishvara (ईश्वर, īśvara) = (iic.) God; a personal God; the concept of an ideal being
pranidhana (प्रनिधान, pranidhāna) = (abl. sg. n.) devotion
va (वा, vā) = (conj.) or; also; here: the goal of yoga can also be reached through
Thanks to:pranidhana (प्रनिधान, pranidhāna) = (abl. sg. n.) devotion
va (वा, vā) = (conj.) or; also; here: the goal of yoga can also be reached through
------------------------------------------------------------------------------------------------------------
24 க்லேச கர்ம விபாக சயைர பராம்ருஷ்ட்ட
புருஷ விசேஷ ஈஸ்வர :
இறையின் மாண்பு
klesha (क्लेश, kleśa) = the spiritual aspirant’s obstacles; suffering; cause of suffering
karma (कर्म, karma) = actions and effects
vipaka (विपाक, vipāka) = impact of actions; consequences of actions
ashayaih (आशयैः, āśayaiḥ) = the residual elements of an action, i.e. recollections, as well as the mainsprings of new desires.
aparamrishtah (अपरामृष्टः, aparāmṛṣṭaḥ) = unaffected
purusha (पुरुष, puruṣa) = the immutable self; drashtu; here: the individual
vishesha (विशेष, viśeṣa) = special; unusual
ishvarah (ईश्वरः, īśvaraḥ) = (nom. ishvara (ईश्वर, īśvara)) personal God; concept of an ideal being
------------------------------------------------------------------------------------------------------------
புருஷ விசேஷ ஈஸ்வர :
இறையின் மாண்பு
இன்ப துன்பங்கள், செயல்கள், செயல்களின் பயன்களால் தளைப் படுதல் ஆகியவை அற்றவன் இறைவன்
செயலைச் செய்யும் தேவையும் செயலிற்கான பயன்களும்
அயர்வுராது அலைமனதால் மனிதன்கொள்ளும் துன்பமும்
அடைந்திடாத பரம்பொருள் அனைத்தையும் கடந்திருந்த
னைத்திலும் உளேஇருந்து யர்ந்ததான கடவுளாம்..!
இது வரையில் சாதனையைப் பற்றி கூறிவந்த பதஞ்சலி முனிவர் திடீரென்று இறைவனின் மாண்பு பற்றி கூறுகிறார்.
இறைவன் நிலையை அடைவதே யோகா சாதனையின் நோக்கம். அந்த இறைவன் எப்பேர்பட்டவன் என்று அறிந்தால் தானே அந்த நிலைக்கு நம்மைத் தயார் படுத்திக் கொள்ள முடியும். அதனால் தானோ என்னவோ பதஞ்சலி முனிவர் இறைவனின் மாண்பு பற்றி கூறுகிறார்.
இதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க
क्लेश कर्म विपाकाशयैःपरामृष्टः पुरुषविशेष ईश्वरः ॥२४॥
kleśa karma vipāka-āśayaiḥ-aparāmṛṣṭaḥ puruṣa-viśeṣa īśvaraḥ ||24||
क्लेश कर्म विपाकाशयैःपरामृष्टः पुरुषविशेष ईश्वरः ॥२४॥
kleśa karma vipāka-āśayaiḥ-aparāmṛṣṭaḥ puruṣa-viśeṣa īśvaraḥ ||24||
Ishavara is a special being that is unaffected by the obstacles of the spiritual aspirant (klesha), specific actions and consequences (karma), or recollections or desires. ||24||
klesha (क्लेश, kleśa) = the spiritual aspirant’s obstacles; suffering; cause of suffering
karma (कर्म, karma) = actions and effects
vipaka (विपाक, vipāka) = impact of actions; consequences of actions
ashayaih (आशयैः, āśayaiḥ) = the residual elements of an action, i.e. recollections, as well as the mainsprings of new desires.
aparamrishtah (अपरामृष्टः, aparāmṛṣṭaḥ) = unaffected
purusha (पुरुष, puruṣa) = the immutable self; drashtu; here: the individual
vishesha (विशेष, viśeṣa) = special; unusual
ishvarah (ईश्वरः, īśvaraḥ) = (nom. ishvara (ईश्वर, īśvara)) personal God; concept of an ideal being
Thanks to:
http://www.ashtangayoga.info/philosophy/yoga-sutra-patanjali/chapter-1/item/klesha-karma-vipaka-ashayaih-aparamrishtah/------------------------------------------------------------------------------------------------------------
25. தத்ர நிரதிசயம்
சர்வஜ்ஞத்வ பீஜம் ||
ஞான முதல்வனான இறைவன்
ஞான முதல்வனான இறைவன்
அனைத்துமறிந்த ஞான விதைதான் இறைவன்
கண்டமாயிருப்பவன் அகண்டமாயிருப்பவன்
அணுவுக்குள்ளே அணுவவன் ஆகாயமாய் விரிந்தவன்
அனைத்தையும் அறிந்திருக்கு மறிவதை விதைப்பவன்
இதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க
விதைத்திடும்வி தைகள்தன்னில் விதையுமான ஆண்டவன்..!
तत्र निरतिशयं सर्वज्ञबीजम् ॥२५॥ tatra niratiśayaṁ sarvajña-bījam ||25||
Ishavara is unmatched and is the source of all knowledge. ||25||
tatra (तत्र, tatra) = (adv.) there; in ishvara,
nir (निर्, nir) = (prep.) not
atishayam (अतिशयम्, atiśayam) = (acc. sg. m. from atishaya (अतिशय, atiśaya)) superior; sublime
nir atishayam (निरतिशयम्, nir-atiśayam) = (acc. sg. m. from nir atishaya (निरतिशय, nir-atiśaya)) the highest; the unmatched
sarvajna (सर्वज्ञ, sarvajña) = (iic.) all knowledge
bijam (बीजम्, bījam) = (acc. sg. n./nom. sg. n. from bija (बीज, bīja)) seed; root; origin; provenance
Thanks to:
http://www.ashtangayoga.info/philosophy/yoga-sutra-patanjali/chapter-1/item/tatra-niratishayam-sarvajna-bijam-25/------------------------------------------------------------------------------------------------------------
26. ஸ பூர்வேஷாமாபி குரு :
இறையே குரு
காலம் கடந்து அனைத்திலும் பரவி நிற்கும் இறைவனே உயர்ந்த குரு
நம்முகத்தைக் காட்டநமக்கு நம்முகமே வேண்டல்போல்
நம்மகத்தைக் காட்ட நமக்குத் தம்மைக்கண்டார் வேண்டுமே
தம்முன்வந்து தம்மைத்தந்து யாவுமான தம்பிரான்
தம்பதத்தில் தன்னைபெய்யத் தானருளவான் எம்பிரான்
விவேகானந்தருக்கு ராமகிருஷ்ணர் கிடைத்தது போல் எனக்கு ஒரு குரு கிடைக்கவில்லை என்று ஆதங்கப் பட வேண்டாம். சாதகனின் முதிர்ச்சி நிலைக்கேற்ப அறிவான இறைவன் குருவாகவும் இருந்து நம்மைக் கடைத்தேற்றுவான். இதுவே தன்னை அறிந்த ஞானியரின் வாக்கு .
இதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்கस एष पूर्वेषामपिगुरुः कालेनानवच्छेदात् ॥२६॥
sa eṣa pūrveṣām-api-guruḥ kālena-anavacchedāt ||26||
Ishvara is each and every one, and is even the teacher of the first ones; he is unaffected by time ||26||
sa (स, sa) = (nom. sg. m.) he; each
esha (एष, eṣa) = (nom. sg. m.) this (one)
purvesham (पूर्वेषाम्, pūrveṣām) = (g. pl. m./g. pl. n. from- purva (पूर्व, pūrva)) from the previous ones
api (अपि, api) = (conj./prep.) also; even
guruh (गुरुः, guruḥ) = (nom. sg. m. from guru (गुरु, guru)) teacher; master; guru
kala (काल, kāla) = (iic.) time
anavachchhedat (अनवच्छेदात्, anavacchedāt) (abl. sg. m. from anavachchheda (अनवच्छेद, anavaccheda))= limitless; unchanged
Thanks to:
http://www.ashtangayoga.info/philosophy/yoga-sutra-patanjali/chapter-1/item/esha-purvesham-guruh-kalena-anavachchhedat/
------------------------------------------------------------------------------------------------------------
27. தஸ்ய வாசக பிரணவ : ||
ஓம் என்னும் பிரணவ ரூப நாயகன்
இறைவன் ஓம் என்னும் தூயப் பிரணவ மந்திரத்தால் அறியப்படுபவன்
ஏழுலகும் கொண்டுநின்ற அண்டம்செய்த தாவிலே
மூழுலகைக் கூர்மமாகக் காத்துநின்றாய் உ விலே
ஊழிலுயிர்கள் ஓய்வுறவே மறைத்துக் கொண்டாய் மாவிலே
ஊழிலுயிர்கள் ஓய்வுறவே மறைத்துக் கொண்டாய் மாவிலே
ஏழ்பிறப்பு களைவதுநீ மூன்றும் கலந்த ஓமிலே ..!
இதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க
तस्य वाचकः प्रणवः ॥२७॥
tasya vācakaḥ praṇavaḥ ||27||
OM is a symbol for ishvara. ||27||
tasya (तस्य, tasya) = (g. sg. n./g. sg. m.) whose; being (i.e. ishvaras)
vachakah (वाचकः, vācakaḥ) = (nom. sg. m. from vachaka (वाचक, vācaka)) verbal symbol; word
pranavah (प्रणवः, praṇavaḥ) = (nom. sg. m. from pranava (प्रणव, praṇava)) a symbol that always retains
its purity; the OM symbol; the OM mantra
Thanks to:
http://www.ashtangayoga.info/philosophy/yoga-sutra-patanjali/chapter-1/item/tasya-vachakah-pranavah-27/
------------------------------------------------------------------------------------------------------------
28. தஜ்ஜப: ததர்த்தபாவனம் ||
இதை மையமாய்க் கொண்ட ஒரு பாடலுக்கு இங்கே கிளிக் செய்க
तज्जपः तदर्थभावनम् ॥२८॥tasya vācakaḥ praṇavaḥ ||27||
OM is a symbol for ishvara. ||27||
tasya (तस्य, tasya) = (g. sg. n./g. sg. m.) whose; being (i.e. ishvaras)
vachakah (वाचकः, vācakaḥ) = (nom. sg. m. from vachaka (वाचक, vācaka)) verbal symbol; word
pranavah (प्रणवः, praṇavaḥ) = (nom. sg. m. from pranava (प्रणव, praṇava)) a symbol that always retains
its purity; the OM symbol; the OM mantra
Thanks to:
http://www.ashtangayoga.info/philosophy/yoga-sutra-patanjali/chapter-1/item/tasya-vachakah-pranavah-27/
------------------------------------------------------------------------------------------------------------
28. தஜ்ஜப: ததர்த்தபாவனம் ||
ஒன்றி ஓதற்குரிய ஓம்
ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை அதன் பொருளுணர்ந்து ஒன்றி ஓத வேண்டும்
திருவேறும் படியாகத் தினந்தோறும் உருவேற்றி
உருக்கோடும் உணர்வோடு உருவாக்கும் முனைப்போடு
தானேற்ற கருகாக்கும் தாய்போலக் கருத்தோடு
ப்ரணவமதைச் செபித்திடுவாய் பரம்பொருளின் நினைவோடு..!உருக்கோடும் உணர்வோடு உருவாக்கும் முனைப்போடு
தானேற்ற கருகாக்கும் தாய்போலக் கருத்தோடு
எந்த ஒரு வரையறையும் இன்றி எல்லாமுமாய் இருக்கும் இறைவனைப் பற்றிய சரியான உணர்வு நமக்கு ஏற்படும் விதமாக பதஞ்சலி இறைவனின் மாண்புகளை சிறிது சிறிதாக விரித்துக் கூறி அது எப்படி சாதனைக்கு உபயோகப் படும் என்பதையும் உணர்த்துகிறார்.
taj-japaḥ tad-artha-bhāvanam ||28||
Repetition of OM (with this meaning) leads to contemplation. ||28||
tat (तत्, tat) = that; whose; being
japa (जप, japa) = repetition
tat (तत्, tat) = whose; being
artha (अर्थ, artha) = meaning
bhavanam (भावनम्, bhāvanam) = (acc. from bhavana (भावन, bhāvana)) feeling; devotion; contemplation
Thanks to:
http://www.ashtangayoga.info/philosophy/yoga-sutra-patanjali/chapter-1/item/tasya-vachakah-pranavah-27/
japa (जप, japa) = repetition
tat (तत्, tat) = whose; being
artha (अर्थ, artha) = meaning
bhavanam (भावनम्, bhāvanam) = (acc. from bhavana (भावन, bhāvana)) feeling; devotion; contemplation
Thanks to:
http://www.ashtangayoga.info/philosophy/yoga-sutra-patanjali/chapter-1/item/tasya-vachakah-pranavah-27/
------------------------------------------------------------------------------------------------------------
29. தத: ப்ரத்யக:
சேதனாதிகமோ சப்யந்தராயா பாவச்ச
ஓம்கார ஜபத்தின் பலன்
ஓம்கார ஜபத்தினால் வாழ்வில் தோன்றும் எல்லா தடைகளும் நீங்குகின்றன. அதே சமயம் தன்னைப் பற்றிய மெய்யறிவும் உண்டாகிறது.
எறும்புகாதில் புகுந்துபெரிய கரியும் தரையில் சாய்க்குமே
உருவிற்சிறிய அணுவின்சக்தி மலையைக்கூடப் பிளக்குமே
இரண்டெழுத்தா யாயினுமோம் யோகத் தடைகள் போக்குமே
திரண்டெழும்பும் அறிவினாலே மெய்யுணர்வும் கூடுமே..!
ततः प्रत्यक्चेतनाधिगमोऽप्यन्तरायाभवश्च ॥२९॥
tataḥ pratyak-cetana-adhigamo-'py-antarāya-abhavaś-ca ||29||
Through this practice, the immutable self is revealed and all obstacles (antaraya) are removed. ||29||
tatah (ततः, tataḥ) = (nom. sg. m. from tata (तत, tata)) from this; from this practice
pratyak (प्रत्यक्, pratyak) = (nom. sg. n./acc. sg. n. from pratyach (प्रत्यच्, pratyac)) the inner; the inward
chetana (चेतना, cetanā) = (nom. sg. f. from chetana (चेतन, cetana)) the true self; drashtu
adhi (अधि, adhi) = (prep)
gamh (गम्ः, gamḥ) = (inj. ac. sg. from gam (गम्, gam)) become manifest; reveal; attain
api (अपि, api) = (conj./prep.) also
antarayah (अन्तरायः, antarāyaḥ) = (nom. pl. m. from antaraya (अन्तराय, antarāya)) obstacle
abhavah (अभावः, abhāvaḥ) = (nom. sg. m. from abhava (अभव, abhava)) absence; disappearance; elimination
cha (च, ca) = (conj.) and
pratyak (प्रत्यक्, pratyak) = (nom. sg. n./acc. sg. n. from pratyach (प्रत्यच्, pratyac)) the inner; the inward
chetana (चेतना, cetanā) = (nom. sg. f. from chetana (चेतन, cetana)) the true self; drashtu
adhi (अधि, adhi) = (prep)
gamh (गम्ः, gamḥ) = (inj. ac. sg. from gam (गम्, gam)) become manifest; reveal; attain
api (अपि, api) = (conj./prep.) also
antarayah (अन्तरायः, antarāyaḥ) = (nom. pl. m. from antaraya (अन्तराय, antarāya)) obstacle
abhavah (अभावः, abhāvaḥ) = (nom. sg. m. from abhava (अभव, abhava)) absence; disappearance; elimination
cha (च, ca) = (conj.) and
Thanks to:
------------------------------------------------------------------------------------------------------------
30. ஸம்சய ப்ரமாதாலஸ்யாவிரதி
ப்ராந்திதர்சனாலப்த
பூமிகத்வானவஸ்திதத்வானி
சித்தவிக்ஷேபாஸ்தேஸந்தராயா :
இறை மாண்பையும் அதைப் பற்றிக்கொண்டு நாம் எப்படி சாதனை செய்யவேண்டும் என்று சொல்லி நமக்கு ஒரு பிடிப்பையும் படிப்பையும் தந்து விட்டு பிறகு மீண்டும் சாதனைக்கு வந்து விடுகிறார் பதஞ்சலியார்.மனதைப் பற்றி கூற ஆரம்பித்து விடுகிறார்.
மனதின் சீர்குலைவால் ஏற்படும் தடைகள்
நோய், மந்த புத்தி, சந்தேகம், கவனக்குறைவு, சோம்பல், உணர்ச்சி வயப்படுதல்,தவறான உணர்வு, எதிலும் உறுதி இன்மை, சாண் ஏற முழம் சறுக்கல்
இவைதான் மனதின் சீர்குலைவால் ஏற்படும் தடைகளாகும்
மோகமுற்ற மெய்யில் நோயாய், சோம்பலுமாய் வருகுது
கவனமின்றி சாணுமேற முழமாய்க்கூடச் சறுக்குது
மந்தபுத்தி யாலேமனதில் சந்தேகந்தான் உறுத்துது
சித்தத்திலே எதிலும்கொண்ட உறுதியும்தான் தளருது
உணர்வின்வயத்தில் படுவதாலே தெளிவுமின்றி தவறுது
ஆனஇந்த யாவும்யோகத் தடைகளாக வருவது..!
இவற்றை ஒவ்வொன்றாக சுருக்கமாகக் காண்போம்.
நோய் : உடல் நலத்தின் பாற்பட்டது என்றாலும் நோய் மனத்தையும் பாதிக்கிறது. நோயுற்ற மனம் தியானம் கொள்வது எப்படி. எனவே நாம் உடலைப் பேணுவது மிக அவசியம். இருந்தாலும் இக்காலத்தில் இதற்கு தேவைக்கு அதிகமான முக்கியத்த்வம் கொடுத்து ஆத்ம விசாரத்தைப் பின் தள்ளுமாறு நடக்கின்றது. இதைத் தவிக்கவேண்டும். அது மட்டுமில்லாமல், நம்முடைய தவறு இல்லாமலே நமக்கு வரும் நோய்கள் நம் கர்மா வினை என்னும் நோயைப் போக்க வந்த மருந்தாகவே நாம் கொள்ளவேண்டும்.மனதை இறைவனிடம் செலுத்தவேண்டும் என்று பெரியோர்கள் சொல்கிறார்கள்.
மந்த புத்தி(Dullness) :இந்த தடையை சத்சங்கத்தின் தொடர்பால் வெல்லலாம்.இந்த மந்தத் தன்மை தற்காலிகமாக அவ்வப்போது வந்து செல்லும் தன்மையதாகவும் இருக்கும். சாதகனுடைய தன் முனைப்பு கொண்டு இதை வெல்லவேண்டும்.
சந்தேகம்: இது இரண்டு வகையானது. ஒன்று ஒன்றை அறிய முற்படும்போது ஏற்படுவது. இன்னொன்று நம்பிக்கையின்மையால் தோன்றுவது.
இந்த இரண்டாம் ரகம் தான் இங்கு பேசப்படுகிறது. நம்பிக்கை இல்லாமல் முன்னேற்றம் எதிலும் கிடையாது.
கவனக்குறைவு: இது ஒரு பழக்கம்.இதை நமக்கு ஆர்வமுள்ள ஏதாகிலும் ஒன்றில் கவனம் செலுத்தி முழு மனதோடு அதைச் செய்வதிலோ பழகுவதிலோ வெற்றி கொள்ளலாம்.
சோம்பல் : இதுவும் மந்தத்தன்மை போன்றது. அது தோன்றும்போது நம்முடை முனைப்பையும் உறுதியையும் செலுத்தி விளக்க வேண்டும்.
உணர்ச்சி வயப்படுதல் அல்லது புலன்வயப்படுத்தல் : இதனால் ஏற்படும் தீமைகளை தீவிரமாகச் சிந்தித்து அதன் பிடியிலிருந்து விலகவேண்டும். நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்த விரதங்கள் போன்றவை இந்தத் தடையை விலக்குவதற்கேயாகும்.
எதிலும் உறுதி இன்மை, சறுக்கல்: தனக்கு ஏற்படும் துன்பங்களையும் அதிருஷ்டங்களையும் நிரந்தரமானவை அல்ல என்று மீண்டும் மீண்டும் மனதில் உறுதி செய்துகொள்வதன் மூலம் இந்தத் தடைகளை எதிர்கொண்டு தகர்க்கலாம்.
व्याधि स्त्यान संशय प्रमादालस्याविरति भ्रान्तिदर्शनालब्धभूमिकत्वानवस्थितत्वानि चित्तविक्षेपाः ते अन्तरायाः ॥३०॥
vyādhi styāna saṁśaya pramāda-ālasya-avirati bhrāntidarśana-alabdha-bhūmikatva-anavasthitatvāni citta-vikṣepāḥ te antarāyāḥ ||30||
These obstacles (antaraya) (illness; inertia; doubt; neglect; sloth; desire; blindness; a lack of goals; irresoluteness) obscure that which is immutable in human beings (chitta). ||30||
vyadhi (व्याधि, vyādhi) = illness
styana (स्त्यान, styāna) = apathy; mental laziness; rigidity
sanshaya (संशय, saṁśaya) = doubt; hesitation; indecisiveness
pramada (प्रमाद, pramāda) = carelessness; neglect; indifference
alasya (आलस्य, ālasya) = sloth
avirati (अविरति, avirati) = desire
bhranti (भ्रान्ति, bhrānti) = error
darshana (दर्शन, darśana) = opinion
bhranti darshana (भ्रान्तिदर्शन, bhrānti-darśana) = blindness
bhumi (भूमि, bhūmi) = earth; level
alabdha bhumikatva (अलब्धभूमिकत्व, alabdha-bhūmikatva) = lack of determination; failure to reach a level
anavasthitatvani (अनवस्थितत्वानि, anavasthitatvāni) = inconsistency; irresoluteness
chitta (चित्त, citta) = understanding
antarayah (अन्तरायः, antarāyaḥ) = (nom. from antaraya (अन्तराय, antarāya)) obstacle
styana (स्त्यान, styāna) = apathy; mental laziness; rigidity
sanshaya (संशय, saṁśaya) = doubt; hesitation; indecisiveness
pramada (प्रमाद, pramāda) = carelessness; neglect; indifference
alasya (आलस्य, ālasya) = sloth
avirati (अविरति, avirati) = desire
bhranti (भ्रान्ति, bhrānti) = error
darshana (दर्शन, darśana) = opinion
bhranti darshana (भ्रान्तिदर्शन, bhrānti-darśana) = blindness
bhumi (भूमि, bhūmi) = earth; level
alabdha bhumikatva (अलब्धभूमिकत्व, alabdha-bhūmikatva) = lack of determination; failure to reach a level
anavasthitatvani (अनवस्थितत्वानि, anavasthitatvāni) = inconsistency; irresoluteness
chitta (चित्त, citta) = understanding
vikshepah (विक्षेपः, vikṣepaḥ) = (nom. from vikshepa (विक्षेप, vikṣepa)) dissipation; lack of clarity; uneasiness
te (ते, te) = it; this antarayah (अन्तरायः, antarāyaḥ) = (nom. from antaraya (अन्तराय, antarāya)) obstacle
Thanks to:
------------------------------------------------------------------------------------------------------------
சூத்திரங்கள் 21-30 ல் பேசப்படுவதன் சாரம்
சூத்திரம் 21 - 23 : சாதனை எப்படிச் செய்யவேண்டும் என்பது பற்றி பேசப்படுகிறது.
சூத்திரம் 24 - 29 : இறைவனின் மாண்பு, இறைவன் ஓம்கார வடிவினன் என்று கூறி, ஓம்கார த்யானத்தைப் பற்றியும் கூறப்படுகிறது
சூத்திரம் 30:
இறை மாண்பையும் அதைப் பற்றிக்கொண்டு நாம் எப்படி சாதனை செய்யவேண்டும் என்று சொல்லி நமக்கு ஒரு பிடிப்பையும் படிப்பையும் தந்து விட்டு பிறகு மீண்டும் சாதனைக்கு வந்து விடுகிறார் பதஞ்சலியார்.இந்த சூத்திரத்தில் மனதைப் பற்றி கூற ஆரம்பித்து விடுகிறார்.
மனதின் சீர்குலைவால் ஏற்படும் தடைகள் இங்கு சொல்லப்படுகின்றன.
காஞ்சி மஹான் தெய்வத்தின் குரல் முதல் பகுதியில் யோகி என்ற தலைப்பில் கூறியுள்ளது , சாதகனுக்கு மிகவும் பயன் தரக்கூடியதாகும். கீழ்க் கண்ட லிங்க்கைத் தொடர்ந்து அதைப் படித்து அறிந்து கொள்ளவும்.
https://www.kamakoti.org/tamil/part1kural17.htm
------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment